- மழைச்சாரல்: திரைப்பட மோகத்தில் சிக்கி சீரழியும் தமிழர்களே?????
expr:class='"loading" + data:blog.mobileClass'>

Wednesday, 28 March 2012

திரைப்பட மோகத்தில் சிக்கி சீரழியும் தமிழர்களே?????இந்த ஆபாச படங்கள் தேவையா ? என்ற வினா எழுப்புவோர கண்டிப்பாக கட்டுரையை படியுங்கள் உலகின் ஆளுமை மிக்க துறை மூன்று ௧)அரசியல் துறை ௨) திரைப்படத் துறை ௩) தொழில் துறை . இம் மூன்றையும் இன்று, மாற்று இனத்தவர் கள் கைப்பற்றிக் கொண்டு தமிழர்களை அடிமைகளாக நடத்து கிறார்கள் தமிழர்களை இழிவு படுத்துகிறார்கள் இதில் திரை பட துறை, தமிழர்களை முற்றிலுமாக முடக்குகிறது . வந்தேறிகளின் கூடாரமாக தமிழர் நாடு மாறி விட்டது .
.
இன்று உள்ள ஊடகங்கள்,அழகு என்ற சொல்லுக்கு மாறுபட்ட பொருளை உருவாக்கி, தமிழர்களை உளவியல் ரீதியாக மட்டுபடுத்தும் வேலை யை செய்கின்றன.திரைப்படம் மற்றும் தொலை காட்சி ஊடங்கள் இதில் பெரும் பங்கு வகிக்கின்றன .


சில பத்து ஆண்டுகள் முன்பு வரை கருப்பாக, மாநிறமாக, கலையாக இருப்பவர்கள் தான் அழகானவர்கள் என்ற நிலை தமிழர்கள் இடையே இருந்து வந்தது . தமிழ் திரைப்படங்களில் கருப்பு, மாநிறம் என்று சொல்லக் கூடியவர் களே கதா நாயகன் ,நாயகியாக வலம் வந்தார் கள்.அந்த திரைப் படங்களை பார்க்கும் தமிழ் பெண்களுக்கு, இளைஞர் களுக்கு தங்களை ஒத்தவர்கள் என்பதால் தன்னம்பிக்கை கூடிற்று.கருப்பாக இருப்பவர் களை இகழும் காட்சி அமைப்புகள் அப்போது அதிகமாக இல்லை .

ஆனால் இப்பொழுது ,மாற்று இன நடிகைகள் 100 விழுக்காடு தமிழ் திரைப்படங்களை ஆக்கிரமித்துள் ளனர். அவர்கள் ஆடை குறைப்பு செய்து தங்கள் உடல் அங்கங்களை காட்டுவதையே அழகு என்று உருமாற்றி இருக்கிறார்கள். கதா நாயகர்கள் ,நாயகிகள் சிவப்பாக இருப்பதால், கருப்பாக இருப்பவர்களை இழிவு படுத்தும் காட்சிகள் நகைச்சுவை என்ற வடிவில் தமிழ் திரைப்படங்களை ஆக்கிரமித்து உள்ளன. அதன் விளைவு தமிழ் பெண்களிடையே தாங்கள் அழகானவர் கள் இல்லை என்று எண்ணம் அவர்களின் ஆழ் மனதை ஊடுருவி ,அவர்களின் வளர்ச்சியை,தன்னம்பிக்கையை குலைக்கிறது .

கருப்பாக இருப்பவர்கள், சிவப்பாக மாறி அழகாவதற்கு, இந்த பசையை பயன்படுத்துங்கள், பயன் படுத்த தொடங்கினால் இப்படி இருந்த நீங்க இப்படி ஆகி விடுவீர்கள். என்ற விளம்பரத்தை தொடர்ச்சியாக தொலை காட்சி ஊடகங்களில் காட்டுவதனால் தமிழ் பெண்களிடையே சிவப்பாக இருப்பவர்கள் மட்டுமே அழகானவர்கள் என்ற தாழ்வு மனப்பான்மை உருவாகிறது. திரைப்படங்களில் கருப்பாக இருப்பவர்களை இழிவு படுத்துவதை நகைச்சுவையாக தொடர்ச்சியாக காண்பிப்பது மூலம் தமிழர்களை மனச் சிதைவிற்கு ஆளாக்குகிறார்கள் .

