- மழைச்சாரல்: கேலி கூத்தாகிய கிறிஸ்துவ மத பிரச்சாரம் ? கண்டுகொள்ளாத மீடியா?
expr:class='"loading" + data:blog.mobileClass'>

Saturday, 4 August 2012

கேலி கூத்தாகிய கிறிஸ்துவ மத பிரச்சாரம் ? கண்டுகொள்ளாத மீடியா?

அன்பர்களுக்கு வணக்கம், நான் நாஸ்தீகன் இல்லை என்பதையும் தினம் தவறாமல் கடவுளை வணங்குபவன் என்பதையும் முதலிலேயே தெரிவித்து கொள்கிறேன். அதே நேரத்தில் எனக்கு எல்லா மதத்திலும் நணபர்கள் உள்ளனர். ஒவ்வொரு புது வருட பிறப்பிற்கும் தவறாமல் சேலம் குழந்தை யேசு பேராலயத்திற்கு செல்பவன். மிகவும் தனியனாய் உணரும் போதும் அங்குதான் செல்வேன். ஆனால் மதத்தின் பெயரினை சொல்லி மக்கள் பணத்தை கொள்ளையடிப்பவர்கள் எந்த மதத்தில் இருந்தால் என்ன? உண்மையை பகிர்ந்து கொள்வதில் எனக்கு எந்த பயமும் இல்லை.
 
கேலி கூத்தாகிய கிறிஸ்துவ மத பிரச்சாரம் ? இந்துமதத்தை மட்டும் போட்டு தாக்கும் மீடியாக்கள் ....


நித்தியானந்த ,காஞ்சி சங்கராச்சாரியார் போன்ற இந்து மதத்தை சார்ந்த வர்கள் இவர்கள் பகிரங்க குற்ற பின்னணியில் இருகிறார்கள் என்பது உண்மை .. பல மோசடிகள் செய்து மக்களை ஏமாற்றும் மற்ற மத தலைவர்களை மீடியாக்கள் கண்கொள்ளததன் நோக்கம் என்னவோ ?

ஒரு சில குற்றங்கள் உங்களுக்காக ..கீழே !!
ஒரு காலத்தில் கிறிஸ்த்துவத்தை பரப்ப வெளி நாடுகளில் இருந்து தங்கள் சொத்து சுகத்தை எல்லாம் விட்டு இந்தியாவிற்கு வந்து கிறிஸ்த்துவத்தை பரப்பி தன் உயிரை விட்டவர்களும் உண்டு. ஆனால் இன்று இருக்கும் ஆன்மிகவாதிகளோ மதத்தை பரப்புகிறேன் என்று கூறி வசதியையும் செல்வாக்கையும் அடையவே ஆன்மிகத்தை தேர்ந்தெடுக்கின்றனர். பத்து ஆண்டுகளுக்கு முன்பு வானொலியில் கிறிஸ்த்துவத்தை பரப்பவும், பிரசங்கம் செய்யவும் தொடங்கிய JESUS CALLS டிஜிஎஸ் தினகரன் குடும்பத்தினரின் வாழ்க்கை இன்று இந்தியாவில் உள்ள அனைத்து தொலைக்காட்சிகளிலும் இவர்களுடைய நிகழ்ச்சியை மொழிபெயர்த்து வெளியிடும் அளவுக்கு வளர்ந்துவிட்டனர்.


தீர்க்கதரிசனம் சொல்வது:
ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் இவர்கள் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்வார்கள், அந்த கூட்டத்தை கூட்ட இவர்கள் சொல்லும் வார்த்தை "இந்த ஆண்டுக்கான தீர்க்கதரிசனம்" வழங்குகிறார் பால்தினகரன் என்பதுதான். அந்த கூட்டத்தில் கடவுள் இவர் காதில் இந்த ஆண்டு என்னென்ன நடக்கப்போகிறது என்று சொன்னார் என்று ஒவ்வொன்றாக சொல்வார்(ஆடியில காத்தடிக்கும், ஐப்பசில மழையடிக்கும்னு). பொத்தாம் பொதுவாக சொல்லுவார். குறிப்பாக எதையும் சொல்லமாட்டார். கடவுளுக்கு வேற வேலை இல்லையா? இவர் காதில் இந்த ஆண்டு என்னென்ன நடக்கப்போகிறது என்று சொல்வதுதான் வேலையா?. அப்படி உண்மையில் கடவுள் இவர் காதில் வந்து நடப்பதை முன்கூட்டியே சொல்கிறார் என்றால் பேரழிவுகளை பாற்றி சொல்ல வேண்டியது தானே, மக்களாவது உயிர்ப்பிழைப்பார்கள் அல்லவா இல்லை இவர்கள் அப்பா இறப்பதையாவது முன்கூட்டியே சொல்லி இருக்கலாமே? இவரின் சகோதரி ஏஞ்சலை கர்த்தர் ஏன் காப்பாற்றவில்லை? டிஜிஎஸ் தினகரன் ஏன் மூட்டுவலிக்கு மருத்துவமனைக்கு ஆபரேஷன் செய்துகொள்ள வேண்டும்.


