ஆனந்த விகடன் பேட்டியில் மதுரை ஆதீனம் அருணகிரி....
- Get link
- X
- Other Apps
ஆனந்த விகடன் பேட்டியில் மதுரை ஆதீனம் அருணகிரி....
ஹைடெக் மைக்குகள்... லேப்-டாப்கள் சகிதம் நித்தியானந்தாவின் சீடர்கள்...
‘‘மைக் ஒன் காலிங் மைக் டூ... அங்கே கூட்டம் ஜாஸ்தியா இருக்கு. கன்ட்ரோல்
பண்ணுங்க... ஓவர்!’’ என்று மதுரை ஆதீனத்தில் உத்தரவுகள் தூள் பறந்துகொண்டு
இருக்க... 100 கார்கள் புடைசூழ வந்து இறங்கினார்கள் நித்தியானந்தாவும்
மதுரை ஆதீனமும்.
’’இனி மதுரை ஆதீனத்திலும் ஆட்டம் பாட்டம் டான்ஸ் எல்லாம் இருக்குமா?’’
‘‘அதில் தவறென்ன? அனைவரையும் ஆடவைத்துச் சந்தோஷப்படுத்த நித்தியானந்தா
விரும்பினால், அதற்கு நாங்கள் குறுக்கே நிற்க மாட்டோம். இளம் தலை-முறையினர்
பக்தியின் சிறப்பை அறியாமல் இருக்கிறார்கள். அவர்களுக்காகவே அப்டேட்
செய்யப்பட்ட டைனமிக் சாஃப்ட்வேர்தான் நித்தியானந்தா!’’
’’இனி ரஞ்சிதாவும் மதுரை ஆதீனத்துக்கு வருவாரா?’’
‘‘நித்தியானந்தரின் உண்மையான சீடர் ரஞ்சிதா. அவர் மேல் எந்தத் தப்பும்
கிடையாது. யாரோ செய்த சூழ்ச்சிக்கு பாவம் அந்தப் பொண்ணு பலியாகிடுச்சு.
எல்லாச் சீடர்களையும்போல ரஞ்சிதாவும் மதுரை ஆதீனத்துக்கு வருவார். அதை
ஆதீனமும் வரவேற்கிறது!’’
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment