CATCH ME IF YOU CAN - விமர்சனம்
அன்பர்களுக்கு வணக்கம், முகம் பார்த்து பழகும் என் நண்பர்கள் பலருக்கு மற்ற மொழி படங்கள் பார்க்கும் பழக்கம் அறவே இல்லை, எப்போதாவது விக்கிப்பீடியாவின் துணை கொண்டும், சகப் பதிவர்களின் விமர்சனத்தினை கண்டும் பல படங்களை பற்றி தெரிந்து கொண்டு தரவிறக்கம் செய்து பார்ப்பேன். அப்படி என் உடன்பிறப்பு மூலம் அறிமுகம் கிடைத்து சமிபத்தில் நான் பார்த்த திரைப்படம் தான் "CATCH ME IF YOU CAN", பலர் பார்த்திருக்க கூடும், ஏனேனில் படம் வெளியானது 2002ல், சரி படத்திற்கு வருவோம்.
படத்தின் நாயகனை உண்மையில் முதலில் பார்க்கும் பொழுது எனக்கு அடையாளம் தெரியவில்லை, பின்னர் எங்கேயோ பார்த்தது போல் இருக்கிறதே என்று தேடி பார்க்கும் போதுதான் கண்டு கொண்டேன், அட நம்ம டைட்டானிக் ஹீரோ ஜேக் இல்லைன்னு, படம் ஆரம்பமே கொஞ்சம் வித்தியாசமா, எதுவுமே புரியாமா யாரோ யாரையோ ஜெயில்ல போய் பார்க்க போறாங்க, என்னதான் சப்டைட்டில்ல வசனம் புரிஞ்சாலும் கதை புரியறதுக்கு 15 நிமிடம் ஆகிடுது.
ஃப்ராங்க், அதிபுத்திசாலியான 16 வயசு பையன், நல்லா வாழ்ந்துட்டு இருந்த அவங்க குடும்பம் பொருளாதார ரீதியா பாதிக்கப் படுது, வீடு மாறுறாங்க, இருந்தாலும் எப்பவும் சுவாரசியமான விசயங்களை செய்யற அப்பாவால பையன் ஃபிராங்க் நல்லாதான் வாழ்க்கை போகுதுனு நம்பறான். அவங்கம்மா அவங்கப்பாக்கு செய்யற துரோகத்தை தெரிஞ்ச பின்னாடி எல்லாமே மாறுது, ஒரு நாள் முடிவுக்கு வர்ர குடும்ப பிரச்சனை, விவாகரத்துல நிக்குது, அதுக்கப்பறம் யார்கூட வாழ பிரியப்படறங்கற கேள்விக்கு யோசிக்க சொல்லி தனியா விட படற ஃபிராங்க் அங்க இருந்து ஓடிப்போறான்.
ட்ரெய்ன் டிக்கெட்டுக்காக முதல் தடவையா போலி செக் கொடுக்கறான், ஊரை விட்டு வந்தவனுக்கு தங்க இடம் இல்லை, எந்த ஹோட்டல்லயும் முகம் தெரியாத சின்னப் பையங்கறதால அவனோட செக்க எடுத்துக்க மாட்டேங்கறாங்க, அந்த நேரத்துல ஒரு பெரிய ஹோட்டல்ல தங்கப்போற பைலட்க்கு கிடைக்கற உபசரிப்ப பார்த்துட்டு பைலட்டா வேஷம் போடறான், சும்மா ஒரு வரில சொன்னாலும் அதுக்காக அவன் மெனக்கெடறது ரொம்ப...
பைலட்டா மாறி ஏர்போர்ட் போய் ஃபிளைட்ல ஓசில போய்ட்டு வந்தாலும் அவனோடா கவனம்லாம் போலி செக் தயாரிக்கறதலாதான் இருக்கு, வெறுமனே செக் தயாரிக்கறதுல்ல மட்டும் இல்லாம அதை உபயோகப்படுத்தற இடத்துல அவனோட ஸ்டைலான நடிப்பு, சும்மா பின்றான்.
இன்னொரு பக்கம் அவனை ஒவ்வொரு ஸ்டெப்பா பின்தொடர்ந்து வந்துகிட்டு இருக்க FBI ஆபிசர் டாம், அவரும் புத்திசாலித்தனமா அவனை நெருங்கி அவன் தங்கி இருக்க இடத்துக்கு வந்து அர்ரெஸ்ட் பன்ற நேரத்துல படம் வேகம் பிடிக்குது, இந்த இடத்துல வர்ர காட்சியமைப்ப நீங்க பல படங்கள்ள பார்த்துருக்கலாம்.
அடுத்து படத்துல நடக்கறதை சொல்லிட்டா படம் பார்க்கறப்ப ஆர்வம் குறைஞ்சுரும், ஆனா ஒரு சின்னப்பையன் முதல்ல வீட்டை விட்டு ஓடி வந்து பைலட்டாகி, அப்புறம் போலிஸ் நெருங்கறத தெரிஞ்சுகிட்டு டாக்டராகி, நர்ஸ் அ உஷார் பன்னி, அதுக்காக அப்புறம் வக்கிலாகி என்னென்னலாம் வித்தை காட்டுவாங்கறிங்க.
அவனோட பலம் எந்த சூழ்நிலையிலயும் பதட்டமடையாம இருக்கறதுதான், நான் வீட்ல உட்கார்ந்து பார்க்கும் போதும் கைதட்ட வச்ச சீன் ஹோட்டல்ல நைட் முழுக்க கூட தங்கறதுக்கு 1000 டாலர் கேட்கற பொன்னுகிட்ட 1400 டாலருக்கு டூப்ளிகெட் செக் கொடுத்துட்டு மிச்சம் சில்லறை வாங்கிக்கற சீன் தான்.
படத்தோட முடிவை என்னால யூகிக்க முடிஞ்சது, ஏன்னா அதை சுட்டு இங்க ஒரு தமிழ்படம் வந்துருக்கு, உங்களால கண்டு பிடிக்க முடிஞ்சா எனக்கு சொல்லுங்க. படத்துல நீங்க எதிர்பார்க்கற எல்லாமே இருக்கு, சண்டைய தவிர.
படத்தோட ட்ரெய்லர்
உங்க கருத்துக்களை தெரிவியுங்க....
ayan?
ReplyDeleteஅடடா... இந்தப் படத்தோட டிவிடிய வாங்கி வெச்சு பல மாதங்களாகியும் ஏனோ பாக்காமலே இருந்துட்டேன் கதிர். இங்க நீங்க சுவாரஸ்யமா எழுதிருக்கறதப் பாத்ததும் உடனே பாக்கணும்னு தோணுது. தாங்க்ஸ்ப்பா!
ReplyDeleteகருத்துக்கு ரொம்ப நன்றி சார்
DeleteMomento movie pathi konja sollungalen
Delete