- மழைச்சாரல்: வெள்ளைக் குயிலை கண்டறிந்த விஞ்ஞானி - காலேஜ் டைரி 5
expr:class='"loading" + data:blog.mobileClass'>

Friday, 3 August 2012

வெள்ளைக் குயிலை கண்டறிந்த விஞ்ஞானி - காலேஜ் டைரி 5

அன்பர்களுக்கு வணக்கம், எனது கல்லூரி வாழ்க்கையில் என்னுடன் வாழ்ந்த சில நண்பர்களை காலேஜ் டைரி வாயிலாக அறிமுகம் செய்து வைத்துக் கொண்டிருக்கிறேன், அதில் நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது ஒரு முக்கியமான ஆளை, அவரது பெயரை கூறுவதற்கு எனக்கு எந்த தயக்கமும் இல்லை, ஏன் அவரே தாராளமா எழுதிக்கோ என்றுதான் கூறினார், ஆனால் அவரது பெயரிலேயே என் வகுப்பில் 3 பேர் படித்ததால் அவர்கள் வீட்டில் குழப்பம் வந்து விட கூடாது என்பதற்காக பேரைக் கூறாமல் எழுதுகிறேன், அவர் யார் என் கூற ஒரு அடையாளச் சொல் உள்ளது, அது ஒரு பறவையின் பெயர். குயில். சோனாக் கல்லூரியில் 2008 ஆம் வருடம் படித்து முடித்தவர்கள் அனைவருக்கும் இவரினை நன்றாக தெரியும்.


முந்தைய பதிவுகளை படிக்காதவங்க படிச்சுருங்க, இல்லை புரியாது.
சோனா கல்லூரிக்கு வந்த கெட்ட காலம்- காலேஜ் டைரி பாகம் 1

ஒரு முறை அனைவரும் தேர்வுக்கு அவசரமாக படித்துக் கொண்டிருந்த போது ( சேச்சே நான் இல்லைங்க, மத்தவங்க), இவர் வந்து காமெடி பன்னுவதாக நினைத்துக் கொண்டு வெள்ளையாக இருந்த புறாவினை பார்த்து குயில் எவ்வளவு அழகாக இருக்கிறது என்று சொல்லியதால் அன்று முதல் இவர் அனைவராலும் குயில் என்று அன்பாக அழைக்கப்பட்டார்.


இவருடைய சிறப்புகள் பல உள்ளன. முதல் விசயம் இவர் கவுண்டமணியின் தீவிர ரசிகர், நடப்பது, பேசுவது அனைத்திலும் கவுண்டரை பார்க்கலாம், கல்லூரியில் ஏதாவது ஒரு பிரச்சனையின் ஆரம்பத்தின் போது இவர் பக்கத்தில் இருந்தால் பாதியிலேயே காணாமல் போயிருப்பார்.

ஆனால் இவருடைய ஸ்பெசலில் எனக்கு பிடித்தது என்னவென்றால், காலேஜ் கட் அடித்து விட்டு படத்துக்கோ வீட்டுக்கோ போகாமல் சேலம் ரயில்வே ஜங்சனுக்கு போய் மும்பை எக்ஸ்பிரஸ் வரும் நேரத்திற்கு சேட்டு பொன்னுங்களை சைட் அடிக்க கற்று குடுத்தது. அதே போல் வெள்ளிக்கிழமை முதல் நாள் படத்துக்கு போகும் வெட்டாபீஸ் வெங்கடசாமி இவர்தாங்க.

போன பதிவில் குறிப்பிட்டுருந்த நண்பனுக்கு எல்லா விதத்திலும் இவர்தான் கம்பெனி, ஆனா 2 பேரும் தினமும் சண்டை போட்டுக்குவாங்க. இவர் வீட்டில எனக்கு பேர் சிலோன் மாப்பிள்ளை தான்.

இவங்க வீட்டு சமையல் அருமையா இருக்கும், இவன் டிபன் பாக்ஸ் அ காலி பன்ன போட்டியே நடக்கும், இவங்க அம்மாகிட்ட நல்லா சமைக்க தெரிஞ்ச பொன்ன பாருங்கனு சொன்னதுக்கு சிலோன்ல பார்த்துருவோம்னு சொன்னதுலருந்து நான் சிலோன் மாப்பிள்ளை ஆகிட்டேன்.

இவனை பார்த்தா காலேஜ்ல பல பொன்னுங்க தெறிச்சு ஓடுவாங்க,  அவங்களை பொறுத்த வரைக்கும் இவர் ஒரு ஆனந்த் ராஜ், மன்சூர் அலிகான் மாதிரி டெர்ரரிஸ்ட், செமயா ஓட்டி விட்டுருவான்.

ஆனா கடைசியா காலேஜ் முடியற வரைக்கும் ஒரு கல்யாணம் ஆகாத பொன்னை கூட இவர் ஏறெடுத்து பார்க்கலைங்கறதுதான் இவரோட ஸ்பெசாலிட்டி.

இன்னொரு நண்பரை பத்தி அடுத்த பதிவுல சொல்றேன்.

2 comments:

  1. இனிய அனுபவத்தை பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி...

    தொடருங்கள்...

    ReplyDelete
  2. சிறப்பான நினைவுகள்!

    இன்று என் தளத்தில் இப்படித்தான் சாவேன்! பாப்பாமலர்!http://thalirssb.blogspot.in

    ReplyDelete