- மழைச்சாரல்: பதிவர்களுக்கு கரும்பு தின்ன கூலி 1,00,000 ரூபாயாம் - கிளம்புங்கப்பா போலாம்
expr:class='"loading" + data:blog.mobileClass'>

Saturday, 11 August 2012

பதிவர்களுக்கு கரும்பு தின்ன கூலி 1,00,000 ரூபாயாம் - கிளம்புங்கப்பா போலாம்

அன்பர்களுக்கு வணக்கம், பெரும்பாலான பதிவர்கள் ஏற்கனவே அறிந்த செய்திதான், ஆனால் அதில் புதிதாய் ஒரு ஆச்சர்யம் காத்திருக்கிறது. அது என்னவென்று சற்று விரிவாக பார்ப்போம்.

நம் நாட்டை பொறுத்த வரையில் பதிவர்கள் என்பவர்கள் நேரத்தை வீணடிப்பவர்கள், சண்டையிட்டு கொள்பவர்கள், வீட்டில் உட்கார்ந்து கொண்டு உலகத்துக்கு புத்தி சொல்பவர்கள் என்றுதான் பெயர், ஆனால் நான் பதிவுலகத்திற்கு வந்து மற்றவர்களின் பதிவுகளை வாசிக்கும் பொழுது எப்படி இவர்களால் எழுதுவதற்கு நேரம் ஒதுக்க முடிகிறது? எவ்வளவு அருமையாக சொல்ல வந்த விசயத்தை ஒரு பக்கத்தில் முடிக்கிறார்கள் என வியந்ததுண்டு.

பின்னாளில் நான் பதிவு எழுத ஆரம்பித்த பொழுது மற்ற அக்கறையான நண்பர்கள் என்னிடம் கேட்ட கேள்வி "இப்படி எழுதறதால உனக்கு என்ன லாபம்?"னு தான். இந்த லாப நஸ்டம் எல்லாரும் எல்லா விசயத்துக்கும் பார்க்கறாங்க, அப்புறம் எப்படி அரசியல்வாதிங்க ஊழல் பன்ன மாட்டாங்க, சரி நாம் அங்க போக வேண்டாம்.

வெறுமனே மன திருப்திக்காக எழுதி கொண்டிருந்த தமிழ் பதிவர்களுக்கு தொழிற்களம் வலைப்பூ மூலமாக வருமானம் பெருக வழி செய்து கொடுத்த நமது மக்கள்சந்தை இணையதளம் வருகின்ற ஆகஸ்ட் 26 ஞாயிறு அன்று சென்னையில் உலக பதிவர்கள் மாநாடு நடத்த போவது அனைவரும் அறிந்ததே. அதில் ஆச்சர்யமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

சாதாரணமாகவே நம் பதிவர்கள் போட்டி போட்டு கொண்டு பதிவு எழுதி தள்ளுவார்கள், அவர்களுக்கு இடையே உண்மையிலேயே போட்டி வைத்தால்? பரிசு தொகை ஒரு லட்சம் என அறிவித்தால்? நினைத்தாலே களை கட்டுது போங்க.எனக்கு ரகசியமா வந்த தகவலை சொல்றேன் கேட்டுக்கங்க. எல்லா துறை சம்பந்தமாகவும் எல்லாருக்கும் பிடிக்கற மாதிரியும் எழுதற பதிவருக்குதான் இந்த பரிசுத் தொகையாம், அதில காலாண்டு, அரையாண்டுனு தனித்தனி சுற்று இருக்கு.

இனி பணத்துக்காக இல்லைனாலும் தங்களோட திறமைய நிருபிக்கவே அதிக பதிவர்கள் (என்னையும் சேர்த்துதான்) விதவிதமா எழுதி தள்ள போறாங்க, இனி வாசகர்களுக்கு கொண்டாட்டம் தான் (இதுக்கும் என்னையும் சேர்த்துதான்).

இந்த போட்டி சம்பந்தமான மத்த தகவல்கள் பதிவர்கள் மாநாடு அன்று வெளியிடப்படும்.  அனைத்து பதிவர்களுக்குன் அன்று இன்னொரு ஆச்சர்யம் காத்திருக்கு. மறக்காம கலந்துக்கங்க.

முடிஞ்ச வரைக்கும் இந்த அருமையான வாய்ப்பை பத்தி உங்க நண்பர்கள்கிட்ட பகிர்ந்துக்கங்க.

3 comments:

 1. எழுதுங்க..எழுதுங்க...பரிசை வெல்லுங்க..

  ReplyDelete
 2. இன்னும் நிறைய விசயம் இருக்கு நண்பா...

  தினம் தினம் புது தகவல்கள் வரும்....

  வாழ்த்துக்கள்... நன்றி...

  ReplyDelete
 3. ரகசியம்னு சொன்னா அத ரகசியமா பார்துக்கனும்...!!

  சென்னைக்கு வாங்க கதிர் உங்களுக்கு.....

  ReplyDelete