- மழைச்சாரல்: இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பன்னிக்கலாம்- கடுப்பு பாகம் 3
expr:class='"loading" + data:blog.mobileClass'>

Wednesday, 27 June 2012

இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பன்னிக்கலாம்- கடுப்பு பாகம் 3

அன்பர்களுக்கு வணக்கம், உங்களுக்குனு வாழ்க்கைல ஆயிரம் பிரச்சனை இருக்கும் போதும் என் புலம்பலை முழுசா கேட்டதோட இல்லாம அதுக்கு கமெண்ட் போட்டு உற்சாகப்படுத்தற உங்களுக்கு ஒரு நன்றிய சொல்லிக்கறேன்.
இந்த பதிவோட முதல் 2 பாகங்களை படிக்காதவங்க முதல்ல அதை படிச்சுட்டு வந்துருங்க.என்ன படிச்சுட்டிங்களா? நான் எதை பத்தி புலம்பிட்டு இருக்கேன்னு புரிஞ்சுருக்குமே, சரி விசயத்துக்கு வருவோம். நான் இது மாதிரி என் கூட வேலை பார்க்கற அல்டாப்ஸ் பத்தி எழுதறத படிச்ச என் சக ஊழியர்கள் தனித்தனியா ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியாம வந்து என்னை பார்த்து அவங்க அனுபவங்களை சொல்லி அதையும் எழுத சொன்னாங்க. அவங்க பேர் வெளிய வரக் கூடாதுனும் சொன்னாங்க, ஏதோ இந்த அளவுக்காவது சொல்றாங்களேனு சந்தோஷப் பட்டுக்க வேண்டியதுதான். ஆச்சர்யம் என்னன்னா சில பெண்களும் வந்து சொன்னதுதான்.

சரி கேள்விய ஆரம்பிப்போம். பொன்னுங்க புடவை எதுக்கு கட்டறாங்க? அதுல என்ன ஸ்டைல்? கட்டும் போது அவங்களுக்கு பிடிச்ச ஸ்டைல்ல கட்டட்டும், கட்டுனதுக்கு அப்புறம் முந்தானைய கைல போட்டு சுத்திகிட்டு எதுக்கு நடக்கனும்? பார்க்க ஒரு பாண்டியராஜன் படத்துல ஜனகராஜ் கை நடுக்கத்தை கன்ட்ரோல் பன்ன கைய துண்டால கட்டிகிட்டு சரக்கடிக்கற மாதிரி இருக்கும். கேட்டா மேனரிசம்னு அள்ளி விடறது?
சரி தொலையட்டும், போடறது கடலை, அதை யார் கூட போட்டா என்ன? என்ன ஜாதினு விசாரிச்சுகிட்டுதான் போடனுமா? வேற ஜாதிக்கார பசங்ககிட்ட பேசுனா உன் புருசன் கோவிச்சுக்குவானா? கேட்கவே வேடிக்கையா இல்லை. இந்த ஆன்ட்டிங்களை மட்டும் தப்பு சொல்ல கூடாது. அடுத்தவன் பொன்டாட்டினு தெரிஞ்சும் பஸ்ல புட்போர்ட்ல தொங்கற மாதிரி ஜன்னல் கம்பிய பிடிச்சுகிட்டு தொங்கி தொங்கி கடலை போடற நம்ம பசங்களை சொல்லனும்? கேட்டா கூசாம அக்கானு சொல்றாங்க, அக்காகிட்டையாடா அப்படி பேசுவிங்க?

சராசரியா 30 வயசுக்குள்ள இருக்க பொன்னுனு ஈசியா கண்டுபிடிக்கலாம், எப்படி போடற ட்ரெஸ், உடல்வாகு. ஆனா சிலருக்கு பாவம் சின்ன வயசுலயே 30 வயசுக்கு மேல இருக்க உடல்வாகு வந்துரும், அவங்கள புடவைல தவிர வேற துணில பார்க்க முடியாது, நான் சில தடவை அவங்களை பார்த்து இரக்க பட்டதுண்டு "எப்படித்தான் கல்யாணம் ஆகப்போகுதோ? வர மாப்பிள்ளை வெய்ட் கூட கூட பவுனோட எண்ணிக்கையையும் ஏத்துவானே"னுலாம் கவலைப் பட்டுருக்கேன்.

