Posts

முகப்புத்தகம்/FACEBOOK-குறும்படம்

Image
அன்பு நண்பர்களுக்கு வணக்கம். நான் ரசிச்ச குறும்படம் பத்தி எழுதி ரொம்ப நாள் ஆச்சு. நான் வாரத்துக்கு 4 குறும்படமாவது பார்த்துடறேன். என்னை இது மாதிரி பார்க்க தூண்டுன கலைஙர் டீவி ல வர "நாளைய இயக்குனர்கள்" நிகழ்ச்சிக்கு நன்றிய சொல்லிகிட்டு உள்ள போவோம். முகப்பத்தகம்/FACEBOOK-இதுதான் படத்தோட பேர். இது என்னை பெருசா ஈர்க்கலை, ஏனா இந்த மாதிரி பார்க்காம லவ் பன்றது பத்தி நிறைய குறும்படம் வந்துருச்சு.  என்னை கவனிக்க வச்ச 2 விசயம். ஒன்னு இதுல நடிச்சுருக்க ஹீரோ வேற யாருமில்லை. நம்ம ஆல் ரவுண்டர் சிவகார்த்திகேயன் தான், ரெண்டாவது இதுல நடிச்சுருக்க இன்னோரு பிரபலம் என்னோட ஃபேவரட் எழுத்தாளர் பாலகுமாரனோட பையன் சூர்யா பாலகுமாரன், இவர் எப்ப பெரிய திரைல படம் பன்ன போறார்னு நான் காத்துட்டுருக்கேன், இந்த குறும்படத்துலயும் நடிப்பு இல்லாம டைரக்ஸனலயும் கொஞ்சம் இறங்குனதா கேள்வி பட்டேன். படத்தோட கதைக்களம் ஃபேஸ்புக் தான், அதாவது பார்க்காம காதலிக்கறது, அதை எப்படி சில மோசமானவங்க அவங்களுக்கு சாதகமா பயன்படுத்திக்கறாங்கனும் உண்மையான காதலும் வந்து போய்கிட்டுருக்குங்கறதயும் அழகா ரொம்ப நகைச்சுவையா கலாட்டா...

ஹாலிவுட் மங்காத்தா- THE ITALIAN JOB/ திரை விமர்சனம்-review

Image
அன்பு நண்பர்களுக்கு வணக்கம், நிறைய பேர் இந்த படத்தை பார்க்காமையோ கேள்வி படாமயோ இருக்க மாட்டிங்க, எனக்கு ஒரு நண்பன் இருக்கான் கன்னன்னு, அவந்தான் எங்க க்ருப்லயே முதல்ல நெட் கனேக்ஷன் வாங்கி ஹாலிவுட் படமா இறக்கி குடுத்து எங்களை பார்க்க வைப்பான், நான் அவன்கிட்டருந்து 200GP க்கு படம் வாங்கி வந்து வச்சுருக்கேன், அதுல இன்னும் பாதி கூட பார்த்து முடிக்கலைங்கறது வேற விசயம்,இன்னைக்கு ஏதாவது ஒரு படம் அதுலருந்து பார்க்கலாம் நு தேடும் போது இந்த "ITALIAN JOB" படம் மாட்டுனுச்சு.  இந்த பேரை எங்கயோ கேள்வி பட்டுருக்கமேனு யோசிச்சதுல டக்னு வந்தது. சூர்யாவோட அயன் படத்துல ஒரு சீன் ல பேங்க் அ கொள்ளையடிக்கற மாதிரி வந்துருக்க ஹாலிவுட் படப் பேரை லைனா சொல்லும் போது சூர்யா இந்த படத்தோட பேரையும் சொல்லுவார். சரி நாம் படத்தை அலசுவோம். படம் ஆரம்பிக்கும் போதே ஒரு கேங் பாரிஸ்ல தங்க கட்டிங்களை கொள்ளையடிக்க திட்டம் போடராங்க, அந்த கேங்க்ல ஒரு வயசானவர்,ஹீரோ (திட்டம் போடறவர்),வெடி வைக்கறதுல கில்லாடியான ஒரு சைட் காது கேட்காத ஒருத்தன், எல்லா வண்டியையும் வேகமா ஓட்டற நம்ம ட்ராம்ஸ்போர்ட்டர் பட ஹீரோ, இன்னோருத...

