- மழைச்சாரல்: Indiana Jones And The Temple Of Doom திரை விமர்சனம்
expr:class='"loading" + data:blog.mobileClass'>

Friday, 24 August 2012

Indiana Jones And The Temple Of Doom திரை விமர்சனம்

அன்பர்களுக்கு வணக்கம், நமக்கு எப்பவுமே ஒரு படத்தை பார்த்தா அதோட முதல் பார்ட்லருந்து பார்த்தாதான் புரியும், இல்லைனா சும்மாவே அவங்க பேசற இங்கிலிஸ் புரியாது, இதுல யாருக்கு யார் என்ன உறவுனு தெரியலைனா விளங்கவே விளங்காது. அதான் INDIANA JONES படத்தோட எல்லா பார்ட்டையும் எடுத்து வச்சு ஒவ்வொன்னா பார்த்துட்டு இருக்கேன். இப்படத்தின் முதல் பாகம் விமர்சனம் படிக்க...


இதோட 2 வது பார்ட் Indiana Jones And The Temple Of Doom, கதைக்களம் நம்ம இந்தியா, வழக்கம் போல முதல்ல வில்லன்கிட்ட சண்டை போட்டு ஹீரோயிசம் காட்டி தப்பிக்கும் போது செவனேன்னு பாடிகிட்டு இருந்த ஹீரோயின இழுத்துகிட்டு ஒரு ஃப்ளைட் ல ஏறிடறார். கொடுமை என்னன்னா அந்த ஃப்ளைட் வில்லனுக்கு சொந்தமானது.

பாதி வழில பெட்ரோல் அ பிடிங்கி விட்டுட்டு பைலட் 2 பேரும் இருக்கற பாரசுட்லாம் எடுத்துகிட்டு குதிச்சுடறாங்க, இருக்கற போட் ல குதிச்சு தப்பிக்கறாங்க, அப்புறம் தான் அவங்க வந்து சேர்ந்துருக்க இடம் இந்தியானு தெரிய வருது.


நம்ம ஆர்க்கியாலஜிஸ்ட் ஹீரோ, அழகான ஹீரோயின், அவங்களுக்கு கூட வர்ர குட்டிப்பையன் 3 பேரும் ஒரு கிராமத்துக்கு போய் டெல்லிக்கு போக வழி கேட்க, அவங்க முதல்ல காணாம போன சிவலிங்கத்தை கண்டு பிடிச்சு தர சொல்றாங்க, அதை கண்டுபிடிக்கத்தான் கடவுள்  3 பேரையும் இங்க வரவச்சதா சொல்றாங்க.


சரி குழந்தைங்களையும் கடத்திட்டாங்கனதும் ஹீரோக்கு கோபம் பொத்துகிட்டு வந்து வில்லன்களை தேடி அவங்க இருக்க கோட்டைக்கு போறார். அங்க ஒரு விருந்து வைக்கறானுங்க பாருங்க, பார்த்திங்கனா சாப்பிடவே மனசு வராது, பாம்பு, பல்லி, தேள், குரங்கு மூளை, மனுசன் கண்னுன்னு விதவிதமா சமைச்சுருப்பாங்க.

நைட் ஹீரோயின் கூட ஊடல்ல ஹீரொ தனியா வந்து படுக்கறப்ப வில்லன் கொலை பன்ன வர்ரதும், அடுத்து ஹீரோயின் ரூம்ல யாராவது இருக்காங்களானு தேடும் போது ஹீரோயின் நான் இங்க இருக்கன்னு சொல்றதும், அங்க இருக்க பெண் சிலையோட மார்ப அழுத்தனதும் ஒரு கதவ திறந்து ஹீரோ சுரங்க பாதைல போறத பார்த்து, ஹீரோயின் தயங்கி தயங்கி இன்னொரு சிலையோடத அழுத்தறதும் டைரக்டர் டச்.


கோட்டையோட மகராஜாவ கரெக்ட் பன்னிடலானு நினைச்சுட்டு இருக்க ஹீரோயின் சின்ன பையனை ராஜாவ பார்த்ததும் குடுக்கற ரியாக்சன் சூப்பர், நரபலி குடுக்கறதுக்கு போட்டுருக்க செட் அருமையா இருக்கு, எதிர்பார்க்காத நேரத்துல ஷாக் குடுக்க எப்படித்தான் யோசிக்கறாங்களோ?


ஏதோ ஒரு ரத்தத்தை குடிக்க வச்சு ஹீரோவ வில்லனாக்கறதும் சின்ன பையனை கட்டி வச்சு அடிமையாக்கறதும், ஹீரோயின் அ நரபலி குடுக்க முயற்சி பன்றதும் இது எல்லாத்தலருந்தும் தப்பிச்சு ஏகப்பட்ட அட்வெஞ்சர் செஞ்சு எப்படி எல்லா அடிமைங்களையும் காப்பாத்தி அந்த சிவலிங்கத்தை அந்த ஊருக்கு ஹீரோ கொண்டு போறார்னு படத்தை பார்த்து தெரிஞ்சுக்கங்க.

வெள்ளைக்காரங்க பார்வையில இந்தியா எப்படினும் பொம்மைல பில்லி சூன்யம் வைக்கறதும் நரபலி குடுக்கறதும் இந்த படத்துலருந்து சுட்டுதான் பல தமிழ் படங்கள் எடுத்துருப்பாங்க போல, ADVENTURE பட விரும்பிங்க கண்டிப்பா இந்த படத்தை பார்க்கனும்.

படத்தோட ட்ரெய்லர்இந்த பதிவு பிடிச்சுருந்தா ஓட்டு போட்டு நண்பர்கள்கிட்ட பகிர்ந்துக்கங்க, ஏதாவது குறை இருந்தா பின்னூட்டத்துல தெரிவியுங்க.

2 comments:

  1. இந்தப்படமா, முதல் படமான்னு தெரியல. சின்ன படகுல ஆற்றில் சிக்கி இந்தியாவுல ஒரு கிராமத்திற்குள்ள போறதா காட்டியிருப்பாங்க. ஆனா அந்த கிராமத்தவங்க பேசுறது சிங்கள மொழியாக இருக்கும். :-)

    ReplyDelete
    Replies
    1. இந்த படம் தான், நாம subtitle ல பார்க்கறப்ப பேசறது எந்த மொழினுலாம் பார்க்கலைங்க, வாசித்தமைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete