சொல்வதெல்லாம் உண்மை- அவசியம் சொல்லனுமா?

அன்பு நண்பர்களுக்கு வணக்கம், கொஞ்சம் இடைவெளி, காரணம் பெரிதாய் ஒன்றுமில்லை, பதிவு போட ஆரம்பித்தால் தொடர்ந்து போடுவது, இல்லையென்றால் பேஸ்புக்கை மட்டும் நோண்டி கொண்டிருப்பது, என்னை மாற்றிக் கொள்ள முடியவில்லை. சரி இன்றைய எனது பதிவு ZEE  தொலைக்காட்சியில் நிர்மலா பெரியசாமி நடத்தும் "சொல்வதெல்லாம் உண்மை" நிகழ்ச்சி பற்றியது.


நம் அனைவருக்கும் தெரியும் இது போல ரியாலிட்டி ஷோக்களை தமிழில் பெரிதும் மக்களிடம் கொண்டு போய் சேர்த்த பெருமை விஜய் டீவியை சாரும். வாரவாரம் யாரையாவது கூட்டிக் கொண்டு வந்து அழ வைப்பார்கள். வழக்கமாக சன் டீவியில் சீரியில் பார்த்து அழும் பெண்களுக்கு இந்த புது வித அழுகை மிகவும் பிடித்திருந்தது. TRB ரேட் எகிறிட்டு போச்சு, உடனே ஒவ்வொரு சேனலும் அவங்கவங்க பங்குக்கு ஒவ்வொருத்தரையா கூட்டிட்டு வந்து அழ வைக்க ஆரம்பிச்சாங்க. அடுத்து சமுக அக்கறைல கவனம் செலுத்தற மாதிரியான நிகழ்ச்சிகள் பன்ன ஆரம்பிச்சாங்க, உதாரணத்துக்கு "நீயா நானா, குற்றம்- நடந்தது என்ன" இது மாதிரி ஒவ்வொரு சேனலும் ஆளுக்கு ஒன்னா ஆரம்பிக்கவும் தங்களோட பங்குக்கு ZEE தமிழ் ஆரம்பிச்சததுதான் இந்த 'சொல்வதெல்லாம் உண்மை'.
உண்மையிலேயெ சொல்றேங்க, எனக்கு இப்படி ஒரு சேனல் இருக்கறதே ரொம்ப நாளா தெரியாது. நம்ம சக பதிவர் ஒருத்தர் குடிக்கு அடிமையான ஒருத்தர் திருந்தி அவர் குடும்பத்தோட 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சி மூலமா ஒன்னு சேர்ரது பத்தி போட்டுருந்தார். அதுதான் நான் முதல்ல பார்த்த எபிசோட்.
அந்த வாரம் பெருசா சோகம் ஏதுமில்லை, ஆனா குடிக்கு அடிமையாகறதனால என்னென்ன பிரச்சனை வருங்கறது பத்தியும் அதுல இருந்து மீட்கறதுக்கான அமைப்புகள் பத்தியும் நிறைய விசயங்கள் தெரிஞ்சுகிட்டேன்.

அதுக்கப்புறம் இந்த நிகழ்ச்சிய பத்தி குறை சொல்லி வந்த பதிவுகளை படிச்சேன். நான் பார்த்த இந்த எபிசோட் அ மட்டும் வச்சுகிட்டு என்னால எந்த குறையும் கண்டுபிடிக்க முடியலை. முடிஞ்சா நீங்க ஏதாவது குறை இருந்தா சொல்லுங்க. 
இதுக்கு அடுத்து இந்த நிகழ்ச்சில நான் பார்த்த எபிசோட் என்னை அப்படியே புரட்டி போட்டுடுச்சு. அதை இதே பதிவுல தொடர்ச்சியா போட்டா நல்லாயிருக்காது. அந்த எபிசோட்னால 3 பேர் கொலையான விசயம்லாம் வெளிய வந்தது. கேள்வி பட்டுருப்பிங்க. அடுத்த பதிவுல அதை பத்தி பேசுவோம்.
இந்த எபிசோட் பத்தின உங்க கருத்தை மறக்காம பின்னுட்டமிடுங்க.

Comments

  1. கற்றலில் கடைசி நாள் வரை கடைசி வரிசையில் அமர்ந்து சுகமாய் தூங்கியவனும், யார் வீட்டு சாபத்தாலோ இன்று அதே கடைசி வரிசை மாணவர்களுக்கு பாடம் எடுத்து தாலாட்டு பாடும் ஒரு பாவப்பட்ட யோக்கியன் நான்ந்தாங்க

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மைத்திருவிழா

எதற்காக வாசிப்பு?

இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பண்ணிக்கலாம்- கடுப்பு பாகம் 2