காதலனை தினமும் மறக்கும் காதலியின் கதை/ 50 FIRST DATES REVIEW- திரை விமர்சனம்

Image
அன்பு நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம், நான் இந்த பதிவ எழுதும்போது காலைலங்க, நீங்க எத்தனை மணிக்கு படிக்கறிங்களோ அதனால பொதுவா ஒரு வணக்கத்தை போட்டு வைப்போம், அடுத்த தேர்தல்ல உபயோகம் ஆனாலும் ஆகும். விமர்சனம் எழுதி ரொம்ப நாள் ஆச்சு, ஏன் பதிவு எழுதியே ரொம்ப நாள் ஆச்சு. நேத்து கொஞ்சம் நேரம் கிடைச்சதும் ஏற்கனவே இறக்கி வச்சுருந்த படம் ஒன்னு பார்த்தேன், அதை பத்தி இன்னைக்கு பேசுவோம். படத்தோட பேர் "50 FIRST DATE". பேரை பார்க்கும் போதே ஏதோ PLAYBOY வகையா இருக்கும்னுதான் நினைச்சேன். ஆனா இது விக்கிப்பீடியால "ROMANTIC-COMEDY" ங்கற வகைல வருது, இதுக்கு முன்னே நான் போட்ட விமர்சனத்தை படிச்சவங்களுக்கு தெரியும், எனக்கு இந்த வகை படம் ரொம்ப பிடிக்கும்னு, புதுசா படிக்கறவங்க நேரம் இருந்தா அதையும் படிச்சுட்டு போங்க. படம் ஆரம்பிக்கும் போது வரிசையா ஒவ்வொரு பொன்னா "நான் ஹாவாய் போனப்ப  என்னை ஒருத்தன் ரொம்ப கவர்ந்துட்டான், அவன் கூட ரொம்ப ஜாலியா டைம் ஸ்பெண்ட் பன்னேன், ஆனா போன் நம்பர் கேட்கும் போது எஸ்கேப் ஆகிட்டான்"னு ஒரே பில்டப், யாருடா அது? நம்ம ஊர்ல எல்லா பொன்னுங்களும் சூர்யாவ பத்தி ப...

சேலத்தில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் முன்பு திமுகவினருக்குள் அடிதடி

Image
திமுக இன்று (30.05.2012) அறிவித்த ஆர்ப்பாட்டத்திற்காக முன்னாள் அமைச்சரும், சேலம் மாவட்ட திமுக செயலாளருமான வீரபாண்டி ஆறுமுகம் சேலம் அண்ணாசிலையில் இருந்து தலைமை தபால் நிலையம் வரை திறந்த வேனில் வந்தார். அவருடன் டி.எம்.செல்வகணபதி எம்பி, வீரபாண்டி ராஜா உள்ளிட்டோர் வந்தனர். தபால் நிலையம் எதிரில் திமுக தொழிற்சங்க உறுப்பினர்கள் (முன்னாள் எம்எல்ஏவும், மாநில இளைஞரணி துணை அமைப்பாளருமான ராஜேந்திரன் ஆதரவாளர்கள்). நின்றிருந்தனர். அவர்களை பார்த்த வீரபாண்டி ஆறுமுகம், நீங்கள் பேரணியில் கலந்துகொள்ளுங்கள் என்றார். ஆனால் அவர்கள் அடிப்படியே நின்றனர். அப்போது வீரபாண்டி ஆறுமுகம் சொல்றத கேளுங்கப்பா என்றார். இதையடுத்து இருதரப்புக்கும் மோதல் உருவானது. அப்போது ராஜேந்திரன் ஆதரவாளர்கள் முன்னாள் துணை மேயர் ஜி.கே.சுபாஷ், கிச்சுப்பாளையம் வழக்கறிஞர் குணா உட்பட்டோர் மேலும் குவிந்தனர். அதற்குள் காவல்துறையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். கடந்த வாரத்தில் வீரபாண்டி ஆறுமுகம், ராஜேந்திரனுக்கு எதிரான அறிக்கையும், அதற்கு பதிலடியாக ராஜேந்திரன் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு எதிராக அறிக்கையும் வெளியிட்டனர் என்பது குறிப...

