- மழைச்சாரல்: மென்மையான காதல் கதை- WHILE YOU WERE SLEEPING, திரைவிமர்சனம்
expr:class='"loading" + data:blog.mobileClass'>

Friday, 20 April 2012

மென்மையான காதல் கதை- WHILE YOU WERE SLEEPING, திரைவிமர்சனம்


 அன்பு வாசகர்களுக்கு இனிய வணக்கம், பதிவர்களில் புகழ் மிக்கவர்கள் நிறைய பேர் இருக்கையில் எனது பதிவுகளை படிக்க துவங்கியதற்கு நன்றி.
இன்று பார்க்க போகும் திரைப்படம் வழக்கம் போல் ROMANTIC COMEDY வகையறாதான். WHILE YOU WERE SLEEPING. ஏற்கனவே நான் விமர்சனம் எழுதிய "THE PROPOSAL" பட நாயகி SANDRA BULLOCK தான் கதை நாயகி. இனி கதையை பார்ப்போம்.

ரமணி சந்திரன் நாவலில் வருவது போல் அப்பா, அம்மா யாருமில்லாத அனாதை ஹீரோயின் லூசி, ரயில்வே ஸ்டேசனில் டிக்கட் வழங்கும் உத்தியோகம், தினமும் காலை ரயிலேர வரும் அழகான வாலிபனை காதலிக்கிறார், ஆனால் அவனிடம் பேசியதில்லை.
ஒரு நாள் எதெச்சையாக அவன் ரயில்வே ட்ராக்கில் விழுந்து மயங்கி கிடக்கும் போது துணிந்து இறங்கி காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தால் நம்ம ஊரில் கேட்கும் அதே மாமூலான கேள்வி "பேஷன்ட்க்கு நீங்க யாரு?"னு, நம்ம பொன்னுதான் மனசுக்குள்ளையே லவ் பன்னிட்டுருக்குதே என்னன்னு சொல்லும்? யாருக்கும் கேட்காம "கட்டிக்க போறவ"னு சொல்ல அதை ஒட்டுக் கேட்ட குண்டு நர்ஸ் ஹீரோவோட மொத்த குடும்பத்துகிட்டையும் போட்டு உடைக்க வேற வழியில்லாம் ஹீரோயினும் அந்த பொய்ய மெய்ன்டைன் பன்றாங்க. இராத்திரி வந்து கோமால படுத்துகிட்டு இருக்க ஹீரோகிட்ட சோகமா உண்மையலாம் சொல்லி அழும்போது ஹீரோவோட god father ஒட்டு கேட்டுடறார். ஆனா அவர் பிரச்சனை பன்னாம நல்ல பொன்னா தெரியறா, இவளையே நம்ம குடும்பத்துக்கு மருமகளா கொண்டு வந்துரலாம்னு திட்டம் போடறார்.

இதுக்கு நடுவுல ஹீரோவொட தம்பி ஊர்லருந்து வர்ரார், அவருக்கு அண்ணன் நமக்கு தெரியாமலாம் லவ் பன்ன மாட்டாறேனு ஹீரோயின் சொல்ற கதைய நம்பாம நிறைய தடவை சந்தேகப்பட்டு என்னென்னமோ டெஸ்ட் பன்னி பார்க்கறான்,
 

எல்லாத்துலையும் லூசி ஜெயிச்சுட்டாலும் இந்த கேப் ல லூசிக்கும் ஹீரோவோட தம்பிக்கும் மனசுக்குள்ள லைட்டா ஒரு ஃபீலிங் ஆரம்பிக்குது.

அதை 2 பேரும் பகிந்துக்கறதுக்குள்ள கோமால இருக்க ஹீரோ முழிச்சுக்கறார்.
 மொத்த குடும்பமும் சேர்ந்து ஹீரோகிட்ட நீ லூசியதான் லவ் பன்னனு அடிச்சு சொல்லி அவரையும் நம்ப வச்சுடறாங்க, கேட்டா உனக்கு selective amnesia னு காரணம் சொல்றாங்க, ஹீரோக்கும் ஹீரோயின் அ பிடிச்சு போய் 2 பேருக்கும் கல்யாண ஏற்பாடு பன்றாங்க.
 

அந்த கல்யாணம் நடந்ததா? உண்மையான ஹீரோ அண்ணனா? தம்பியானு? படத்தை பார்த்து தெரிஞ்சுக்கங்க.
 

கொஞ்சம் பழைய படம்னாலும் போரடிக்காம ரொம்ப மென்மையா அங்கங்க காமெடி வச்சு அருமையா போகுது, வீட்ல எல்லாரும் ஊருக்கு போய்ட்டாங்க, லவ்வர் வீட்டுக்கு போய்ட்டா, நைட் கடலை போட முடியாதுனு தனிமைல இருக்கும் சகோதரர்கள் பார்த்தா கொஞ்சம் சூடு குறையும், பார்க்க வேண்டிய படங்க.

படத்தோட ட்ரெய்லர்உங்கள் மதிப்பு மிக்க கருத்தை தெரிவித்துவிட்டு செல்லவும்.

No comments:

Post a Comment