அட்டக்கத்தி - உலக சினிமா

அன்பர்களுக்கு வணக்கம், ரொம்ப நாள் கழித்து தமிழ் படம் ஒன்றினை புதிதாய் ரசித்து பார்த்த மகிழ்வில் எழுதுகிறேன்.  இயக்குனர் வெங்கட் பிரபுவின் உதவியாளர் இயக்கிய படம் என் தெரிந்ததுமே நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது என்ற நம்பிக்கையில் தான் படம் பார்க்க துவங்கினேன். நான் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே படத்தில் இருக்கிறது. கொஞ்சம் விரிவாக அலசுவோம்.

 

தற்போதைய தமிழ் சினிமா எப்படி இருக்கிறது? ஒரு கட்டத்தில் இயக்குனர்களையும் கதையையும் நம்பி இருந்த சினிமா, பின்னர் ஹீரோக்களின் வசம் இருந்து தற்போது சந்தானம் போன்ற நகைச்சுவை நடிகர்களின் கையில் இருக்கிறது, அது காலத்தின் கட்டாயம், நான் யாரையும் குறை சொல்லவில்லை.ஓரு நல்ல உலகப்படம் எப்படி இருக்க வேண்டும்?

கதையினை நம்பி இருக்க வேண்டும், கதைக்களம் இயல்பானதாய் இருக்க வேண்டும், நடிகர்கள் கதையில் வாழ்ந்திருக்க வேண்டும், படம் பார்ப்பவர்களுக்கு முடிந்த வரை அவர்கள் மனதின் பழைய அனுபவங்களை தூண்ட வேண்டும், கொஞ்ச நாட்கள் மனதில் அப்படம் அசை போட்டபடியே இருக்க வேண்டும், அந்த வகையில் "அட்டக்கத்தி" ஒரு உலக சினிமாதான்.



எனக்கு தெரிந்த வரை எந்த ஆங்கில படத்தின் தழுவல் போல தெரியவில்லை. +2வில் தேர்ச்சி பெறாத நாயகன் உங்க ஊர்ல இருந்தா என்ன பன்னுவானோ அதைத்தான் இந்த பட ஹீரோவும் பன்றார், தினமும் கிளம்பி பஸ்ல தொங்கிட்டே போய் ஊர் மேய்ஞ்சிட்டு தொங்கிட்டே வர்ரார், அவங்களுக்கு இந்தியா வல்லரசாகிற லட்சியமா இருக்கும். காதலிச்சு கல்யாணம் பன்னனும்னுதான் லட்சியம் இருக்கும்.

படத்துல இயக்குனர் ஒரு 10 வருசத்துக்கு முன்னாடியான கதைக்களம்னு சொல்லிருக்கனும், ஏன்னா எங்கயும் செல்போன் வரவே இல்லை, மத்தபடி சூப்பர், அந்த மாதிரி பசங்களோட ஹேர்ஸ்டைல், ட்ரெஸிங் சென்ஸ் எல்லாமே சரியா இருக்கு, படத்துல எனக்கு பிடிச்ச விசயம் அப்பப்ப வந்து போற கானா பாட்டுதான்.

நான் தினமும் காலேஜ் போகும் போதும் ஒரு கூட்டம் வரும், கானா பாடாது, அந்த மாதிரி CD குடுத்து டிரைவர் அ போட சொல்லி தாளம் போடும், அவங்கவங்க ஆளுக்கொரு பிகரை வச்ச கண்ணு வாங்காம பார்த்துட்டு போவோம், திரும்ப போகும் போது பொன்னுங்க சாய்ஸ், வெறும் மெலோடிஸ் ஆ பாடும். 


ஹீரோ ஒரு ஸ்கூல் பொன்னுக்கு ரூட் விடறார், அதுவும் சிரிக்குது, பார்க்குது, லவ் அ சொல்ல போறான்னு தெரிஞ்சா கூப்பிட கூப்பிட நிக்காமயே போய்டுது, இதை நானும் அனுபவிச்சுருக்கேன், அப்புறம் தப்பிக்க வேற வழி? வழக்கம் போல அண்ணா இப்படி என் பின்னாடி வராதிங்கனு சொல்லிட்டு போய்டுது. அதுக்கு கொஞ்சம் கூட வருத்த படாம போன்டா திங்கும் போதே முடிவு பன்னிட்டேன், அட்டக்கத்தி நம்ம படம்னு.

அடுத்து அத்தைபொன்னு, புலி ஆட்டம் ஆடி, கானா பாடி, கண்ல ராக்கெட் எடுத்துனு ஏகப்பட்ட வித்தை காட்டுனா அது ஹீரோவோட அண்ணண்கிட்ட குடுக்க சொல்லி லெட்டர் குடுக்குது, அப்ப முடிவு பன்றார் நம்ம ஹீரோ, ஒவ்வொரு ஞாயிறும் இனிமேல் தினமும் கிரவுண்டுக்கு போகனும்னு நான் நினைக்கற மாதிரி இனி எந்த பொன்னு பின்னாடியும் சுத்தக் கூடாதுனு.


ஆச்சர்யம் பாருங்க, டெர்ரர் குருப்ல சேர்ந்து பொன்னுங்க பின்னாடி சுத்தாம, அட்டெம்ட் பாஸ் பன்னி காலேஜ் போய் "ரூட் தல" ஆகிடறார், விதி எங்க விடுது? எந்த ஸ்கூல் பொன்னு பின்னாடி சுத்தி பல்ப் வாங்குனாரோ அது அதே காலேஜ்க்கு வந்து இவர் போற பக்கமெல்லாம் வந்து லுக் விடுது.