WHATS YOUR NUMBER? பட்டியல் போட்டு காதலிக்கும் கதை- திரை விமர்சனம்

Image
அன்பு நண்பர்களுக்கு, நீண்ட இடைவெளிக்கு பின் சொந்தமாக ஒரு திரைவிமர்சனம், என் நண்பன் ஒருவன் ஏன் எப்பொழுதும் ஆங்கில படத்திற்கு மட்டும் விமர்சனம் எழுதுகிறாய் என்று கேட்டான், தமிழ் படங்களை நான் மற்ற பதிவர்களின் விமர்சனத்தை பார்த்த பின்பே பார்ப்பேன், அதற்குள் குறைந்தது 20 பேராவது அந்த படத்தினை விமர்சித்திருப்பார்கள். அதனால்தான் இப்படி, சரி படத்திற்கு போவோம், "WHATS YOUR NO?"  இந்த தலைப்பை பார்த்துவிட்டு கதை என்னவாக இருக்கும் என்று நான் பல விதங்களில் யோசித்து பார்த்தேன், ஆனால் இப்படி இருக்கும் என்று சத்தியமா எதிர்பார்க்கலிங்கோ? படம் ஆரம்பிக்கும் போது, படுக்கையை விட்டு எழுந்து வந்து பாத்ரூமில் மேக் அப் போட்டு கொண்டு திரும்பவும் வந்து படுத்து அப்பொழுதுதான் தூங்கி எழுவது போல்  நடித்து கூட படுத்துருக்கவனை ஏமாத்தும் போதே நான் முடிவு பன்னேன், இது நம்ம ஊர் பொன்னுங்க மாதிரி சரியான தில்லாலங்கடினு, ஹீரோயினுக்கு எதிர் ஃபிளாட்ல குடியிருக்கறார் ஹீரோ, அவருக்கு அறிமுகம் எப்படினா ஷேம்ஷேமா வந்து வாசல்ல இருக்க நியுஷ் பேப்பர் அ எடுத்துகிட்டு கூச்சமே இல்லாம குட்மார்னிங் சொல்றார், இதே ந...

உங்கள் வீட்டு பெண்ணை முழுதாக நம்ப வேண்டாம்

Image
அன்பு நண்பர்களுக்கு இனிய வணக்கம், ஒவ்வொரு வீட்டிலும் அவரவர்கள் பெண்ணை அடக்க ஒடுக்கமான பெண்ணாகத்தான் நினைத்து நம்பிக் கொண்டிருக்கிறோம், ஆனால் எல்லோருடைய நம்பிக்கையும் உண்மையாக இருப்பதில்லை, இதோ இந்த காணோளியினை பாருங்கள். இதில் வருபவர்கள் லூதியாணா பகுதியை சேர்ந்தவர்கள், மிக தைரியமாக அவர்களுடைய வீடியோவினை வெளியிட்டுள்ளார்கள், நம்ம ஊர் பெண்களுடைய ஆட்டங்கள் வெளி வருவதில்லை அவ்வளவுதான் வித்தியாசம், ஏன் இது போல் பெண்கள் ஆட்டம் போட்டால் தப்பா என்ற கேள்வியை கேட்க விரும்புவர்கள் தாராளமாக பெண்ணை பெற்றவர்களிடம் கேட்டுப் பாருங்கள், இதோ இந்த காணோளி, பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை மறக்காமல் பின்னுட்டமிடுங்கள்.

யார் இந்த மாமனிதர் ?! 'இந்தியாவின் பெருமை' ஜாதவ் பயேங் !!

Image
யார் இந்த மாமனிதர் ?! 'இந்தியாவின் பெருமை' ஜாதவ் பயேங் !! உலக வரலாற்றிலேயே எவரும் செய்யாத ஒரு மாபெரும் சாதனையை செய்துவிட்டு மிக அமைதியாக அடக்கமாக இருக்கிறார் ஒருவர். மனித குலத்திற்கு அவர் செய்த சிறந்த சேவை இது...எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். 'தனது சமூகத்திற்கு செய்ய வேண்டியது தனது கடமை' என ஒற்றை வரியுடன் தனது சாதனை குறித்து சொல்லி முடித்துகொள்கிறார். அப்படி என்ன செய்தார் ?!! கிட்டத்தட்ட 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவில் தனி நபராக ஒரு காட்டை உருவாக்கி இருக்கிறார்...! யார் இவர் ? அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமவாசி திரு.ஜாதவ் பயேங். அங்குள்ள மக்கள் இவரை 'முலாய்' என அழைக்கின்றனர். பிரம்மபுத்திரா நதியில் 1979 ஆம் ஆண்டில் வெள்ளத்தில் அதிக அளவில் பாம்புகள் அடித்து வர பட்டிருக்கிறது. வெள்ளம் வடிந்த பின் மேலும் பல ஊர்வன இறந்த நிலையில் அங்கே கிடந்திருக்கின்றன. மரங்கள் இன்றி அதிகரித்த வெப்பத்தினால் தான் இந்நிலை என புரிந்து கொண்டபோது இவரது வயது 16 ! பின் இது சம்பந்தமாக வனத்துறையை அணுகி விசாரித்த போது ஆற்றின் நடுவே உள்ள அந்த மணல் படுகைய...

