மகளை புணர்வுக்கு அழைத்த கொலைகார தந்தை- 'சொல்வதெல்லாம் உண்மை'யால் போலிசில் சிக்கினார்

அன்பர்களுக்கு வணக்கம். எனது முந்தைய பதிவில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியினை எவ்வாறு பார்க்க ஆரம்பித்தேன் என்பதினை பற்றி கூறியிருந்தேன். அதில் நான் பார்த்த முதல் எபிசோட் பற்றி கூறியதில் அந்த நிகழ்ச்சி என்னுள் பத்தோடு பதினொன்றாகதான் பதிந்ததை சொல்லவில்லை. ஆனால் அடுத்து நான் பார்த்த எபிசோட் என்னை இந்த நிகழ்ச்சி பற்றி மற்றவர்களுடன் பேச வைத்தது. அதை பற்றி இப்பதிவில் காண்போம்.

இரண்டாவது முறையும் சக பதிவர்கள் மூலமாகத்தான் இந்த எபிசோட் பற்றி தெரிய வந்தது. நிகழ்ச்சி ஆரம்பிக்கும் பொழுது வழமையாக ஒவ்வொருவர் பற்றிய அறிமுகத்துடன் தொடங்கியது. வழக்கம் போல் மேஜர் ஆகாத பெண்ணின் காதல் பிரச்சனையை பற்றித்தான் பேச ஆரம்பித்தார்கள். எனக்கும் உண்மையில் கொஞ்சமாக போரடிக்க துவங்கியது.
ஆனால் சம்பந்த பட்ட பெண் (பார்கவி) பேச துவங்கும் வரைதான். தனது தந்தையும் தாயும் காதலித்து திருமணம் செய்து கொண்டு தனது காதலை எதிர்ப்பது பற்றி குறிப்பிட்டார். நிர்மலா பெரியசாமியும் வயது வரும் வரை காத்திருக்க சொல்லி அறிவுரை கூறவும் தான் விசயம் கொஞ்சம் கொஞ்சமாக வெளி வரத் துவங்கியது.
தனது தந்தை ஒரு வகையான காமக் கொடுரன் என்பதையும் தன்னை மகளென்று பாராமல் செக்ஸ் டார்ச்சர் செய்வது பற்றி கூற ஆரம்பிக்கவும் கேட்டு கொண்டிருந்த நிர்மலா அவர்களுக்கு வந்த அதிர்ச்சி என்னையும் தாக்கியது.
அதன் பின் தான் தனது தாய் இதனை பெரிதாக கண்டு கொள்ளாதது பற்றியும் தன் உறவுகளும் இதனை எதிர்க்காதது பற்றியும் கூறினார். கடைசியாக காதலித்து ஊரை விட்டு ஓடி வந்த காதலர்களையும் அவரை தேடி வந்த பெண்ணின் தந்தையையும் தன் தந்தை கொலை செய்து வீட்டிற்கு அருகே புதைத்தது பற்றிய விவரங்களை கூற ஆரம்பித்தார். நீங்களே அதனை காணோளியில் பாருங்கள்.

இவ்வளவு மனக் கஸ்டங்களையும் தாங்கிக் கொண்டு 12ம் வகுப்பில் 1100 மதிப்பெண்களுக்கு மேல் வரும் என்ற எதிர்பார்ப்புடனும் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆசையுடனும் காத்திருந்த பார்கவியினை பார்க்க எனக்கு உண்மையில் ஆச்சர்யமாக இருந்தது.
இந்த நிகழ்ச்சியின் காரணமாக காணாமல் போனதாக நினைத்து கொண்டிருந்த 3 பேர் கொலையான விசயம் காவல் துறைக்கு தெரிய வந்து கொஞ்ச நாள் தலை மறைவுக்கு பின் பார்கவியின் தந்தையை கைது செய்திருக்கிறார்கள். பார்கவியும் 1000 க்கு மேல் மதிப்பெண் வாங்கி இருக்கிறார்.
இப்பெண்ணுக்கு வாழ்க்கையில் இனிமேல் வாழ்க்கையில் எந்த கஸ்டமும் வரக்கூடாது என்று இறைவனை பிரார்த்தித்துக் கொண்டேன்.
உங்கள் கருத்துக்களை மறக்காமல் தெரிவியுங்கள். மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

Comments

Popular posts from this blog

மைத்திருவிழா

எதற்காக வாசிப்பு?

இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பண்ணிக்கலாம்- கடுப்பு பாகம் 2