- மழைச்சாரல்: லல்லு யாதவ்வின் கொள்ளு பேரன் - காலேஜ் டைரி 6
expr:class='"loading" + data:blog.mobileClass'>

Thursday, 16 August 2012

லல்லு யாதவ்வின் கொள்ளு பேரன் - காலேஜ் டைரி 6

அன்பர்களுக்கு வணக்கம், என்னடா தலைப்பு கொஞ்சம் வித்தியாசமா இருக்கேன்னு பார்க்கறிங்களா? வெறுமனே தலைப்ப பார்த்துட்டு படிக்க ஆரம்பிச்சிங்கனா உங்களுக்கு சத்தியமா புரியாது. முதல் பதிவுல இருந்து படிச்சுட்டு வாங்க.

இன்னைக்கு நம்ம காலேஜ் டைரில பார்க்க போற ஆள் சாதாரணமானவர் இல்லை, அவருக்கு சென்ட்ரல் வரைக்கும் பவர் இருக்கு, அவர் கை காட்டுனா எக்ஸ்பிரஸ் ரயிலே நிக்கும்ங்க, அவ்வளவு ஏன்? நம்ம முன்னாள் ரயில்வே மந்திரி லல்லு பிரசாத் யாதவ்க்கு 24 விட்ட பேரான்டி.


நான் 2 வது செமஸ்டர் காலேஜ் போனதும் எனக்கு ஒரு கண்டம் வந்தது, சாதாரணமானது இல்லைங்க, கொஞ்சம் பெருசு, எங்க க்ளாஸ் இன்சார்ஜ் மானிக்க வேல் சார் 4 பேர் இருக்க மாதிரி குருப் ஃபார்ம் பன்னிக்க சொன்னார், நானும் எதுக்கும் வசதியா இருக்கட்டும்னு கடைசி பெஞ்ச்ல இருக்க நான், நிவாஸ், கைப்புள்ள, நம்ம லிட்டில் பாண்டுனு ஒரு குருப் ஃபார்ம் பன்னேன்.


கடைசியாதான் தெரிஞ்சது அவர் குருப் ஃபார்ம் பன்ன சொன்னது செமினார் எடுக்கறதுக்குனு, 4 பேர் சேர்ந்து எடுக்கனுமாம், எந்த டாபிக் வேணும்னாலும் எடுத்துக்கலாமாம், நிவாசும் கைப்புள்ளையும் அப்படி செமினார் எடுத்துதான் இந்த காலேஜ்ல படிக்கனும்னா எனக்கு இந்த காலெஜ் வேண்டாம்னு முடிவு எடுத்துட்டானுங்க, போறவனுங்க சும்மா இல்லாம எங்களை வேற மாட்டி விட பார்த்தாங்க.

கடைசி நாள் சம்பத் ஏதோ நெட்ல இருந்து HIGHER STUDIES IN ABROAD னு ஒரு பேப்பர் முழுக்க இங்கிலிஸ்ல இருக்க மாதிரி என்னமோ எடுத்து குடுத்தான், நானும் குல தெய்வத்து மேல பாரத்தை போட்டுட்டு ஸ்டேஜ் ஏறி அப்படியே அச்சு பிசறாம தப்பு தப்பா படிச்சேன், கடைசியா கவனிச்சுட்டு இருந்த மா.வேல் சார் ஒரு கேள்வி கேட்டார் பாருங்க.

"WHAT IS MEAN BY ABROAD? TELL ME SOME COURSES NAME?"னு

எனக்கு ஏதோ 2 உருண்டை அடி வயத்துலருந்து கழுத்துகிட்ட வர்ர மாதிரி இருந்தது, அதை அப்படியே முழுங்கிட்டு 

"ANY DOUT ASK MY PARTNER"னு

சொல்லிட்டு உட்கார்ந்தேன், அப்படி நான் பார்ட்னர்னு சொல்லி அறிமுகப் படுத்துன லிட்டில் பாண்டுவ அதுக்கு அப்புறம் கிளாஷ்ல பல பேர் பார்ட்னர்னு கூப்பிட ஆரம்பிச்சாங்க.