இதன் விளைவு திறமை இருந்தால் மட்டுமே மதிக்க தக்க நிலையை அடைய முடியும் என்ற நிலை மாறி, சிவப்பாக இருந்தால் எளிதாக மதிப்பை பெற முடியும் என்ற பொய்யான சுழலை தமிழர்கள் ஏற்க தொடங்கிவிட்டனர்.

தொலை காட்சி ஊடங்கள் முதற் கொண்டு அனைத்திலும் விளம்பர த்தில் குழந்தைகளை காட்டுவதாக இருந்தாலும் சிவப்பாக இருக்கும் குழந்தைகளை தான் காண்பிக்கிறார்கள்.தங்கள் மண்ணிற்குரிய மனிதர்களை காண்பிப்பதில்லை .

இதற்க்கு காரணம் தமிழ் திரை பட தயாரிப்பாளர்களில் 90 விழுக்காடு தமிழர்கள் அல்லாதோரே இருக்கிறார்கள் .அவர்கள் தமிழர் அல்லாத தம் இனம் சார்ந்தவர்களை நடிக்க வைக்க விரும்புகிறார்கள் .காரணம் அவர்களின் இனப் பற்று, உடல் பற்று. இதற்கு தமிழர்களும் துணை போவதுதான் வேடிக்கை .

திரை படங்கள் முதல் தொலை காட்சி விளம்பரங்கள் வரை அனைத்திலும் சிவப்பாக இருப்பவர்கள் மட்டுமே எளிதாக நடிக்க முடிகிறது. மக்கள் அவர்களைதான் விரும்புகிறார்கள் என்று கூறி , தமிழ் பெண்களை, இளைஞர் களை புறக்கணிக்கிறார்கள்.ஆனால் இது உண்மையா என்று பார்த்தால் உண்மையில்லை .

மேலே உள்ள படத்தில் உள்ள ஆபாச கவர்ச்சியான காட்சிகளை நீங்கள் விரும்பவில்லை .நான் வலுக்கட்டாயமாக திணிக்கிறேன்.அல்லது அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பதால் நீங்கள் பார்கிறீர்கள் .அது போல தான் நம் மக்கள் இன்றும் நம் மண் வாசனையை விரும்புகிறார்கள். நம் நிறத்தை விரும்புகிறார்கள் .ஆனால் மாற்று இன சக்திகள் தமிழர்களை ஒடுக்க வேண்டும் ஆளுமையை பெற வேண்டும் என்பதற்காக அழகு என்பது அங்கங்களை காட்டுவதில் தான் என்று கூறி தமிழ் சமுதாயத்தை சீரழிக்கிறார்கள் .கருமையை இழிவு படுத்துகிறார்கள் .

தமிழா உன் கருமை

உலகில் வாழக் கூடிய மனித இனங்களில், தமிழர்கள் வழி வந்தவர்கள் மட்டும் தான் எந்த மனித இன கலப்புமின்றி தனித்துவமாக இன்றும் வாழ்கிறார்கள் . .

60,000 ஆண்டுகளின் வழி தோன்றலாக ,விழுப்புரம் அருகே விருமாண்டி என்ற பழங்குடி தமிழனை உலகின் தொன்மையா ன மனிதன் என்று அறிவித்துள்ளார்கள் .