தமிழர்களை மீண்டும் வம்புக்கு இழுக்கும் கேரள அரசு

Image
'நீ நெல் கொண்டுவா... நான் உமி கொண்டுவருகிறேன். இரண்டையும் கலந்து, சமமாகப் பங்கிட்டு... ஊதி ஊதிப் பசியாறலாம்' என்றானாம் ஓர் அதிபுத்திசாலி. அதாவது, 'சதி புத்திசாலி’! முல்லைப் பெரியாறு அணையில் நீர் மட்டத்தை உயர்த்துவதால் அணைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று நிபுணர்களும் நீதிமன்றமும் சொன்ன பிறகும்கூட, தமிழ்நாட்டின் தாகம் தீர்ந்துவிடவே கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு அநியாய அரசியல் செய்யும் கேரளத்து முதல்வர் உம்மன் சாண்டியும் அப்படி 'சதி புத்தி’யைத்தான் மீண்டும் வெளிப்படுத்தி இருக்கிறார். கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உற்பத்தி ஆகப்போகும் மின்சாரத்தில், சுளையாக 500 மெகா வாட் கேரளத்துக்கு வேண்டுமாம்... பிரதமருக்குக் கடிதம் எழுதி இருக்கிறார் சாண்டி. மின் தட்டுப்பாட்டால் ஏற்படக்கூடிய இழப்புகளில் இருந்து மீள்வதற்கு வேறு வழியே தெரியாமல்... எத்தனையோ எதிர்ப்புகளையும் மீறி... தன்னையே பணயம்வைத்துத்தான், மத்திய அரசு கொண்டுவந்த கூடங்குளம் அணு மின் திட்டத்துக்கு ஒப்புதலும் ஒத்துழைப்பும் கொடுத்திருக்கிறது தமிழ்நாடு. அப்படி இருக்க... பசுவின் வாய் இருக்கும் முன் ப...

புகைப்படத்தோடு வாருங்கள்! அழைக்கும் இணையதளம்.

Image
  மே 15 ம் தேதியை குறித்து வைத்து கொள்ளுங்கள்;அப்படியே காமிராவையும் எடுத்து வைத்து கொள்ளுங்கள்! அன்றைய தினம் உங்கள் உலகை ஒரு புகைப்படம் எடுத்து அதனை எங்கள் தளத்தில் சம‌ர்பியுங்கள் என்கிறது ஏடே.ஆர்ஜி. உலகை ஒரு நாளில் புகைப்படம் எடுத்து அந்த படங்களை பதிவு செய்யும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் இது. தொழில்முறை புகைப்பட கலைஞர்கள் ஆர்வம் மட்டும் உள்ளவர்கள் என புகைப்படங்களை எல்லோரும் எடுக்கின்றனர்.அதிலும் டிஜிட்டல் காமிரா வருகைக்கு பின் புகைப்படம் எடுப்பவ‌ர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.புகைப்பட வழி பதிவுகளும் அதிகரித்துள்ளது. புகைப்படங்களை பகிர்ந்து கொள்வதற்காக இணைய சேவைகளும் அதிகரித்துள்ளன. ஆனால் எடுக்கப்படும் புகைப்படங்களும் ப‌கிரப்படும் புகைப்படங்களும் இணையத்தில் சிதறிக்கிடக்கின்றன. இந்நிலையில் புகைப்படங்கள் வாயிலாக உலகை புரிந்து கொள்ளும் ஒரு முயற்சியாக ஒரு நாளில் எடுக்கப்படும் அனைத்து புகைப்படங்களையும் திரட்டும் நோக்கத்தோடு ஏடே.ஆர்ஜி இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது.இதற்காக தான் மே 15 ம் தேதி தேர்வு செய்ப்பட்டுள்ளது. புகைப்படக்கலையில் ஆர்வம் உள்...

