Delhi Belly விமர்சனம்
அன்பர்களுக்கு வணக்கம், என்னடா இத்தனை நாள் இல்லாம இன்னைக்கு இந்த படத்துக்கு விமர்சனம் போட்டுருக்கேன்னு யோசிக்கலாம், நானும் சேட்டை படம் வந்ததும் பார்க்கலாம்னு தான் இருந்தேன், நம்ம சகப் பதிவர்கள்லாம் சேர்ந்து படத்தை கழுவி ஊத்துனதுக்கு அப்புறம் எதுக்கு செலவு பன்னி பார்க்கனும்னு தோணிருச்சு, ஆனா சேட்டைய ஓட்டுன எல்லாரும் அதோட ஒரிஜினலான இந்த படத்தை ரொம்ப புகழ்ந்துருந்தாங்க, ஏற்கனவே வாங்கி வச்சுருந்த டிவிடி ய எடுத்து போட்டு இன்னைக்குத்தான் பார்த்தேன். அதான்.
படம் உண்மையிலேயே செம என்டர்டெய்னர், ஜெய்சங்கர் காலத்து கதைதான், அதுல வர்ர நாகேஷ், தேங்காய் சீனிவாசன் ரோல்லதான் சந்தானம், பிரேம்ஜிக்கு கொடுத்துருப்பாங்கனு நினைக்கறேன். அது என்னவோ ஷேவ் கூட பன்னாம, அழுக்கு ரூம்ல இருக்க பையனை தேடி வந்து பனக்கார பொன்னு லவ் பன்னுதுனு நிறைய படத்துல காட்டுனாலும் அதுல எனக்கு உடன்பாடு இல்லை. ஏன்னா நான், என் ஃப்ரென்ட்ஸ்லாம் காலகாலமா அப்படித்தான் இருக்கோம், யாரும் திரும்பி கூட பார்க்கறது இல்லையே.
படத்துல 2 ஹீரோயின், வடக்க சென்சார் போர்ட்லாம் இருக்கா? இல்லையானே தெரியலை, பாத்ரூம் வந்தாலாம் கெட்ட வார்த்தைலாம் திட்டிக்கறாங்க, ஆனா ஒன்னு சொல்லிக்கறேன். படத்துல வர்ர எந்த கேரக்டரும் நடிச்ச மாதிரியே தெரியாம இயல்பா செஞ்சுருக்காங்க, காட்சி அமைப்பு அந்த மாதிரி, ரொம்ப சீரியசான சீன்னு எதுவும் இல்லை.
ஒரு ஹீரோ, பத்திரிக்கைக்காரராம், அவரோட போட்டோகிராஃபர், ஒரு கார்ட்டுனிஸ்ட் 3 பேரும் ஒன்னா தங்கி இருக்காங்க, ஹீரோவ எதுக்கோ ஒரு பனக்கார ஃபிகர் காதலிக்குது, புதுசா துணிமணிலாம் எடுத்து கொடுத்து கார்லாம் வாங்கி தருது.
ஒரு வைரக்கடத்தல் கும்பல், கடத்தற வைரம் தவறுதலா ஹீரோ குருப்கிட்ட ஒவ்வொருத்தர் கைலயும் மாறி மாறி சுத்திகிட்டு இருக்கு, தேடிகிட்டு கடத்தல் கும்பல் அவங்ககிட்ட வருது.
இன்னொரு ஹீரோயின், விவாகரத்தானவங்க, ஆனாலும் நல்லாதான் இருக்காங்க, ஹீரோ கூட சுத்தறாங்க, ஹீரோ தன்னோட காதலியோட 'அது' பன்னும் போது போன் பன்னி வரச் சொல்லி தண்ணியடிக்க சொல்ற கேரக்டர்.
இன்னொரு முக்கியமான ரோல், ஹவுஸ் ஓனர், விபச்சாரி கூட சேர்த்து இவரை போட்டோ எடுத்து மிரட்டறப்ப இவர் கொடுக்கற ரியாக்சன் செம்ம, படத்துலயே எனக்கு ரொம்ப பிடிச்ச கேரக்டர் வில்லன் தான், சர்ப்ரைஸ் ஆ ப்ர்த்டேக்கு வந்துருக்கோம்னு பொய் சொல்றதுல ஆரம்பிச்சு, ஹீரோயின் தலைல பென்சில் அ வச்சு துப்பாக்கினு பயமுறுத்தி 1,2,3 சொல்லி விளையாடறதுலயும் சிக்ஸர் அடிக்கறார்.
அடுத்து அந்த கார்ட்டூனிஸ்ட், அவரோட லவ்வரோட மேரேஜ்ல ஒரு வசனத்தை சொல்லி கல்யாணத்தை நிப்பாட்டி ஒரு பாட்டு பாடுவார், மிஸ் பன்னாம பாருங்க, செமயா இருக்கு.
இவங்க எல்லாரையும் வச்சு, அந்த வைரம் கைமாறிகிட்ட இருக்கறதை ரொம்ப வேகமா விறுவிறுப்பா சொல்லி இருக்காங்க, டைம்பாஸ்க்கு படம் பார்க்கறிங்களா? கண்டிப்பா உங்களுக்கு இந்த படம் பிடிக்கும்.
நெஞ்சுல நிக்கற மாதிரி ஒரு கிளைமாக்ஸ், ஹீரோயின் குட்பை சொல்லிட்டு காரை ரிவர்ஸ் எடுத்துட்டு போறப்ப ஹீரோ அப்ப்டியே காருக்குள்ள பாய்ஞ்சு லிப் கிஸ் அடிப்பார் கார் ஓட ஓட, எப்படித்தான் யோசிக்கறாங்களோ. படத்துல 90% வசனம் ஆங்கிலம் தான், அதனால தெளிவா படம் புரியுது. தமிழ்ல எப்படி எடுத்துருக்காங்கனு தெரியலை.
ஆனாலும் படம் செம ஸ்பீட், ஆரம்பிச்சதும் தெரியலை, முடியறதும் தெரியலை, கதையே இல்லாம கருத்து சொல்லாம அவ்வளவு ஏன் சண்டையே இல்லாம ஒரு படம் வேகமா போகுதுங்க, இந்திய சினிமால எனக்கு இந்த மாதிரி படம் இதுதான் முதல் தடவை, உங்களுக்கு தெரிஞ்சு வேற ஏதாவது இருந்தா சொல்லுங்க, நான் பார்க்கறேன்.
படத்தின் ட்ரெய்லர்
விமர்சனம் குறித்த உங்கள் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன.
படம் இதுவும் பார்க்கல..இன்னும் சேட்டையும் பார்க்கல...டெல்லி பெல்லி கண்டிப்பா பார்க்கனும்...
ReplyDeleteபார்த்திடுவோம்... நன்றி...
ReplyDeleteபேசும் படம்...?