404 Error not found - திரை விமர்சனம்

அனபர்களுக்கு வணக்கம், சில படங்களை பார்த்ததும் உடனே நம்மளை ஒத்த ரசனை உடையவங்களை தொடர்பு கொண்டு நாம ரசிச்சு பார்த்த படத்தை பார்க்க சொல்லுவோம், அந்த மாதிரி என்னை ரொம்ப பாதிச்ச படங்கள் கம்மிதான், அதுல இந்த படம் கண்டிப்பா ஒன்னு.

http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/e/e7/404_Movie_Poster.jpg/220px-404_Movie_Poster.jpg

இந்த படத்தோட பேரே வித்தியாசமா இருக்கு, ஒரு மருத்துவ கல்லூரி, ஹாஸ்டல், இராக்கிங் பிரச்சனை, முதல்ல சாதாரணமா ஆரம்பிக்கற திரைக்கதை, ஆனா அதுலயும் வித்தியாசமான கேமிரா கோணங்கள், நீங்க எதிர்பார்க்கற மாதிரி ஹீரோ, ஹீரோயின், வில்லன், காமெடியன்லாம் யாரும் கிடையாது.

http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcTYeJWlRQxZV3PKkxW9Et4ERuki6LyXwk8Vr1MLsr1bG6uxngmnfA

ஒரு நல்லா படிக்கற பையன் அபிமன்யு, அவனை ஊக்குவிக்கற புரொஃபசர், அவங்க அழகான மனைவி அவங்களும் புரோஃபசர் தான், தினமும் இராத்திரில முதல் வருசத்து பசங்களை இராக்கிங் பன்ற சீனியர் கும்பல், அவங்களை எதிர்க்கற நல்ல பையனை டார்ச்சர் பன்றதால, மத்த பசங்க தன்னால பாதிக்கப்பட கூடாதுனு வேற ரூம்க்கு போக நினைக்கறான் அபிமன்யு.

அவன் போகனும்னு நினைக்கற ரூம் நம்பர் 404, அதுதான் காலியா இருக்கு, ஆனா 3 வருசத்துக்கு முன்னாடி ஒரு ஸ்டூடன்ட் கௌரவ் அதுல தூக்கு போட்டு தற்கொலை பண்ணிகிட்டதால அதுல பேய் நடமாட்டம் இருக்குனு பூட்டியே இருக்கு, ஒரு வழியா அபிமன்யு போராடி அந்த ரூம்க்கு போறான்.

http://www.bollywoodtrade.com/News/Images/11/Jul/404-error-not-found-main.jpg

ஆனாலும் இராக்கிங் தொடருது, ராக் பன்ற சீனியர் நல்லவன்கிட்ட உன் ரூம்ல செத்து போன பையனை பத்தி எதுவும் தெரியாம எப்படி இருக்கலாம்னு மிரட்டி ஒரு நாள் டைம் கொடுத்து அவனை பத்தி எல்லாம் தெரிஞ்சுக்க சொல்றாங்க, அவனும் விசாரிக்க ஆரம்பிக்கறான், அப்பதான் எதிர்பாராத விஷயம் நடக்குது.

செத்துப்போன கௌரவ் இவனோட கண்ணுக்கு தெரிய ஆரம்பிக்கிறான், பயந்து நடுங்க ஆரம்பிக்கற பையனுக்கு ஆதரவா எல்லாரும் ராக்கிங் கூடாதுனு போராட ஆரம்பிக்கறாங்க, ஆனாலும் செத்தவனோட உருவம் இவனுக்கு தெரியறது தொடருது. ஆனா யாரும் நம்ப மாட்டேங்கறாங்க.

முதல்ல கௌரவ்வ பார்த்து பயந்த அபிமன்யு கொஞ்சம் கொஞ்சமா பயம் குறைஞ்சு அவன் கூட பழக ஆரம்பிச்சுடறான், தனியா பேசிகிட்டு அவன் சுத்தறதை எல்லாரும் பார்க்கறாங்க, அவனுக்கு டிஷ் ஆர்டர் குணப்படுத்தனும்னு நினைக்கறாங்க. இதுக்கு அப்புறம் தான் சஸ்பென்ஸ், நீங்க எதிர்பாக்காத பல விஷயங்கள் செகன்ட் ஆஃப்ல வரும்.

http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcRXIyKGI-wS50v-X7PJ-xiXTkwMM1Bw1qVdndu6c70coLWOmBarzA

நிறைய படம் பார்க்கறவங்களுக்கு ஒரு திறன் இருக்கும், எவ்வளவு திகில் படமா இருந்தாலும் யார் காரணம்னு, என்ன காரணம்னு மனசு தானா கணக்கு போடும், அவங்களால கண்டிப்பா இந்த படத்தோட ட்விஸ்ட் அ யூகிக்க முடியாதுங்கறது என் எண்ணம்.

நான் நல்ல வேளை பகல்ல தான் பார்த்தேன், இருந்தாலும் க்ளைமாக்ஸ்ல உடம்பெல்லாம் புல்லரிச்சு, லேசா நடுங்க ஆரம்பிச்சுருச்சு, பயம் காரணம் இல்லை, ஒரு மாதிரியான திகிலை உடனே தெரிஞ்சுகிட்ட பதட்டத்தை நான் உணர்ந்தேன், கண்டிப்பா மிஸ் பன்னாம பாருங்க நண்பர்களே!!!


படத்தின் ட்ரெய்லர்



கருத்துக்களை தெரிவிக்கவும்

Comments

  1. என்ன ஆச்சர்யம் நானும் சில நாட்களுக்கு முன் தான் இந்த படம் பற்றி என் பதிவில் எழுதினேன்.இருந்தாலும் நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.நம்ம பதிவையும் பாருங்கள் .-- http://scenecreator.blogspot.in/2013/04/404-error-not-found.html

    ReplyDelete
    Replies
    1. நண்பரே, எதற்கு ஆச்சர்யம்? நான் உங்கள் பதிவுகளை வழக்கமாக படித்து வருகிறேன், உங்களது விமர்சனத்தை படித்த பின் தான் இப்படத்தை நான் பார்த்தேன், வித்தியாசமான படத்தை அறிமுக படுத்தியதற்கு நன்றி

      Delete

Post a Comment

Popular posts from this blog

இவங்களுக்கெல்லாம் பெரிய புத்திசாலினு நினைப்பு?

கலாய்ச்சுட்டாராமாம்...

Indiana Jones And The Temple Of Doom திரை விமர்சனம்