மலையேறிய அனுபவமுண்டா? இது எனது அனுபவம்

Image
 அன்பு நண்பர்களே, நீண்ட இடைவெளிக்கு பின் உங்களுடன் என் எண்ணங்களை பகிர்வதில் மகிழ்ச்சி. வழக்கம் போல் என்ன எழுதுவதென்று தெரியாமல் பார்க்கும் படங்களுக்கு விமர்சனமும் ரசித்த பதிவுகளை அப்படியே திருடி பகிர்ந்து கொண்டு இருந்தேன், இப்போது முதல் முறையாக சொந்தமாக ஒரு பதிவை எழுதுகிறேன். அதற்காக மறக்காமல் உங்கள் வாழ்த்தினை தெரிவித்துவிட்டு செல்லுங்கள். உங்களுக்கு மலையேறிய அனுபவம் உண்டா? மலையேறுதல் என்றால் பழனி, திருப்பதி போன்ற தளங்களுக்கு பஸ்ஸிலோயொ அல்லது படிகளின் வழியாகவோ செல்லுதல் அல்ல, வெறுமனே கால் நடையாக ஏறுதல். என்னை பற்றி உங்களுக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, அதிகம் புத்தகங்கள் படிக்கும் பழக்கமுள்ளவன், இதை எதற்கு சொல்கிறேன் என்றால் பாலகுமாரனின் பல புத்தகங்களில் மலையேறுதல் உடலுக்கும் மனதுக்கும் எவ்வளவு நல்லது என கூறியிருப்பார், என் நண்பர்கள் பிரபு மற்றும் கண்ணன் போன வருடம் சித்திரை மாதம் ஆரம்பிக்கும்பொழுதே, என்னுடன் கல்லூரியில் வேலை பார்க்கும் என் நண்பன் பிரபு (வருசம் தவறாமல் மலையேறுபவன்) என்னை மேட்டூர் பக்கத்தில் இருக்கும் பாலமலைக்கு சித்ரா பவுர்ணமிக்கு செல்லலாம் எ...

புகழ், பணத்திற்காக இளைய ஆதீனமாக நான் பொறுப்பேற்கவில்லை. நித்யானந்தா விளக்கம். - Thedipaar.com

Image
News at Tamilsource,புகழ், பணத்திற்காக இளைய ஆதீனமாக நான் பொறுப்பேற்கவில்லை. நித்யானந்தா விளக்கம். - Thedipaar.com

ஆனந்த விகடன் பேட்டியில் மதுரை ஆதீனம் அருணகிரி....

Image
ஆனந்த விகடன் பேட்டியில் மதுரை ஆதீனம் அருணகிரி.... ஹைடெக் மைக்குகள்... லேப்-டாப்கள் சகிதம் நித்தியானந்தாவின் சீடர்கள்... ‘‘மைக் ஒன் காலிங் மைக் டூ... அங்கே கூட்டம் ஜாஸ்தியா இருக்கு. கன்ட்ரோல் பண்ணுங்க... ஓவர்!’’ என்று மதுரை ஆதீனத்தில் உத்தரவுகள் தூள் பறந்துகொண்டு இருக்க... 100 கார்கள் புடைசூழ வந்து இறங்கினார்கள் நித்தியானந்தாவும் மதுரை ஆதீனமும். ’’இனி மதுரை ஆதீனத்திலும் ஆட்டம் பாட்டம் டான்ஸ் எல்ல ாம் இருக்குமா?’’ ‘‘அதில் தவறென்ன? அனைவரையும் ஆடவைத்துச் சந்தோஷப்படுத்த நித்தியானந்தா விரும்பினால், அதற்கு நாங்கள் குறுக்கே நிற்க மாட்டோம். இளம் தலை-முறையினர் பக்தியின் சிறப்பை அறியாமல் இருக்கிறார்கள். அவர்களுக்காகவே அப்டேட் செய்யப்பட்ட டைனமிக் சாஃப்ட்வேர்தான் நித்தியானந்தா!’’ ’’இனி ரஞ்சிதாவும் மதுரை ஆதீனத்துக்கு வருவாரா?’’ ‘‘நித்தியானந்தரின் உண்மையான சீடர் ரஞ்சிதா. அவர் மேல் எந்தத் தப்பும் கிடையாது. யாரோ செய்த சூழ்ச்சிக்கு பாவம் அந்தப் பொண்ணு பலியாகிடுச்சு. எல்லாச் சீடர்களையும்போல ரஞ்சிதாவும் மதுரை ஆதீனத்துக்கு வருவார். அதை ஆதீனமும் வரவேற்கிறது!’’

