- மழைச்சாரல்: HOW TO TRAIN YOUR DRAGON - திரைவிமர்சனம்
expr:class='"loading" + data:blog.mobileClass'>

Thursday, 16 August 2012

HOW TO TRAIN YOUR DRAGON - திரைவிமர்சனம்

அன்பர்களுக்கு வணக்கம், ரொம்ப நாட்களுக்கு முன்பாகவே என் நண்பன் கண்ணன் இந்த படத்தை பற்றிக் கூறி பார்க்க சொல்லி இருந்தான், ஆனால் எனக்கு தான் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை, ஆகஸ்ட் 15 அன்று அரை நாள் கிடைத்ததில் இப்படத்தினை பார்த்தேன். 


அனிமேஷன் படங்கள் என்றாலே எனக்கு தனி பிரியம்தான், சரி வளவள்வென்று இழுக்காமல் படத்திற்கு வருவோம், இந்த படத்தில் வரும் மக்கள் தலையில் கொம்பு உடைய அணியினை அணிந்திருப்பார்கள். இவர்கள் தங்கி இருக்கும் கிராமத்தில் ஒரு பெரும் பிரச்சனை இருக்கிறது.


என்னவென்றால் இவர்களது உணவுகளையும் கால் நடைகளையும் கூட்டமாக வரும் டிராகன்கள் கொள்ளையடித்துக் கொண்டு போகின்றன, அக்கிராம மக்களும் அதன் தலைவரும் தங்களால் இயன்றதை செய்கின்றார்கள். வேகமாய் பறந்து வந்து நெருப்பை கக்கி திருடும் டிராகன்களை இவர்களால் தடுக்க முடிவதில்லை.


தலைவருக்கு ஒரு மகன், நோஞ்சான், அதிக எடையுள்ள பொருளை தூக்கக் கூட முடியாதவன், ஆனால் எதெச்சையாக அன்று இரவு யாரும் பார்க்க கூட முடியாத வேகத்தில் செல்லும் லைட் ஃபியுரி என்றழைக்கப்படும் டிராகனை தான் கண்டு பிடித்த இயந்திர வில்லில் வீழ்த்தி விடுகிறான்.

 அடுத்த நாள் அதனை தேடி பார்க்கும் பொழுதுதான் தான் தாக்கியதில் பின் இறக்கை அடிப் பட்டு முழுதாய் பறக்க முடியாமல் இருப்பது தெரிய வருகிறது, அதற்கு இரையிட்டு நட்புடன் பழகி அதற்கு செயற்கையாய் ஒரு இறகு தயாரிக்கிறான்.

 

இன்னொரு பக்கம் ஊர் தலைவர் படைகளுடன் டிராகன்களின் இருப்பிடத்தினை தேடி செல்கிறார், இடையில் மகனுக்கும் மற்ற சிறுவர்களுக்கும் டிராகன்களை அழிப்பது குறித்து பயிற்சியினை ஏற்பாடு செய்கிறார், 

ரகசியமாய் டிராகனுடன் பழகிய அனுபவத்தினை வைத்து எல்லா பயிற்சிகளிலும் ஹீரோ தேர்ச்சி அடைகிறான், ஆனால் தலைவர் முன்னிலையில் டிராகனை கொல்லும் போட்டியில் எக்கு தப்பாக மாட்டிக் கொள்ள ஹீரோவை காப்பாற்ற வரும் லைட் ஃபியுரி டிராகனை கிராம மக்கள் அடைத்து வைக்கின்றனர்.


அந்த டிராகனை பயன் படுத்தி ஒட்டு மொத்த இனத்தையும் அழிக்க படை புறப்படுகிறது, அவர்களுக்கு உதவ ஹீரோவும் டிராகன் படையுடன் வருகிறான், மலையளவு இருக்கும் டிராகனை எப்படி அழிக்கிறார்கள் என்பதுதான் க்ளைமாக்ஸ்.

கதை தெரிந்தாலும் டிராகன்களின் வடிவமைப்புக்காகவே பார்க்கலாம், குழந்தைகள் மட்டுமன்றி அனைவருக்கும் இப்படம் பிடிக்கும், சொல்ல மறந்து விட்டென், ஹீரோக்கு லிப் கிஸ் அடிக்கும் ஹீரோயினும் இந்த படத்தில் உண்டு, காணத் தவறாதிர்கள்.

படத்தின் ட்ரெய்லர்மறக்காமல் கீழுள்ள ஓட்டுப்பட்டையில் ஓட்டளிப்பதுடன் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

2 comments:

  1. சுருக்கமான, நல்ல விமர்சனம். நன்றி.

    ReplyDelete
  2. நல்ல விமர்சனம். நானும் இந்தப் படத்திற்கு விமர்சனம் எழுதியிருந்தேன்.

    http://hollywoodrasigan.blogspot.com/2011/12/how-to-train-your-dragon-2010.html

    லைட் ஃபியுரி என்பது நைட் ஃபியுரி என்று தானே வரவேண்டும்? :-)

    ReplyDelete