ஹாலிவுட்டின் மன்மத லீலை GHOST OF GIRLFRIENDS PAST விமர்சனம்

அன்பு நண்பர்களுக்கு, ஏதோ நாமளும் சொந்தமாக blog வைத்து எண்ணங்களை பகிர்ந்தது கொள்ள வேண்டும் என்று ஆசையில் துவங்கி விட்டாலும் என்ன எழுதுவது, எதை பற்றி எழுதுவது என்றே பிடிபடவில்லை, ஆனா இப்படியே விட்டா கடைசி வரைக்கும் எதுவும் எழுதாமலேயே போய் விடுமோ என்ற பயம் வந்து விட்டதால் நான் சமிபத்தில் பார்த்த ஒரு திரைபடத்தினை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.
காற்றுள்ள போதே தூற்றிக் கொள், கரண்ட் உள்ள போதே படித்து கொள்ளுங்கள்.
 படத்தின் பெயர் GHOST OF GIRLFRIENDS PAST 
உங்ககிட்ட மறைச்சு என்ன ஆகப்போகுது? title அ வர girlfriend ங்கற வார்த்தைய நம்பிதான் படம் பார்க்க ஆரம்பிச்சேன். உண்மையிலேயே எதுக்கும் குறை வைக்கலிங்க, கருத்தாழமிக்க அசைவ படம். கருத்து என்னன்னா நம்மூர் பக்கம் சொல்றதுதான், நல்ல பொண்ண அழ வைக்கறவனுக்கு நல்ல சாவே வராதுங்கறதுதான், இந்த கான்செப்ட் அ வச்சு எப்படி ஃபேண்டசியா படம் எடுத்துருக்காங்கங்கறதுலதான் விசயமே! 
இப்ப கதைக்கு வருவோம். படத்தோட டைட்டில் போடும் போதே ஹீரோ ஒரு மன்மதன் னு நமக்கு புரிய வச்சுட்றாங்க, அவர் ஒரு போட்டோகிராபர், அவருக்குனு ஒரு கொள்கை இருக்கு, ஆம்பளைங்களை போட்டோ எடுக்க மாட்டார். முழுசா டிரஸ் பன்னிருக்க பொண்ணுங்களையும் எடுக்க மாட்டார், வேற எப்படி எடுப்பார்னு கீழ இருக்கு படத்த பார்த்தா உங்களுக்கே புரியும்

என்ன மாதிரி கிரியேட்டிவிட்டி பார்த்திங்களா? ஆனா இந்த ஒரே ஷாட் ல அந்த பொண்ணு எப்படி மடங்குனுச்சுனு டைரக்டர் சொல்லவே இல்லை?
 அடுத்த சீன் பெட் ரூம் தான், அது என்னமோ நம்மூர் பசங்க அவ்வளவு விவரம் இல்லைனுதான் சொல்லனும். அடுத்து ஒரே டைம்ல 3 ஃபிகருங்களை நெட்ல கழட்டி விட்றாரு, டைம் சேவ் பன்றாராம்,
 இதுக்கு அப்புறம்தாங்க கதையே ஆரம்பிக்குது, ஹீரோக்கு இருக்க ஒரே ஒரு தம்பிக்கு கல்யாணம்னு கிளம்பி போறார், அங்கயும் ஏகப்பட்ட பொன்னுங்க, ஹ்ம்ம்ம் நம்ம பசங்க கல்யாணத்துக்கு போறதே அதுக்கு தானே,
என்ன மாதிரி மன்மதனா இருந்தாலும் அவருக்குனு ஒரு உண்மையான காதலி இருப்பாங்கற லாஜிக் ல நம்ம ஹீரோ வும் சிக்கிட்றார், அந்த உண்மையான காதலியும் கல்யாணத்துக்கு வன்ந்துருக்காங்க, அப்பப்ப ஹீரோவ குத்தி காட்றாங்க, இந்த கல்யாணம் காது குத்தறதுனு எந்த சம்பிரதாயத்துலயும் நம்பிக்கை இல்லாத நம்ம ஹீரோ கைல சரக்கோட பாத்ரூம் பக்கம் ஒதுங்க, அங்க இவருக்கு எல்லா மன்மத கலையையும் கத்துக் குடுத்த அவரோட அங்கிள்(கதைப்படி ஏற்கனவே செத்தவர்) ஆவியா வர்ரார்.
வந்தவர் சும்மா இல்லாம "உன்னை நான் கெடுத்துட்டேன், உனக்கு கெட்டத மட்டும் சொல்லி குடுத்து உன் வாழ்க்கைய நாசமாக்கிட்டேன்" னு புலம்பவும் இதெல்லாம் கிளைமாக்ஸ் ல வர டயலாக் ஆச்சே, இப்பவே வருதே னு நானும் குழம்பிட்டேன், அப்புறமா சொல்றாரு " நீ பன்றது தப்புனு உனக்கு புரிய வைக்க இன்னைக்கு ராத்திரி 3 பொன்னுங்களோட ஆவிய நீ சந்திப்ப"னு சசொல்லிட்டு எஸ் ஆயிட்றார், அதுக்கு அப்புறம் படம் ஒரு டைரிய படிக்கற மாதிரி போகுதுங்க,
முதல்ல வர ஆவி ஹீரோவ அவரோட கடந்த காலத்துக்கு கூட்டி போகுது, அங்க அவரோட அந்த சின்ன வயசு காதல், அவர் ஏன் ப்ளே பாய் ஆ மாறுராருனு காட்றாங்க, எனக்கு அந்த சின்ன வயசு லவ் பிடிச்சுருக்குங்க  
 இதோ கீழ படத்துல கைய மடக்கி காட்டி ஏதோ நாட்டுக்காக ஆர்மில சேரனும் னு ரேஞ்சுக்கு பில்டப் குடுத்துட்டு இருக்கறவர்தான் நம்ம ஹீரோக்கு ஆய கலைகள் 64யும் கத்து தர பெரிய மனுசன்
 படத்துல எனக்கு ரொம்ப பிடிச்சது, ஹீரோவோட உண்மையான லவ் வர சீன் தான், அதுலயும் எல்லாத்தயும் முடிச்சுட்டு ஹீரோ பெட் லருந்து எழுந்து கிளம்பும் போது ஹீரோயின் "உலகத்துல 2 டைப் பொண்ணுங்க, ஒன்னு நீ முடிச்சதும் கிளம்பற டைப், இன்னோன்னு அவன் கூட கட்டி பிடிச்சு தூங்கற டைப், நான் 2 வது ரகம், நீ 3 செகன்ட் ல வந்து என் பக்கத்துல படுக்கலனா இனி என்ன பார்க்கவே வரக்கூடாது" சொல்ற சீன் எனக்கு ரொம்ப பிடிக்கும்
அடுத்து ஒரு சீன்ல ஹீரோ கரெக்ட் பன்னி கழட்டி விட்ட பொன்னுங்களை ஒரே சீன் ல காட்றதும் அந்த பொன்னுங்களோட கண்ணீர் னு மழைய காட்றதும் நச்சுங்க