அவனும் ஆண்மகன் தானே? அவனுக்கும் ஆசை வரத்தானே செய்யும், ஹீரோ கொஞ்சம் கொஞ்சமா கவுந்தடறார், நடுவுல ஒரு கதையை விட்டுட்டமே? கார்மென்ட்ஸ்க்கு வேலைக்கு போற 2 பிகர்ங்களை அவங்க ஏரியாக்கே போய் உஷார் பன்ன ட்ரை பன்னி அடி வாங்கிட்டு வந்து கராத்தே கத்துக்கற இடம் அருமை. இப்படித்தான் நாங்க ஒரு 16 பேர் கராத்தே கிளாஸ் போனோம்.


மனசுக்குள்ள காதல் முளை விட்டு வளர்ந்து பூ பூக்கறப்ப முன்னாடி கழன்டுட்டு போன ஒரு பிகர் (பீஸ்) பஸ்ல வச்சு உரசி உரசி தப்பு பண்ண தூண்டுனதுல ஆள் அசிங்கபட்டு வீட்டுக்கு வந்துடறார். திடிர்னு பார்த்தா ஹீரோயின் வீட்ல லவ் மேட்டர் தெரிஞ்சு அடைச்சு வச்சுடறாங்க.


அப்புறம் என்னா? சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போதான், க்ளைமாக்ஸ் அ சொல்லிட்டா சப்புனு போயிடும், பொன்னுங்க ஒருத்தரை காதலிச்சாலும் இன்னொருத்தன்கிட்ட உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்னு ரிசர்வ் பன்னி வச்சுருக்கும், ஆனா பசங்களுக்கு நாம கன்ஃபார்ம் டிக்கெட்டா? இல்லை வெயிட்டிங் லிஸ்ட்டானு? கடைசி வரைக்கும் தெரியாது.


படத்துக்கு யாருப்பா காஸ்ட்டிங்? எங்க இருந்துப்பா பொன்னுங்களை பிடிச்சிங்க? ஒவ்வொரு பொன்னும் தமிழன் சைட் அடிக்கறதுக்குனு ஆர்டர் பன்னி செஞ்ச மாதிரி இருக்கு. படத்தோட கேமரா மேன், தலைவா நீங்க தமிழ் சினிமாவுக்கு கட்டாயம் தேவை.


படத்துல நடிச்சுருக்க பொன்னுங்களுக்காகவே படத்தை 3 தடவை பார்க்கலாம், ஆர்ட்ஸ் காலேஜ்ல படிச்ச பசங்க வாழ்க்கைய பதிஞ்சுருக்காங்க, என்னமோ தெரியலை, படம் பார்த்ததுல இருந்து என் கூட படிச்ச பல பசங்களுக்கு போன் பன்னி பேசறேன், பழசுலாம் ஞாபகம் வருது, நல்லாதாங்க இருக்கு, வேற என்னா வேணும்?

படத்தோட ஹைலைட்டே ஹீரோ கடைசியா வாத்தியார் ஆகறதுதான், இந்த மாதிரி காலேஜ்ல பொறுக்கித்தனம் பன்றவங்கதான் வாத்தியார் ஆகிடறாங்க. நானும் வாத்தியார்தான்.

 என்ன இருந்தாலும் ஹீரோவ நம்பாம, தனியா ஒரு காமெடி டிராக் போடாம, பெருசா பாட்டையும் நம்பாம, அதுக்குனு நம்மளை அழ வைக்கற மாதிரி க்ளைமாக்ஸ் வைக்காம புதுசா ஒரு முயற்சிதானே இந்த படம், நாம ரசிக்காம வேற யாருங்க ரசிப்பா? படத்தை பாருங்க.


படத்தோட ட்ரெய்லர்



மறக்காம உங்க நண்பர்கள்கிட்ட பகிர்ந்துக்கங்க, பிடிச்சுருந்தா கீழ ஒரு ஓட்டை போடுங்க. ஏதாவது சொல்லனும்னு தோணுச்சுனா கருத்து தெரிவிங்க.

Comments

  1. செம...விரிவான விமர்சனம்....

    ReplyDelete
  2. "பொண்ணுங்க ஒருத்தரை காதலிச்சாலும் இன்னொருத்தன்கிட்ட உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்னு ரிசர்வ் பன்னி வச்சுருக்கும்"

    இதுல உண்மை இருக்கு. என் அனுபவம் அல்ல எனது நண்பண் ஒருவனின் அனுபவம்.

    ReplyDelete
  3. சிறப்பான விமர்சனம்! நன்றி!

    இன்று என் தளத்தில்
    அஞ்சு ரூபாய் சைக்கிள்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_20.html

    ReplyDelete
  4. சுவாரஸ்யமான கதையாத் தெரியுது. விமர்சனங்கள் படிக்கும் போது படமும் ஓகே போலத் தான் தெரியுது. டிவிடி வரட்டும்.

    ReplyDelete
  5. hai sir i am P.VARADARAJ maduraiyila film institute padikkiran unga ulaga cinema vimarasam and unga web site
    padichen sir ellamae super sir and then nan midhi vandinu oru short film pannirukken sir pls padam parthu comment paanuunga sir
    film you tube link http://www.youtube.com/watch?v=W_pH0qWGhHw
    YouTube - Videos from this email

    ReplyDelete
  6. kamal.kamal916@gmail.com mysir gmail i d

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இவங்களுக்கெல்லாம் பெரிய புத்திசாலினு நினைப்பு?

கலாய்ச்சுட்டாராமாம்...

Indiana Jones And The Temple Of Doom திரை விமர்சனம்