- மழைச்சாரல்: INDIANA JONES AND THE LAST CRUSADE- விமர்சனம்
expr:class='"loading" + data:blog.mobileClass'>

Wednesday, 29 August 2012

INDIANA JONES AND THE LAST CRUSADE- விமர்சனம்

அன்பர்களுக்கு வணக்கம், நான் கடந்த நாட்களில் இல்லாத அளவுக்கு நான்கு நாட்களாக எந்த பதிவும் எழுதாமல் போனதற்கு பதிவர் சந்திப்பும், பவர் கட்டும் தான் காரணம், சரி அதை பற்றி தனிப்பதிவு போடுவோம். இப்ப நாம விமர்சனத்துக்கு வருவோம். நாம ஏற்கனவே INDIANA JONES படத்தோட முதல் மற்றும் இரண்டாவது பாகங்களை பார்த்துட்டோம். இன்னைக்கு பார்க்கப்போற படம் மூன்றாவது பாகம் INDIANA JONES AND  THE LAST CRUSADE.


உண்மையிலேயே ஜீராஸிக் பார்க் படத்துல வெறும் பிரம்மாண்டம் மட்டும்தான் தெரிஞ்சது, இந்த படங்கள்ளதான் இயக்குனரோட திரைக்கதை அமைக்கற திறமையும் அதை ஜனரஞ்சகமா சொல்ல அவர் பட்ட கஷ்டமும் புரியுது. ஏன் நம்ம நாட்டுல இது மாதிரி படம் வர மாட்டேங்குது?

இதுக்கு முந்தின பாகங்களை பார்த்தவங்களுக்கு ஹீரோவா நடிச்சுருக்க ஹாரிசன் ஃபோர்ட்க்கு என்ன கதாபாத்திரம்னு சொல்ல தேவை இல்லை, இருந்தாலும் இன்னொரு முறை சொல்லிடறேன், ஒரு வரலாறுல ஆர்வம் அதிகம் இருக்க அகழ்வாராய்ச்சில அப்பப்ப ஈடுபடறோதட இல்லாம நாட்டோட பொக்கிஷங்கள் வெளிய போயிட கூடாதுனு வம்பிழுக்கற ஆள்.

அவங்கப்பாவும் ஒரு அகழ்வாராய்ச்சியாளர். சின்ன வயசுல கெட்டவங்ககிட்ட பறி கொடுத்த ஒரு முக்கியமான சிலுவைய சண்டை போட்டு மியுசியம்க்கு திரும்ப கொண்டு வந்து சேர்க்கற ஹீரோவுக்கு அவங்கப்பாகிட்ட இருந்து ஒரு டைரி பார்சல்ல வந்துருக்கு. என்னமோ ஏதோனு குழம்பும்போது அவங்கப்பாவோட நண்பர்னு ஒருத்தர் வந்து பேசறார்.


இயேசு கிறிஷ்துவோட கடைசி விருந்துல அவரால பயன்படுத்தப்பட்ட கோப்பை ஒரு இடத்துல பத்திரமா இருக்கறதாவும் அதுல புனித நீரை குடிக்கறவங்களுக்கு மாறா இளைமையும் ஆரோக்கியமான வாழ்வும் கிடைக்கும்னு சொல்ல படுது, அந்த கோப்பைய பாதுகாக்கற 3 பேர்ல இறந்த 2 பேரோட கல்லறைல இருக்க சீல்ட்-ல அந்த கோப்பை எங்க இருக்குங்கற தகவல் இருக்குனு அதை தேடிகிட்டு இருந்த ஹீரோவோட அப்பாவ யாரோ கடத்திகிட்டு போய்ட்டாங்கனு சொல்றார்.


இப்ப நம்ம ஹீரோ அதை தேடி கிளம்பறார். எப்படி ஜேம்ஸ்பாண்ட் போற இடத்துல ஒரு பிகர் காத்துகிட்டு இருக்குமோ, அது மாதிரி பெர்லின்ல வரவேற்கற பொன்னு கூட சேர்ந்து முக்கியமான சில விஷயங்களை கண்டு பிடிக்கறார், அப்புறம் என்ன மேட்டர் தான், வழக்கம் போல வில்லன் குருப் துரத்த ஆரம்பிக்கறாங்க.


படத்துல எனக்கு பிடிச்ச விஷயம் ஹிட்லர் கேரக்டர் வர்ரதுதான், அப்பாவோட டைரிய எடுக்க ஜெர்மனி போற ஹீரோ கூட்டத்துல மாட்டிகிட்டு ஹிட்லர்கிட்ட ஆட்டோகிராஃப் வாங்கற சீன் கிளாஸ். நான் நினைச்ச மாதிரியே ஜெர்மனியதான் கெட்டவங்களா காட்டி இருக்காங்க. இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி குடுத்த ஹிட்லர் பத்தி தப்பா பேசறது எனக்கு பிடிக்கலை.

இதுக்கு முந்தின பாகங்களை விட இதுல நிறைய ஆர்வத்தை தூண்டற திருப்பங்கள் இருக்கு, அதுலயும் பறந்துகிட்டு சுட்டுகிட்டு இருக்க ஹெலிகாப்டர் அ ஹீரோவோட அப்பா, கறுப்பு குடைய வச்சு புறாவ விரட்டி வெடிக்க வச்சு அந்த குடைய பிடிச்சுகிட்டு நடந்து வர்ர சீன் மாஸ்.


சில விஷயங்கள் ரகசியமாதான் இருக்கனும், சில விஷயங்கள் வெளிய வராத வரைக்கும் தான் பொக்கிஷமா இருக்கும், படத்தோட முடிவுல 700 வருசமா பாதுகாத்துகிட்டு இருக்க knights அ பார்த்து கைகாட்டிட்டு கிளம்பறதாகட்டும், பாதாளத்துல ஆயிரகணக்கான எலிங்களுக்கு மத்தியில மாட்டிகிட்டு பெட்ரோல்க்கு உள்ள ஒளிஞ்சுக்கறதாகட்டும், இன்னும் விளக்க முடியாத காட்சிகள் இயக்குனரோட பேரை சொல்லும் காட்சிகள்.

படத்தோட ட்ரெய்லர்இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களோட பகிர்ந்துக்கங்க, உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள், மறக்காமல் ஓட்டளியுங்கள்.

2 comments:

  1. இந்த மூணு பார்ட்ஸும் ஓகே. ஆனா நான்காவது பாகம் இவற்றோடு ஒப்பிடும்போது கொஞ்சம் மொக்கையானது போல எனக்கொரு ஃபீலிங். :-)

    ReplyDelete
    Replies
    1. அப்படி சொல்லாதிங்க தலைவரே, எனக்கு அந்த படம் பார்த்ததுக்கு அப்புறம்தான் இதுக்கு முன்னாடி வந்த படங்கள பார்க்கனும்னே தோணுச்சு,வாசித்தமைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete