காதலனை தினமும் மறக்கும் காதலியின் கதை/ 50 FIRST DATES REVIEW- திரை விமர்சனம்

அன்பு நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம், நான் இந்த பதிவ எழுதும்போது காலைலங்க, நீங்க எத்தனை மணிக்கு படிக்கறிங்களோ அதனால பொதுவா ஒரு வணக்கத்தை போட்டு வைப்போம், அடுத்த தேர்தல்ல உபயோகம் ஆனாலும் ஆகும். விமர்சனம் எழுதி ரொம்ப நாள் ஆச்சு, ஏன் பதிவு எழுதியே ரொம்ப நாள் ஆச்சு. நேத்து கொஞ்சம் நேரம் கிடைச்சதும் ஏற்கனவே இறக்கி வச்சுருந்த படம் ஒன்னு பார்த்தேன், அதை பத்தி இன்னைக்கு பேசுவோம்.
படத்தோட பேர் "50 FIRST DATE". பேரை பார்க்கும் போதே ஏதோ PLAYBOY வகையா இருக்கும்னுதான் நினைச்சேன். ஆனா இது விக்கிப்பீடியால "ROMANTIC-COMEDY" ங்கற வகைல வருது, இதுக்கு முன்னே நான் போட்ட விமர்சனத்தை படிச்சவங்களுக்கு தெரியும், எனக்கு இந்த வகை படம் ரொம்ப பிடிக்கும்னு, புதுசா படிக்கறவங்க நேரம் இருந்தா அதையும் படிச்சுட்டு போங்க.
படம் ஆரம்பிக்கும் போது வரிசையா ஒவ்வொரு பொன்னா "நான் ஹாவாய் போனப்ப  என்னை ஒருத்தன் ரொம்ப கவர்ந்துட்டான், அவன் கூட ரொம்ப ஜாலியா டைம் ஸ்பெண்ட் பன்னேன், ஆனா போன் நம்பர் கேட்கும் போது எஸ்கேப் ஆகிட்டான்"னு ஒரே பில்டப், யாருடா அது? நம்ம ஊர்ல எல்லா பொன்னுங்களும் சூர்யாவ பத்தி பேசற மாதிரி பேசுதேனு பார்த்தா நம்ம ஹீரோ ஒரு பொன்னுகிட்ட வழக்கம் போல போன் நம்பர் கேட்கும்போது நான் ஒரு ஜேம்ஸ்பாண்ட் 007, என் கூட இருந்தா உனக்கும் ஆபத்து அப்படி இபாடினு சொல்லி கழட்டி விட்டுடறார். அவர் யாருன்ன அங்க இருக்க ஒரு அக்யுரியம் ல கடல்வாழ் உயிரினக்களுக்கு வைத்தியம் பார்க்கற டாக்டர். சும்மா இருக்கும் போது அங்க வர டூரிஸ்ட் பொன்னுங்களை கரெக்ட் பண்ணி கழட்டி விடறதை பார்ட் டைம் ஜாப் ஆ செஞ்சுட்டு இருக்கார்.

ஒரு நாள் ஒரு ரெஸ்டாரண்ட் ல அழகான ஒரு பொன்னை பார்க்கறார், வழக்கம் போல கிட்ட போய் மொக்கை போட்டு கரெக்ட்டும் பன்னிடறார். சரி அடுத்த நாள் பார்க்கலாம் ணு முடிவு பன்னிட்டு திரும்ப அங்க போனா அந்த பொன்னு உன்னை இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லையேனு சீன் போடுது.

அந்த ரெஸ்டாரண்ட் அ நடத்தற லேடி ஹீரோயின் அ பத்தி ஒரு ஃபிளாஸ்பேக் அ சொல்லுது.போன வருசம் நடந்த ஒரு கார் ஆக்சிடென்ட்ல மண்டைல அடிபட்டு ஹீரொயினுக்கு கஜினி சூர்யா மாதிரி ஒரு SHORT TERM MEMORY LOSS வந்துருது,  அந்த வியாதி படி ஆக்சிடென்ட் நடந்த நாள் வரைக்குமான எல்லா விசயமும் நல்லா நினைவு இருக்கும்.அதுக்கு அடுத்த நாள்லருந்து அவ வாழ்க்கை ஆரம்ப்பிக்கும், அன்னைக்கு தூங்கி எழுந்தா அன்னைக்கு நடந்ததும் மறந்து மறுபடியும் முதல்லருந்து ஆரம்பிக்கும்.
வித்தியாசமா இருக்குல்ல, ஏன்னு சொல்லலை, ஹீரோனாலே ஹீரோயின் முகத்துல ஆசிட் ஊத்திருந்தா கூட ஏத்துப்பாங்க, இது என்ன சின்ன மறதி கேஸ் தானேனு ஹீரோ விடாம கரெக்ட் பன்றார், என்னதான் பிட் அ போட்டு செட் பன்னி வச்சாலும் அன்னைக்கு ராத்திரி வரைக்கும் தான், விடிஞ்சா மறுபடியும் முதல்லருந்து ஆரம்பிக்கனும். 

ஹீரோ புத்திசாலித்தனமா ஒரு வீடியோ டேப் ரெடி பன்னுவார், அதை தினமும் காலைல ஹீரோயின் பார்க்கற மாதிரி, அதுல ஆக்சிடென்ட் அ பத்தியும் அதுக்கு அப்புறம் அவங்க வாழ்க்கைல நடந்தது பத்தியும். ஒரு கட்டத்துல தனக்காக தன்னை லவ் பண்றத மட்டும் தினமும் வேலையா வச்சுகிட்டு வாழ்க்கைய வீணடிக்க வேணாம்னு சொல்லி ஹீரோவ ஹீரோயின் மறக்க சொல்லிடறா, பிரிஞ்ச 2 பேரும் எப்படி ஒன்னு சேர்ந்தாங்கனு படத்தை பார்த்து தெரிஞ்சுக்கங்க.
படம் எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு. ஹீரோயின் வேற யாரும் இல்லை. நம்ம CHARLES ANGELS ல நடிச்ச பொன்னுதான். இந்த படத்துலருந்து நம்ம ஊரு சினிமாக்கும் ஹாலிவுட்டுக்கும் என்ன வித்தியாசம்னு தெளிவா புரிஞ்சது. அவங்கலாம் சுத்தமா லாஜிக் பார்க்கறது இல்லைங்க.

வந்ததும் வந்திங்க, ஏதாவது கமெண்ட் அ போட்டு போங்க, புண்ணியமா போகும்.

படத்தோட ட்ரெய்லர் பார்க்கனுமா?

Comments

Post a Comment

Popular posts from this blog

மைத்திருவிழா

எதற்காக வாசிப்பு?

இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பண்ணிக்கலாம்- கடுப்பு பாகம் 2