படித்ததில் பிடித்தவை!புலி ஒரு ஆளுமையின் குறியீடு

Image
புலி ஒரு ஆளுமையின் குறியீடு. தைரியத்தோட அடையாளம். ”உண்மையில் புலிதான் தனிக்காட்டு ராஜா. காட்டுல அது வெச்சதுதான் சட்டம். அத்தனை ஆக்ரோஷமா இருக்கும் புலி, உண்மையில் ரொம்பக் கூச்ச சுபாவி. தனிமை விரும்பியும்கூட. தனக்குனு ஒரு எல்லையை வகுத்துக்கிட்டு அதுக்குள்ள உலா வர்றது தான் புலியோட இயல்பு. ஒரு புலி அப்படிச் சுதந்திரமா உலா வர, 40 சதுர கி.மீ. பரப்புள்ள அடர்த்தியான வனம் தேவை. இப்போ அதோட எல்லைக்கு உள்ளே நாம அத்துமீறி நுழையுறதாலேயே, புலிகள் அழிவோட விளிம்புல இருக்குங்க புலிகளின் அழிவுங்கிறது உண்மையில் காடுகளோட அழிவு மட்டும் இல்லை… அது ஒரு நாட்டோட வளத்தின் அழிவு. புலி ஒரு ஆளுமையின் குறியீடு. தைரியத்தோட அடையாளம். உயிர்ச் சங்கிலியில் ஒரு கண்ணி!” - களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்துக்கு நான் கானகப் பயணம் சென்றிருந்தபோது அதன் இயக்குநர் வெங்கடேஷ் உணர்ச்சியும் உருக்கமுமாகப் பேசினார். களக்காடு முண்டந்துறையில் சென்ற வாரம் புலிகள் கணக்கெடுப்பு நடந்தது. அதில் கலந்துகொண்ட வாலன்டியர்களுக்குத்தான் இந்தப் பாடம். காட்டுக்குள் ஒரு புலியை நேருக்கு நேர் பார்ப்பது என்பது, ஜெயல...

உஷாருப்பா.. உஷாரு..

Image
செல்போனிலோ, விடீயோ கேமராவிலோ தங்களின் அந்தரங்கத்தை படம் பிடிப்பவர்களுக்காக இந்த பதிவு.. ''நீங்கள் செல்போனிலோ விடீயோ கேமராவிலோ உங்களின் அந்தரங்கத்தை படம் பிடித்து ரசிப்பவர்களாக இருந்தால்... வெரி சாரி.. உங்களின் நிர்வாணம் இப்போது உலகம் முழுக்க பரவிக்கொண்டிருக்கலாம். ``அது எப்படி... என் செல்போனில் நான் என்னைப் படம் எடுப்பதால் என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது?'' என்று யோசிக்கிறீர்களா... வெயிட்... உங்க ளுக்காகவே சாம்பிளுக்கு சில சம்பவங்கள்...(பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன) அடையாறில் வசிக்கிறார்கள் மதுமிதா- ராம். புதுமணத் தம்பதிகளான இவர்கள் ஐ.டி. துறையில் வேலை செய்கிறார்கள். ஒருநாள் நண்பர் ஒருவரால் மதுமிதாவுக்கு அனுப்பப்பட்டிருந்த அந்த மெயிலில் ஒரு வீடியோ இணைக்கப்பட்டிருந்தது. அதைத் திறந்து பார்த்த மதுமிதாவுக்கு அதிர்ச்சியில் இதயமே வெடித்துவிடும் போலிருந்தது. காரணம், அந்த வீடியோ மதுமிதாவும் அவர் கணவன் ராமும் பெட்ரூமில் அந்தரங்கமாக இருந்தபோது சும்மா ஜாலிக்காக செல்போனில் எடுத்தது. கொஞ்ச நேரம் அதைப் பார்த்து ரசித்துவிட்டு, செல்போனிலிருந்து அப்போதே அதை அழித்...

PETER விடும் சில தமிழ் மக்களே ..படியுங்கள் ..

