"என்ன சொல்ல வரன்னா" - கதையில்லாத வித்தியாசமான குறும்படம்

அன்பர்களுக்கு வணக்கம். எனக்கு தெரிந்து நான் எழுதிய பதிவில் குறுகிய காலத்தில் அதிகம் பேர் பார்த்தது "ஊருக்கு 4 பேர்" "ராமசாமி" குறும்படங்களை பற்றிய பதிவுகள் தான். என்னதான் கோடிகோடியா செலவு பன்னி படம் எடுத்தாலும் சில நேரத்துல கதை ஊத்திகிச்சுனா மொக்கையா போய்டும், அந்த வகைல குறும்படம் பல வகைல பரவாயில்லை, ஏற்கனவே "சொத்தை பொன்னு" குறும்படத்துலயும் பெருசா கதை இல்லனாலும் ஜனங்ககிட்ட நல்லா போய் சேர்ந்தது. அதே மாதிரி கதையில்லாத ஆனா நல்லாயிருக்க ஒரு குறும்படத்தை பத்தி பார்ப்போம்.

படத்தோட பேர் "என்ன சொல்ல வரேன்னா". தலைப்பு வித்தியாசமா இருக்கேனு பார்த்தேன். கண்டிப்பா கதை இருக்காது, ஏதாவது காமெடியா முடிக்க போறாங்கங்கறது படம் ஆரம்பிச்சவுடனேயே தெரிஞ்சது. அதேதானுங்க.
எடுத்ததும் ஒரு ரெஸ்டாரண்ட், ஒருத்தர் வர்ரார், கெத்தா உட்கார்ரார், கையில வச்சுருக்க ஏதோ பேப்பர் அ பார்க்கறார், சர்வர்கிட்ட சலிச்சுகிட்டே ஆர்டர் பன்றார். அப்பப்ப பக்கத்துல உட்கார்ந்துருக்க ஃபிகர் அ சைட் அடிக்கறார்(இவர் நம்ம ஆளுங்கோ)



திடிர்னு ஒருத்தன் அவருக்கு குறுக்க வர்ரான், நாகரீகமா பேசி பக்கத்துல உட்கார்ந்து பேசும் போதுதான் இவ்வளவு நேரம் வளைச்சு வளைச்சு சைட் அடிச்ச நம்ம ஆளு ஒரு திரைப்பட இயக்குனர்னு தெரியுது.

எடுத்ததும் "உங்க படம்லாம் ஏன் இவ்வளவு மொக்கையா இருக்கு?" கேட்டு கடுப்ப கெளப்ப ஆரம்பிச்சு வரிசையா கேள்வி கேட்டு அசிங்க படுத்தறார், அதோட நிறுத்தாம கடைசியா ஒரு அவமானத்தை குடுக்கறார் பாருங்க, அந்த டைரக்டர் நொந்து போய் எழுந்து போயிடறான், இப்பதாங்க அந்த ஃபிகர் முகத்தை முழுசா காட்டறாங்க, இதுக்காக தான் நான் காத்துட்டு இருந்து முழு படத்தையும் பார்த்தேன்.

 கேமராவா மட்டும் அடிக்கடி ஆட்டிட்டே இருக்காங்க, மத்தபடி படம் எனக்கு பிடிச்சுருக்கு, ஒரு ஃபிகர் முகத்தை சைட்லருந்து மட்டும் காட்டி கடைசி வரைக்கும் ஆடியன்ஸ் அ வெய்ட் பன்ன வச்சு முழு படத்தையும் பார்க்க வச்ச டைரக்டருக்கு ஒரு சபாஸ், கடைசியா அரசாங்கத்தோட சட்டம் (RIGHTS OF INFORMATION) பத்தி ஸ்லைட் போட்டு விளம்பர படுத்தறாங்க. பாருங்க, நல்ல படம்தான்.

படத்தை பார்க்கனுமா?


வந்துட்டிங்க, படிச்சுட்டிங்க, அப்படியே கமெண்ட் அ போட்ட்டுட்டு , மேல டாப் ல பாருங்க FACEBOOK LIKE பட்டன் இருக்கு, அதை க்ளிக் பன்னி உங்க நண்பர்கள்கிட்ட பகிர்ந்துக்கங்க.

Comments

Popular posts from this blog

மைத்திருவிழா

எதற்காக வாசிப்பு?

இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பண்ணிக்கலாம்- கடுப்பு பாகம் 2