உதயம் NH4 விமர்சனம்
அன்பர்களுக்கு வணக்கம், ஒரு படம் பிடிக்கலைன்னா கண்டிப்பா நான் விமர்சனம் எழுத மாட்டேன். எனக்கு அந்த படத்துல பிடிச்ச விஷயங்களைத்தான் விமர்சனங்கற பேர்ல எழுதுவேன். இன்னைக்கு நாம பார்க்க போற படம் உதயம் NH4.
தியேட்டர் மேச்சேரி KS தான், 9 மணிக்கு முடிவு பண்ணி, சாப்பிட்டு பொறுமையா டீ சர்ட், லுங்கியோட வீட்லய தண்ணிர் பாட்டில் எடுத்துகிட்டு நடந்து நண்பனோட போனேன், டிக்கெட் 40 ரூபாய் தான், என்னா கரன்ட் போனா ஜெனரேட்டர்க்கு மாத்தறப்ப 2 நிமிஷம் காத்திருக்கனும்.
உள்ளே போறப்பவே சித்தார்த் அ போஸ்டர்ல பார்த்தேன், அப்படி எதை பார்த்து சமந்தா மயங்கி இருக்கும்? படம் ஆரம்பிச்சதும் உதய நிதி ஸ்டாலின் பேர் போட்டதுக்குலாம் 4 உடன் பிறப்புகள் கைத்தட்டுனாங்க, வெற்றி மாறன் பேருக்கு நான் ஒருத்தன் தான் கை தட்டுனேன்.
படம் ஆரம்பிக்கும் போதே பொன்னை தூக்கறாங்க, நாடோடிகள் போலனு பார்த்தா ஏதோ மங்கத்தா ரேஞ்சுக்கு ஒழுங்கா கேட்காத மாதிரி ப்ளான் போட்டாங்க, சரி ஏதாவது புதுசா இருக்கும்னு பார்த்தேன், பழச கழுவி சுத்தமா கொடுத்துருக்காங்க.
கடைசி எக்சாம் முடிஞ்சதும் ஹீரோயின் அ பாத்ரூம் ஜன்னல் வழியா கடத்தறத யூகிக்க முடியாத செக்யுரிட்டி கார்ட்ஸ், ஹோலி பண்டிகைல நடு ரோட்ல கலர் பூசற மாதிரி, பப்ளிக் ஆ என்கவுன்டர் பன்ற போலிஸ் வில்லன், கண்டிப்பா லவ் ஸ்டோரினு தெரிஞ்சாலும் என்ன பன்ன போறாங்கனு நிமிர்ந்து உட்கார்ந்தேன். இன்டர்வெல் வரைக்கும் குனிய விடலை, செம ஸ்பீட்.
ஹீரோயின் எங்கே போயிருப்பானு விசாரிக்க ஹீரோவோட நண்பனை கூட்டி வந்து விசாரிக்கறப்ப வர்ர ஃபிளாஷ்பேக் நல்லாதான் இருக்கு, எனக்கு ஒரு சந்தேகம், கடைசி பெஞ்ச் பையனுக்கு கிளாஷ்லயே சூப்பர் ஃபிகர் மாட்டுது, காரணம் அவர் மெச்சூர்ட் ஆ முறைச்சுகிட்டே இருக்கார்னு, நாங்க ஒரு 4 பேர் 4 வருசம் அப்படிதாங்க பெஞ்ச் அ தேய்ச்சோம், மனுசங்களாவே யாரும் மதிக்கலையே???????????
போலிஸ் அ முட்டாள் அ காட்டாமா, முடிஞ்ச வரைக்கும் விரட்டி விரட்டி பைக், கார், ட்ரெய்ன்னு மாறுனாலும் தேடிப் பிடிச்சு ஹீரோயின் அ ஒத்தை கைய வச்சுகிட்டே இழுத்துட்டு போற வில்லன் செம கெத். அதுலயும் நடுவுல நடுவுல பொண்டாட்டி கிட்ட போன்ல சமாளிக்கறத பார்க்கறப்ப எங்க கேங்ல புதுசா கல்யாணமான பசங்களாம் நினைவுக்கு வந்துட்டு போறானுங்க.