Image
தமிழ் பேச வெட்கப்படும் சில தமிழர்களுக்கான செய்தி இது !! PETER விடும் சில தமிழ் மக்களே ..படியுங்கள் .. ************************** ******* உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ? ************************** ******* இது வரை நம் தமிழர்களின் சாதனைகள் பற்றி நான் தெரிவித்திருந்த தகவல்களிலேயே மிக சிறந்த ஒன்று இது! இந்த அதிசயத்தைப் நம் மக்களுடன் பகிர்ந்துக்கொள்ள நான் பெருமையடைகிறேன். ஆம் உலகிலேயே மிகப்பெரிய வழிப்பாட்டு தளம் "கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய "அங்கோர் வாட்" கோயில். இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான். இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது. ஒரு பெருமையான விஷயம் சொல்லாட்டுமா?, வைணவத் தளமான இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே பெரியது!! இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம், திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர். இந்த கோயிலின் ஒரு பக்...

மின்வெட்டு குறையும்!

Image
வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: மின்வெட்டு குறையும்! : கடந்த ஆட்சியில் அறிவிப்புடன் சில மணி நேரங்களும் அறிவிப்பில்லாமல் பல மணி நேரங்களும் மின்வெட்டு போட்டு தாக்கியது விளைவு "வரும் பொது தேர்தல...

கடத்திய மாவோயிஸ்ட்டுகள் தீவிரவாதிகளா?.

Image
மனசாட்சி: கடத்திய மாவோயிஸ்ட்டுகள் தீவிரவாதிகளா?. : சத்திஸ்கர் மாநிலத்தில் சுக்மா மாவட்டத்தின் ஆட்சித்தலைவராக பணியாற்றிய அலெக்ஸ்பால்மேனனை நக்சல்கள் கடத்தியுள்ளனர். ஒரிசா மாநில எம்.எல...

தொடரும் நித்யானந்தாவின் காமடி!

Image
சிந்திக்கவும்: தொடரும் நித்யானந்தாவின் காமடி! : April 12: நித்தியானந்தா, ரஞ்சிதா இன்று மதுரை ஆதீனம் மடத்துக்கு சென்றனர்.  இவர்களுடன் நித்தியானந்தா ஆசிரமத்தைச் சேர்ந்த பலரும் சென்றனர்....

மன்மோகன்சிங்கை கடத்தும் விஜயகாந்த், அசத்தலான வீடியோMUST WATCH.. குலுங்க குலுங்க சிரிக்க...mp4

Image

மென்மையான காதல் கதை- WHILE YOU WERE SLEEPING, திரைவிமர்சனம்

Image
 அன்பு வாசகர்களுக்கு இனிய வணக்கம், பதிவர்களில் புகழ் மிக்கவர்கள் நிறைய பேர் இருக்கையில் எனது பதிவுகளை படிக்க துவங்கியதற்கு நன்றி. இன்று பார்க்க போகும் திரைப்படம் வழக்கம் போல் ROMANTIC COMEDY வகையறாதான். WHILE YOU WERE SLEEPING. ஏற்கனவே நான் விமர்சனம் எழுதிய " THE PROPOSAL " பட நாயகி SANDRA BULLOCK தான் கதை நாயகி. இனி கதையை பார்ப்போம். ரமணி சந்திரன் நாவலில் வருவது போல் அப்பா, அம்மா யாருமில்லாத அனாதை ஹீரோயின் லூசி, ரயில்வே ஸ்டேசனில் டிக்கட் வழங்கும் உத்தியோகம், தினமும் காலை ரயிலேர வரும் அழகான வாலிபனை காதலிக்கிறார், ஆனால் அவனிடம் பேசியதில்லை. ஒரு நாள் எதெச்சையாக அவன் ரயில்வே ட்ராக்கில் விழுந்து மயங்கி கிடக்கும் போது துணிந்து இறங்கி காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தால் நம்ம ஊரில் கேட்கும் அதே மாமூலான கேள்வி "பேஷன்ட்க்கு நீங்க யாரு?"னு, நம்ம பொன்னுதான் மனசுக்குள்ளையே லவ் பன்னிட்டுருக்குதே என்னன்னு சொல்லும்? யாருக்கும் கேட்காம "கட்டிக்க போறவ"னு சொல்ல அதை ஒட்டுக் கேட்ட குண்டு நர்ஸ் ஹீரோவோட மொத்த குடும்பத்துகிட்டையும் போட்டு உடைக்க வேற வழியில்லாம் ...