உலகில் உள்ள மூத்த குடிகளில் முதன்மையான குடி தமிழ் குடி. வழி தோன்றலாக வந்த தமிழ் இனத்தின் தொன்மையான நிறம் கருமை . தமிழர்களின் கருமை நிறம் எதை குறிக்கிறது .தமிழர்களின் தாய் கற்புக்கரசி என்பதையும் பன்னெடுங்காலமாய் ஒழுக்கத்துடன் வாழ்ந்து வருபவர்கள் என்பதையும் தமிழர்களின் நிறம் எடுத்துக் காட்டுகிறது .இது தமிழ் வழி வந்த குடிகளுக்கும் பொருந்தும் .

நாம் பெருமை படக் கூடிய செய்தியை இங்குள்ள மாற்று இன சக்திகள் இகழ்ந்து கூறி நம்மிடையே தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி விட்டார்கள் .

தமிழ் இளைஞர்களை விட தமிழச்சிகள் இடையே இந்த எண்ணம் ஆழமாக வேருன்றி அவர்கள் முன்னேற்றத்திற்கு தடை கல்லாக இருக்கிறது.

15 ஆண்டுக்கு முன்பு வரை பெரும்பாலான நடிகர் நடிகைகள் கருப்பாகத்தான் இருந்தார்கள். அவ்வாறு இருப்பவர்களே வெற்றி பெற முடிந்தது ,

ஆனால் இன்று கருப்பு மாநிறம் என்றாலே ஓடி போ என்று கூறும் அளவிற்கு மாற்று இனத்தவர்கள் ஆதிக்கம் பெருகி விட்டது.தமிழர்களே தங்கள் நிறத்தை அவமானமாக கருதுகிறார்கள்.

தமிழர்களே நமது நிறம் நமது தொன்மையை எடுத்துக் காட்டுகிறது . ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டின் வழி வந்தவர்கள் நாம் என்பதை இவ் வுலகிற்கு பறை சாற்றுகிறது.

தமிழர்களே உங்கள் நிறத்தை கண்டு பெருமிதம் கொள்ளுங்கள். சிவப்பாக இருப்பவர்கள் தங்க ஆபரணத்தை அணிவதில்லை .காரணம் அவர்களுக்கு அது சிறப்பாக இருக்காது .வட இந்தியர்கள் போல நாம் பைஜாமா குல்லா என்று சுற்றினால் நம் மக்கள் நகைப்பார்கள் .நிறமும் உடையும் ஆபரணமும் அவர்கள் வாழும் கால சுழலை பொறுத்தது .

தமிழர்கள் தங்களை மதிக்க மறுப்பதால், உடல் அங்கங்களை காட்டி நடிக்கும் மாற்று இன நடிகைகள்,நடிகர்கள் நாளை நம்மை ஆட்சி அதிகாரம் செய்யும் சக்தியாக மாறுவதுதான் வேடிக்கை .இதற்கு காரணம் தமிழ் இளைஞர்கள் அழக்குக்கும் ஆபாசத்திற்கும் வேறுபாடு தெரியாமல் விட்டில் பூச்சிகளை போல நடிகைகளுக்கும் நடிகர்களுக்கும் ரசிகர் மன்றம் அமைப்பதும் , தமிழ் பெண்கள் நடிகர் நடிகைகளை காண தீராத ஆவல் கொள்ளுவதையும், இங்குள்ள திராவிட கட்சிகள் பயன் படுத்தி கொண்டு ,
உழைப்பதற்கு ஏழைத் தமிழர்கள், ஆட்சி அதிகாரம் செய்வதற்கு உடலை காட்டும் நடிகைகள் என்று தரம் பிரித்து விட்டனர் தமிழா சிந்தித்து பார் .

தமிழா உனது கருமையே உனது பெருமை !!! .

பின் குறிப்பு : சிவப்பாக உள்ள தமிழர்களும் தமிழர்களே

1 comment:

  1. yes machi, most of the actress are doing cosmetic surgery to attain a artificial body structure in their body , by seeing them our boys expecting our normal girls to be like them and some of our girls trying to get the shape of actresses , most of them end up spoiling their health . boys and girls pls wake up for this stupid dreams of actresses .like natural people and eat healthy food you will remain in good health , do not encourage artificial body and food

    ReplyDelete