இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பன்னிக்கலாம்- இறுதி பதிவு
அன்பர்களுக்கு வணக்கம், இத்துடன் இந்த பதிவுத் தொடர் முடிவடைகிறது. ஏதோ ஒரு நாள் கோபத்தில் யாரையாவது திட்ட வேண்டும் போல் இருந்த பொழுது எழுத ஆரம்பித்தேன். முதல் பதிவு தலைப்புக்கென்றே நிறைய ரசிகர்களை பெற்றது. அதன் தாக்கமே அடுத்த பதிவிற்கும் நிறைய ஓட்டு கிடைத்தது.
ஒரு கட்டத்தில் கோபமே இல்லாத நேரத்தில் ஏதோ எழுதுகிறோம் என்ற தலைக்கணத்தில் எழுதிய மூன்றாம் பதிவு யாராலும் ரசிக்கக் கூடியதாய் முடிந்து விட்டது. இந்த நிலையில் இத்தொடரினை முடித்துக் கொள்வதே கெளரவம். இந்த பதிவில் நான் யாரையும் திட்ட்ப் போவதில்லை. தலைப்பிற்கான காரணத்தை மட்டுமே எழுத போகிறேன்.
என்னை சுற்றிலும் ஏராளமான அல்டாப் ஆண்ட்டிகள், அவர்களை பற்றி முதல் மூன்று பதிவில் நிறைய எழுதி விட்டேன். படிக்காதவர்கள் படித்து விட்டு தொடருங்கள்.
இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பன்னிக்கலாம்- முதல் பாகம்
இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பன்னிக்கலாம்- இரண்டாம் பதிவு
இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பன்னிக்கலாம்- மூன்றாம் பதிவு
ஒவ்வொருவரின் செய்கையும் என்னை மிகவும் எரிச்சலடைய செய்யும். ஏதாவது வேலையாக இருக்கும் பொழுது இவர்களது மினுக்கல்களை பார்த்து வெறுப்பாகி வேலையை தற்காலிகமாக நிறுத்திவிட்டு, கொஞ்ச நேர ஆசுவாசத்திற்கு பின் தொடர்ந்த அனுபவம் எனக்கு நிறைய உண்டு.
இரண்டு வருடங்கள் ஆனாலும் எனக்கு இந்த அல்டாப்புகள் மேலான கோபம் கொஞ்சமும் குறையவில்லை. ஒருவேளை நாளுக்கு நாள் அவர்களது ஆட்டம் அதிகமாகிக் கொண்டே போவது காரணமாய் இருக்கலாம். ஆனால் எனக்கு முன்பிலிருந்தே இந்த கொடுமைகளை பார்த்துக் கொண்டு அமைதியாய் இருப்பவர்கள் இங்கு அதிகம்.
அவர்களை இவர்களின் மினுக்கல்கள் பெரிதாய் பாதிக்காதது எனக்கு பல நேரங்களில் ஆச்சரியங்களை தந்தது உண்டு. அவர்கள் என்னை விட வயதில் மூத்தவர்கள் என்றாலும் அனைவரும் திருமணமானவர்கள் என்பது குறிப்படத்தக்கது.
அவர்களுடனான தேநீர் வேளையில் எனக்கு அல்டாப்புகளால் வரும் கோபதாபங்களை பற்றி குறிப்பிடும் பொழுது அனைவரும் என்னிடம் தெரிவித்த ஒருமித்த கருத்து இதுதான்.
"உனக்கு இவங்களைலாம் பார்க்க நேரமிருக்கு, பார்த்தாலும் இதெல்லாம் நோட் பன்னி கோபப்படற அளவுக்கு உனக்கு மனசுல வேற எந்த பிரச்சனையும் இல்லாம ரிலாக்ஸ் ஆ இருக்க. அதுவும் இல்லாம எப்பப் பார்த்தாலும் அதிகம் காரம் இருக்க சாப்பாடா ரசிச்சு சாப்புடற, காரம் அதிகம் சாப்பிட்டா எரிச்சல் அதிகமா வரும், சின்ன விசயத்துக்கலாம் கோபம் அதிகமா வரும். இதை தவிர்க்கனும்னா ஒரே வழி பேசாம கல்யாணம் பன்னிக்க"
"கல்யாணத்துக்கும் இதுக்கும் என்னங்க சம்பந்தம்?"
"முதல்ல கல்யாணம் ஆச்சுன்னா கொஞ்ச நாள் உனக்கு யார் மேலயும் கோபம் வராது, அப்புறம் போகப் போக நீ கோபப்பட்டா உனக்குதான் நஷ்டம்ங்கறதை உன் மனைவி புரிய வைப்பா, சாப்பாட்டுல உப்பு, காரம் போட்டாதானே உனக்கு கோபம் வரும்னு அதெல்லாம் தானா குறையும். போகப் போக உன்னை முகத்துக்கு நேரா திட்டுனா கூட கோபம் வராத அளவுக்கு பழகிடுவ, அப்புறம் எங்கே மத்த பொன்னுங்களை பார்த்து கோபம் வரப் போகுது"
இந்த அரைக் கிழவிங்க பன்ற அல்டாப்புலாம் பார்த்து கோபப் பட்டு என் உடம்பை கெடுத்துக்கறதை விட, இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பன்னிக்கலாம்.
வந்தது வந்தீங்க, அப்படியே கமெண்ட் அ போட்டுட்டு மறக்காம உங்க நண்பர்கள்கிட்ட பகிர்ந்துக்கங்க.
நான் நினைக்கிறேன் உங்களுக்கு ஆண்டிகளை ரொம்ப பிடிக்கும் என்று...
ReplyDelete//இந்த அரைக் கிழவிங்க பன்ற அல்டாப்புலாம் பார்த்து கோபப் பட்டு என் உடம்பை கெடுத்துக்கறதை விட, இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பன்னிக்கலாம்.
ReplyDelete//
அனுபவசாலி சொன்ல்ரிங்க ஒத்துக்குறோம்
you will get a good life, all the best change the college before marriage
ReplyDeletestop commenting about others , first try to do your work and duties properly, then u will not have time to see what others , your comments about others crossed the limits , do not indulge in others personal life and make fun of it , are u moral police ? , do u think u have any moral , do u know what is mean by morality , mind that u r in noble profession , do not defame your profession for your cheap desire to commenting others , if u find fault in others you try to live in good way and set example for others , you should first change your attitude
ReplyDelete