ஜெப உதவிக்கு தொலைப்பேசியில் தொடர்புகொள்வது
உண்மையில் மதத்தை பரப்புபவன் தனக்கு ஏதேனும் ஆபத்து, கஷ்ட்டம் வரும்போது கடவுளிடம் பிரார்த்திக்கவேண்டும் என்றுத்தான் பிரசங்கம் பண்ணுவான். ஆனால் இந்த கொள்ளை கூட்டமோ உங்களுக்கு எந்த ஒரு கஷ்ட்டமாக இருந்தாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் உங்களுக்காக பிரார்த்திக்கிறோம் என்று தொலைக்காட்சிகளிலும், புத்தகங்களிலும் தங்களுடைய தொலைபேசி எண்ணை விளம்பரப்படுத்துகின்றனர். தனக்காக இன்னொருவன் பிரார்த்தித்தால் கடவுள் கேட்டுவிடுவாரா?

பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பிரார்த்தனை:
ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பிரார்த்தனை நடத்துகிறேன் என்று பள்ளி மாணவர்களை அழைத்து கட்டாய காணிக்கை பெற்று வருகின்றனர். அது என்ன கட்டாய காணிக்கை என்று கேட்க்குறிங்களா? ஆம் அவர்கள் ஏற்பாடு செய்திருக்கும் கூட்டத்திருக்கு வந்திருக்கும் மாணவர்களை ஒரே நேரத்தில் எழுந்து நிற்கச்சொல்லி அவர்கள் காணிக்கை அளித்தப்பின் அமரச்சொல்வார்கள் அங்கே வந்த மாணவர்கள் வேறு வழி இல்லாமல் காணிக்கை செலுத்தியபின்தான் அமருவார்கள்.

இவர்களுடைய அப்பா நோய்வாய் பட்டு இறந்தபோது இவர் மற்றவர்களுக்கு ஜெபம் செய்து சுகமளிக்கிறேன் என்று தொலைக்காட்ச்சியில் சொல்லி பிரசங்கம் செய்வதை எப்படி எடுத்துக்கொள்வது?

கும்பகோணம் தீவிபத்தால் இறந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஆறுதல் சொல்கிறேன் என்று ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து அங்கே வந்த குழந்தையை இழந்த பெற்றோர்களின் கதறலையும் அழுகையையும் வீடியோ எடுத்து அதையும் vcd போட்டு விற்ற ஒரு பயங்கரமான கொள்ளை கும்பல் தான் இவர்கள். அங்கே இவர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திருக்கு வந்த பெற்றோர்கள் தங்களுக்கு ஒரு மன நிம்மதி கிடைக்கும் என்றுதான் வந்து அழுது புலம்பினர். ஆனால் இவர்கள் அவர்கள் அழுவதையும் அவர்களுக்கு பால்தினகரன் ஆறுதல் சொல்வதையும் வீடியோ எடுத்து வியாபாரமாக்கி பணம் சம்பாத்தித்தனர். இது ஒரு உதாரணம் மட்டும்தான் இன்னும் பல மோசடிகள் உள்ளன இவர்கள் ஏற்பாடு செய்யும் ஒவ்வொரு கூட்டத்திற்கும் வரும் மக்களை அழைத்து அவர்களுடைய் நிலையை கேட்பது போலவும், அவர்கள் அழும்போது ஆறுதல் கூறுவது போலவும் நடித்து அதை வீடியோவாக எடுத்து தொலைக்காட்சியில் வெளியிடுகின்றனர், இதைப்பார்ப்பவர்கள் மனம் உருகி காணிக்கை அனுப்புவார்கள் என்று.கிறிஸ்த்துவத்தை பரப்பிகிறேன் என்று கூறிக்கொண்டு கடவுள் படத்தை எதிலும் காட்டாமல் இவர்களுடைய புகைப்படத்தைத்தான் இவர்களுடைய அலுவலகத்திலும்,

தொலைக்காட்சியிலும், மாத இதழ் புத்தகத்திலும் வெளியிடுகின்றனர். அதேப்போல் மக்களுக்கு ஏதேனும் ஒரு பிரச்சனை என்றால் கூட கடவுளிடம் ஜெபம் செய்யுங்கள் என்று பரிந்துரைப்பது இல்லை எங்களிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொள்ளுங்கள், கடிதம் எழுதுங்கள் என்றுத்தான் பரிந்துரைக்கின்றனர். இன்னும் சில ஆண்டுகளில் கடவுள் இல்லை நாங்கள் தான் கடவுளின் மறு அவதாரம் என்று சொன்னாலும் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை.

உண்மையை உரக்க சொல்வோம், காதுள்ளவர்கள் கேட்க கடவர்.

நன்றி: உலக தமிழ் மக்கள் இயக்கம்.

நண்பர்களே நான் கூறும் கருத்தில் உண்மை இருப்பின் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

2 comments:

  1. உண்மையான கருத்துக்கள்! எனக்கும் கிறித்தவ நண்பர்கள் உண்டு! அவர்களும் இதை வெறுக்கிறார்கள்!
    எல்லா மதத்திலும் இப்படி சிலர் உண்டு போல!

    ReplyDelete
  2. True Lord Jesus says please pray for others.Lord says," before any incidents going to be happened god let his prophets" > Before write anything kindly understand the fact.Someone may go wrong as all the men are human being.But do not criticize all people of god.

    ReplyDelete