 அப்புறம் 2 வதா வர ஆவி நிகழ் காலத்துல ஹீரோ இல்லாத டைம் ல மத்தவங்க அவரை பத்தி என்ன பேசறாங்கனு கூட்டி போய் காட்டுது, அடுத்து வர லாஸ்ட் ஆவி இப்படியே ஊருக்கு அடங்காம பொலிகாளையாட்டம் திரிஞ்சா நல்ல சாவு வராதுனு உணர வைக்குது,இதெல்லாம் புரிஞ்சு ஹீரோ மனசு மாறருதுக்குள்ள அவரோட தம்பி கல்யாணம் நின்னு போய்டுது, அதுக்கு காரணமும் நம்ம ஓட்டவாய் ஹீரோதான், பெருசா ஒன்னுமில்லிங்க, கல்யாண மாப்பிள்ளை , பொண்ணோட friend ஒருத்தி கூட ஒரு நாள் தங்கி இருந்தத மப்புல உளறிடறார்,
திருந்தி இருக்க நம்ம ஹீரோ எப்படி தன்னால நின்ன தம்பி கல்யாணத்த நடத்தறாரு?
கழட்டி விட்ட ஹீரோயின எப்படி திரும்ப கரேக்ட் பன்றாருங்கறதுதான் கிளைமாக்ஸ். இப்பவே சொல்லிடரேன், பாசிட்டிவ் கிளைமாக்ஸ் தான்


 மேல கிஸ் அடிக்கறது தம்பி, கீழ அடிச்சுட்டு இருக்கறது அண்ணண்,
குடுத்து வச்சவங்க, உண்மைலியே இந்த படம் என் மனச கொஞ்சம் லேசாக்குனுச்சு, நீங்களும் பாருங்க.......
 நண்பர்களின் கனிவான கவனத்திற்கு, தயவு செய்து என் பதிவில் இருக்கும் குறைகளை கூச்சமில்லாமல் திட்டியாவது தெரிவிக்கவும், நீங்கள் என்ன திட்டினாலும் என் பதிவுகள் தொடரும் என்பதை உறுதியுடன் தெரிவித்து கொள்கிறேன்.



இப்படிக்கு
உங்கள்
கதிரவன்

Comments

Post a Comment

Popular posts from this blog

இவங்களுக்கெல்லாம் பெரிய புத்திசாலினு நினைப்பு?

கலாய்ச்சுட்டாராமாம்...

Indiana Jones And The Temple Of Doom திரை விமர்சனம்