செகன்ட் ஆஃப் தான் தெலுங்கு வாடை, ஆணி வச்சு ஜீப் அ நிறுத்தறது, RX100 அ பத்த வச்சு வெடிக்க வைக்கறதுனு கொஞ்சம் சீன் எனக்கு பிடிக்கலைப்பா. இருந்தாலும் செகன்ட் ஆஃப்ல ஃப்ளாஷ்பேக் நல்லா இருந்தது. பப்க்கு போற பொன்னுங்களை எப்படி அடிப்பாங்கனு இப்பதாங்க பார்க்கறேன். பரவாயில்லைங்க இந்த ஹீரோயின், ஹீரோகிட்ட ஒரு பாதுகாப்பை தான் எதிர்பார்க்குதாம், அப்படினு சொல்லிகிட்டே எதுக்கு ரூம்க்கு வந்து "I WANT TO KISS YOU, TO HAVE YOU, HUG YOU" னு வேற எதுக்கோ அடி போடுது.
அப்பவும் ஹீரோ நல்லவனாவே இருக்கார், எனக்கு இருக்கறதுலயே பிடிச்ச டயலாக் "கதவை தட்டிட்டு வந்துருக்கலாம் இல்லை மச்சான்" தான், சீன் அ சொல்லிட்டா சப்புன்னு போயிரும், படத்துல பாருங்க.
போலிஸ் ஃபிளாஷ்பேக் அ கேட்டுட்டு இருக்கறப்ப டக்னு ஷாக் ஆகி "எப்புடுறா?"னு கேட்கற சீன்,
அந்த கான்ஸ்டபுள் ஹை பிட்ச் ல "எஸ் சார்" சொல்றது.
அப்பா, அம்மா காச வீணாக்க கூடாதுனு ஓசி சரக்குக்கு அலையற நண்பன், ஃபைன் கட்டாம இருக்க முறை போட்டு ஒருத்தனை குடிக்க விடாம் வண்டி ஓட்ட வைக்கறதுனு ரசிக்கறதுக்கும் நிறைய சீன் இருக்கு.
வெற்றி மாறனோட முத்திரைனு சொல்லனும்னா முதல் விஷயம் எங்கேயும் போரடிக்காத மேக்கிங், தேவையில்லாத வசங்களை பயன்படுத்தாதது, சைந்தவி, G.V.பிரகாஷ்கிட்ட ஜோடியா ஒரு பாட்டை வாங்குனது, க்ளைமாக்ஸ் லிப் கிஸ்ஸிக்காக ஹிந்தி ஹீரோயின்ன புக் பன்னது, பெங்களூர் தமிழ்ல எல்லாரையும் பேச வச்சது.
மணிமாறன்கிட்ட தனி முத்திரையா இந்த படத்துல என் கண்ணுக்கு எதுவும் படலை, வெற்றிமாறன் இல்லாம நீங்க தனியா படம் பன்னாதான் உங்க அடையாளம் வெளிய தெரிய வரும்.
மொத்தமா சொல்லனும்னா படம் பெருசா போரடிக்கலை, தமிழ் ல நான்லினியர் படங்கள் கம்மி, உற்சாக படுத்துவோம், பாட்டு நல்லாருக்கு, தியேட்டருக்கு போய் பார்க்கலாம், அதுக்குனு 100 ரூபாய்க்கு மேலலாம் டிக்கெட் வாங்கி பார்க்காதிங்க.
கருத்துக்களை சொல்லிட்டு போங்கப்பா...
நச் விமர்சனம்... இன்று பார்க்கப் போகிறேன்..
ReplyDelete