ஆனா இப்ப எனக்கு அந்த மாதிரி இருக்கவங்களை பார்த்தாலே கோபம் வர அளவுக்கு ஒருத்தி பன்னிட்டா, லேடிஸ்  நீங்களே சொல்லுங்க, அடுத்தவளை லவ் பன்ற பையன்கிட்ட உங்களுக்கு என்ன கடலை வேண்டி கிடக்கு? கேட்டா நட்புனு சொல்றது, நைட் 11 க்கு போன் பேசி, யாருக்கும் தெரியாம படத்துக்கு போய் கார்னர் சீட்லதான் உங்க நட்ப வளர்த்துனுமா? இதெல்லாம் தப்புனு நான் சொல்ல மாட்டேன், ஏன்னா நான் இதெல்லாம் செஞ்சுருக்கேன், என் லவ்வரோட, அப்படி உன்னால உண்மைய சொல்ல முடியாது, ஏன்னா விசயம் அவன் லவ்வருக்கு போயிரும்னு பயம். படிக்கறவங்களுக்கு குழப்பமா இருக்கா? இருக்கும், என்னால தெளிவா சொல்ல முடியலைங்க. சில நல்ல பொன்னுங்க பேரும் வெளிய வந்துரும்னு பார்க்கறேன்.


 இந்த அளவுக்கு இருக்க பொன்னு அடுத்தவங்களை கிண்டல் பன்னா உங்களுக்கு எப்படி இருக்கும்?


இப்ப நீங்க நடந்து போறிங்க. 2 பொன்னுங்க நார்மலா பேசிட்டு இருக்காங்க. நீங்க க்ராஸ் பன்னும் போது மட்டும் எப்ப பார்த்தாலும் சத்தமா சிரிச்சா உங்களுக்கு எப்படி இருக்கும்? என்னை பார்த்து சிரிக்கலை, எனக்கு நெருக்கமான நண்பர் ஒருத்தரை இப்படியே 2 பொன்னுங்க வெறுப்பேத்திருக்காங்க, அவருக்கா ஒரு ஆணா இருந்துட்டு பொன்னுங்களை பத்தி புகார் குடுக்க சங்கடம், என்கிட்ட சொன்னார், அப்போலருந்து நாங்க கொஞ்சம் பேர் அந்த 2 பேரையும் கைகாட்டி சிரிக்க ஆரம்பிச்சோம். ப்ராப்ளம் சால்வ்ட்.


 இன்னமும் நல்ல பொன்னுன்னு நம்பி சில பேர் ஏமாந்துகிட்டு இருக்காங்க

இன்னொருத்தி இருக்கா. ஒரு பையன்கிட்ட நல்லா பழகி எல்லாத்தையும் கறந்து கழட்டி விட்டவேட்டி அவனை மறக்க முடியலைங்கற சோகத்தை பகிர்ந்துக்கறன்னே அடுத்த பையன்கிட்ட பிட் அ போடுவா, அவளால இது வரைக்கும் எங்க கேம்பஸ்ல பாதிக்க பட்டு எங்கிட்ட ரகசியமா சொன்னவங்க 4 பேர், சொல்லாம லிஸ்ட்ல இன்னும் எத்தனை பேர் இருக்காங்களோ? அவ அடையாளம் தினம் மல்லிகைப்பூ.

இவ்வளவு தூரம் நான் எழுதனதுக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம்னு போன பதிவுல பின்னூட்டத்துல கேட்டவங்களுக்கு சொல்றேன். சம்பந்தம் என்னனு சொன்னா இந்த பதிவு முடிக்க வேண்டியது வரும். முடிக்க சொல்லி சொல்றதுனா சொல்லுங்க சம்பந்தம் என்னனு சொல்றேன். அவசரமில்லை கடைசியா சொல்லுங்க பதிவ கன்டினுயு பன்னுங்கனா நான் திட்ட வேண்டிய அல்டாப் ஆன்ட்டிங்க இன்னும் பாக்கி இருக்காங்க. அவங்களை முடிச்சுட்டு சொல்றேன்.

இப்பதிவில் வரும் அனைத்து படங்களும் கூகுள் இமேஜில் இருந்து எடுக்கப் பட்டவை, ஆனால் நான் குறிப்பிடுவர்களுடன் 75% அப்படியே பொருந்துவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

வந்ததும் வந்தீங்க,அப்படியே மறக்காம கமெண்ட் அ போட்டு போங்க.

No comments:

Post a Comment