அவர் ஆரம்பத்துல கண்ணாடி போட்டு போட்டு எல்லா பொன்னுங்களும் வயசான மாதிரி ஆண்டியா அவர் கண்ணுக்கு தெரியறதா சொன்னவர் கடைசியில கண்ணாடிய கழட்டனதும் ஆண்டிங்களாம் பொன்னுங்க மாதிரி தெரியறதா சொல்ல ஆரம்பிச்சுட்டார். இவருக்கும் NANDI ங்கற வார்த்தைக்கும் ஏதோ ஒரு பெரிய ரகசிய தொடர்பு இருக்கு, அது இன்னமும் யாருக்கும் தெரியாத ஒரு தங்கமலை ரகசியம்.

நாங்க கடைசியா படிச்ச வருசத்துக்கு சிம்போசியம்க்கு காசு குடுக்காம ஏமாத்துன 4 பேர்ல இவர்தான் முதல் ஆள், கஷ்டபட்டு BOXER வண்டி வாங்கி ஓட்டக் கத்துகிட்டு பாக்ஸர் ஆகனும்னு ஆசைப்பட்டார், முடியலை. நான் பக்கத்துல உட்கார்ந்து தூங்கும் போது செவனேன்னு வேடிக்கை பார்த்துட்டு இருந்த கைப்புள்ளைய பளார்னு அறைஞ்சான்.

"ஏன்டா?"னு கேட்டதுக்கு "சும்மா டைம் பாஸ்க்கு"னு சொல்லி என் தூக்கத்தை தெளிய வைப்பான். நம்ம சிவில் கந்து வட்டிகாரனுக்கு வெள்ளிக்கிழமையான இவர்தான் பார்ட்னர், பயபுள்ளைங்க ஒரு டப்பிங் படத்தை கூட விடாம முதல் நாளே போய் பார்ப்பானுங்க.

கல்லறைத்தீவு, வெறி பிடித்த ஓநாய், மர்மக் காடுனு ஒரு படம் விடாம பார்ப்பானுங்க, பார்த்துட்டு வந்து கூசாம நல்லாருக்குனு பொய் சொல்லுவாங்க.

ஏதோ ஒரு டிபார்ட்மென்ட் ஃபங்சன் அப்போ, சிம்போசியம்னு நினைக்கறேன், அதுக்கு பணம் வசூழ் பண்ணி கஷ்டபட்டு வேலை செஞ்ச சஞ்சய்ங்கறவன் புதுசா ஒரு மொபைல் வாங்கிட்டு வந்துருந்தான், அதுக்கு அவன் காதுல விழற மாதிரி "எனக்கென்னமோ இவன் ஊழல் பண்ணி சம்பாதிச்சுருப்பான்னு தோணுது"னு சொல்லிட்டு நகர்ந்துட்டான்.

அந்த பக்கம் வந்த சம்பத் தான் அப்படி சொன்னான்னு அவன் கேங்க் சம்பத் கூட சண்டை போட்டுகிட்டு இருக்கு, பக்கத்துலயே உட்கார்ந்துகிட்டு வேடிக்கை பார்த்துட்டு இருந்தானே ஒழிய நான் தான் சொன்னேன்னு ஒரு வார்த்தை கூட சொல்லலை. இந்த உண்மை இப்பதான் வெளிச்சதுக்கு வருது.


இவர் தினமும் 2 லிட்டர் பால் குடிப்பார், இவருக்கு பாண்டு பன்ற ஆ............ன் மிமிக்ரி நல்லா வரும், அதனாலேயே இவரை நாங்க செல்லமா லிட்டில் பாண்டுனு கூப்பிடுவோம்.

இவரை பத்தி எழுத சொல்லி 4 பக்கத்துக்கு மேட்டர் குடுத்தது இவர் உயிருக்கு உயிரா நம்பிகிட்டு இருந்த இவரோட பார்ட்னர் தான்னு சபையில தெரிவிச்சுக்கறங்க, அந்த பார்ட்னர் சொன்னதெல்லாம் எழுதுனா யாரும் பொன்னு குடுக்க மாட்டாங்கனு மறைச்சுட்டேன்.

ஏப்பா லல்லு, போன் பன்னா எடுக்க மாட்டேங்கறியாமே? ஏகப்பட்ட கம்ப்ளைன்ட்ப்பா உன் மேல?

அடுத்த பதிவு யாரை பத்தி போடலாம்னு நீங்களே சொல்லுங்க.

1 comment:

  1. dai enna pathi konjam podhthu.....enna da solaren parpom........

    ReplyDelete