மாலை நேரம்-குறும்படம்
அன்பு நண்பர்களுக்கு வணக்கம், சாதாரணமா ஒரு படம் பார்த்து முடிக்க 2 மணி நேரத்துக்கு மேல ஆகும், ஹாலிவுட்னா பராவாயில்லை ஒரு 1.30 மணிக்குள்ள பார்த்துடலாம், அந்த அளவுக்கு கூட டைம் இல்லாதப்ப பார்க்கறதுக்குனுதான் குறும்படங்களை நெட் ல இறக்கி வச்சு பார்க்க ஆரம்பிச்சேன். அந்த வகைல எனக்கு ரொம்ப பிடிச்ச காதல் அ அருமையா சொன்ன குறும்படம் இந்த "மாலை நேரம்".
ஒரு நாள் எதெச்சையா ஒவ்வோரு சேனல் ஆ மாத்திட்டு இருக்கும் போது நம்ம கேப்டன் டீவில "கூத்துப்பட்டறை" னு ஒரு ப்ரோக்ராம், சரியா பேர் நினைவுல இல்லை தப்பா இருந்தா மன்னிச்சுக்குங்க. அதுல பாதிலருந்துதான் இந்த குறும்படத்தை பார்த்தேன். எனக்கு ரொம்ப பிடிச்சுருந்தது.அதுக்கு அப்புறம் நெட் ல தேடி எடுத்தேன்.
கதைனு பார்த்தீங்கனா பெருசா கருத்து சொல்ற மாதிரிலாம் இல்லைங்க, ஒரு சராசரி வாலிபனுக்கு போன் மூலமா ஒரு பொன்னோட அறிமுகம் கிடைக்குது. அவனும் ரொம்ப எதிர்பார்ப்போட போய் நேர்ல பார்க்கும் போது அது ஸ்கூல் படிக்கற சின்ன பொன்னுனு தெரியுது, அவனுக்கு என்ன பன்றதுனு தெரியாம குழம்பி, எரிஞ்சு விழுந்து எல்லாத்தையும் அந்த பொன்னு பொறுத்துகிட்டு எப்படி அவனை லவ் பன்ன வைக்குதுங்கறதுதான் கதை.
கண்டிப்பா பார்க்கறவங்களை நெகிழ வைக்கற மாதிரி நிறைய விசயம் இந்த படத்துல இருக்கு. YOUTUBE ல தேடும்போது அவார்ட் வின்னிங் சார்ட் ஃபில்ம் லிஸ்ட் ல இந்த படம் வரும். கண்டிப்பா பாருங்க.
படத்தை பார்க்கனுமா?
மறக்காம உங்க நண்பர்கள்கிட்ட பகிந்துக்குங்க.
Comments
Post a Comment