- மழைச்சாரல்: உங்கள் வீட்டிற்கு இலவசமாய் A/C வேண்டுமா?
expr:class='"loading" + data:blog.mobileClass'>

Saturday, 11 August 2012

உங்கள் வீட்டிற்கு இலவசமாய் A/C வேண்டுமா?

அன்பர்களுக்கு வணக்கம், நாளுக்கு நாள் உலக வெப்ப மயமாதல் அதிகமாகிக் கொண்டே போகிறது, கோடைக் காலங்களில் வீடுகளில் உட்காரவே முடிவதில்லை, அதிலும் மின்வெட்டு நேரங்களில் என்னதான் UPS உபயோகித்தாலும் பாம் வெடிப்பதற்கு கவுண்ட்  டவுன் இருப்பதை போல எப்ப சார்ஜ் குறையும்னு பார்த்துகிட்டே இருக்கனும்.

 

 இயற்கையா வீட்டை குளிர வைக்கலாம்னா வீட்டை சுத்தியும் மரம் நடனும், ஆனா இப்ப இருக்க இட நெருக்கடில அது முடியாது. இணையத்துல அப்படியே மேய்ஞ்சுகிட்டு இருந்தப்ப எனக்கொரு விசயம் தெரிய வந்தது. அதை உங்ககிட்ட  பகிர்ந்துக்க விரும்பறேன். 

இப்ப இருக்க மின்சார பிரச்சனைக்கு சோலார்தான் தீர்வுங்கறது பத்தி ஏற்கனவே ஒரு பதிவு போட்டேன். படிக்காதவங்க படிச்சுருங்க. ஆனா சோலர்ல இருக்க ஒரு பெரிய பிரச்சனை அதை அமைக்கறதுக்கு ஆகற செலவும் அது இன்னமும் தாராளமா மார்க்கெட்டுக்கு வரலைங்கறதுதான். இப்ப அதுக்கு ஒரு மாற்று ஏற்பாடு இருக்கு.

நம்ம வீட்டு மொட்டை மாடிய வாடகைக்கு விடலாம். யாருக்குனா BRIDGE TO INDIA நிறுவனத்துக்கு, அவங்க என்ன பன்னுவாங்கனா நம்ம மொட்டை மாடில சோலார் பவர் பிளான்ட் அ நிறுவிடுவாங்க, அதுலருந்து தயாரிக்க படுற மின்சாரத்தை அவங்க எடுத்துப்பாங்க. நமக்கு தனியா அதுக்கு வாடகையும் குடுக்கறாங்க.

நமக்கு ஒரு பைசா செலவு இல்லை, வாடகை வேற தனியா வருமானமா வருது, இதை விட நமக்கு முக்கியமான இன்னொரு நன்மை இது மூலமா கிடைக்கும்.

FOR ROOFTOP OWNERS

அந்த காலத்துல ஓட்டு வீடுங்கள்ள பார்த்திங்கன்னா கோடை காலத்துல தென்னை ஓலை பின்னி ஓட்டு மேல போட்டுடுவாங்க, எதுக்குனா அது வெப்பத்தை முழுக்க தனக்குள்ள இழுத்துகிட்டு வீட்டுக்கு குளுமைய தரும், சோலார் அ நம்ம வீட்டுக்கு மாடில பதிச்சம்னாலும் அதேதான் நடக்கும், வெயிலோட தாக்கம் சுத்தமா குறைஞ்சு வீடே AC  போட்ட மாதிரி ஆகிடும்.

எதுக்கு தனியா செலவு பன்னி AC போட்டு அதுக்கு தனியா கரண்ட் பில் கட்டிகிட்டு, அதுலருந்து வர கேஸ்னால ஓசோன்ல ஓட்டை விழுந்துகிட்டு எல்லா விதத்துலையும் பிரச்சனை பன்னாம இருக்கற சோலார் அ பயன் படுத்தலாமே.இந்த மாதிரி நல்ல விசயங்களை உங்க நண்பர்கள்கிட்ட பகிர்ந்துக்கங்க.

2 comments:

 1. வருங்காலத்தில் இவைகள் தான் மனிதனுக்கு மிகவும் பயன் தரப் போகின்றன... நல்ல பகிர்வு... பாராட்டுக்கள்...

  தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

  ReplyDelete
 2. அட நல்ல ஐடியாவா இருக்கே!

  இன்று என் தளத்தில்
  இதோ ஒரு நிமிஷம்!
  மணிப்பூர் மகாராணியும் அம்மன் வேஷக்காரியும்!
  http://thalirssb.blospot.in

  ReplyDelete