காதலில் ஏமாந்தவர்களுக்கான படம்- Forgetting.Sarah.Marshall- திரை விமர்சனம்


அன்பு வாசகர்களுக்கு,  கடந்த 2 நாட்களாக எந்த பதிவும் போடாமல் என் வளைத்தளம் காற்று வாங்கி கொண்டிருப்பதை பொறுக்காமல் இதோ ஒரு ஹாலிவுட் பட விமர்சனம்.
Forgetting.Sarah.Marshall- இது போல் ஒரு படம் தமிழிலும் வர வேண்டும், கதைக்கரு தலைப்பிலேயே தெரியும். தன்னை திடிரென்று விட்டு விட்டு போன காதலியை மறக்க காதலன் என்னவெல்லாம் செய்கிறான் என்பதுதான் கதை.

 
பீட்டர், ஒரு மியுசிசன், "scene of crime" என்னும் நிகழ்ச்சிக்கு இசையமைப்பவன், அதே நிகழ்ச்சியின் கதாநாயகி சாரா, இருவரும் 5 வருடங்கள் ஒன்றாக இருப்பவர்கள், படத்தின் ஆரம்பத்திலேயே சாரா, தான் வேறோருத்தனை விரும்புவதாக கூறி விட்டு பிரிந்து செல்கிறார்.

அப்புறமென்ன? ஹீரோ தேவதாஸ் ஆகி என்ன செய்வது எப்படி மறப்பது என்று தெரியாமல் வீட்டிலேயே அடைந்து கிடக்க ஹீரோவின் தம்பி வந்து அட்வைஸ் பன்னி, மற்ற பெண்களிடம் ரூம் போட்டு குடுக்க, அந்த  ஐடியாவும் வொர்கவுட் ஆகாம சொதப்ப, பேசாமல் ஏதாவது டூரிஸ்ட் ஸ்பாட்டுக்கு போக சொல்ல, பீட்டர் சாராவுக்கு பிடித்த ஹவாய் தீவை தேர்ந்துடுத்து அங்கு செல்கிறார்.


அழகான இடம், கொடுமை கொடுமைனு கோவிலுக்கு போனா அங்க 2 கொடுமை கேப்ரே ஆடுச்சாம்ங்கற மாதிரி போய் ஒரு ஹோட்டலில் ரூம் புக் செய்யும் போது பார்த்தால் யாரை மறக்க வந்தாரோ, அதே பழைய காதலி தன் புது காதலனுடம் அங்கு வருகிறாள்.

ஹீரோ பொன்னுங்களை விட மோசமா குலுங்கி குலுங்கி அழறார், வேற என்ன பன்றது? அங்க நடக்கற ஒவ்வோரு சீன்னா பார்த்துட்டு வரப்ப அந்த ஹோட்டல் ரிசப்னிஸ்ட் (எனக்கு ரொம்ப பிடிச்ச பொன்னு) கொஞ்சம் கொஞ்சமா ஹீரோக்கு ஆறுதல் சொல்ல அவங்களுக்குள்ள ஒரு கெமிஸ்ட்ரி ஆரம்பிக்குது.

 அந்த தீவோட ஸ்பெஸலான நீர் சறுக்கு போட்டிய கத்துகிட்டு இருக்கும் போது ஹீரோக்கு ஒரு விசயம் தெரிய வருது, என்னன்னா சாரா ஹீரோ கூட இருக்கும் போதே கள்ளக்காதல் வச்சுருந்தாங்கனு, மனுசன் நொந்து போயிடறான்,



 இதுக்கு அப்புறம்தான் ஹீரோக்கும் அந்த ரிசப்னிஸ்ட்டுக்கும் நல்லா பத்திக்குது, தப்பா சொல்லலிங்க, காதல் பூக்குதுனு வச்சுக்குங்க.
இங்கதான் ஒரு ட்விஸ்ட் ஏமாத்திட்டு போன சாராக்கும் அவளோட புது ஆளுக்கும் முட்டிக்குது, இந்த பொன்னுங்களுக்கு ஒரு பழக்கம் இருக்குங்க, அவங்க கஷ்டத்துல இருக்கும் போது வேற யாரும் நிம்மதியா இருந்துற கூடாது, சாராக்கு தன்னோட பழைய லவ்வர் நிம்மதியா இருக்கறத பார்க்கும் போது பொறாமை பொங்கி வழியுது, அதை பொறுக்காம என்னலாம் பன்றானு பாருங்க.
இப்ப ஹீரோக்கு 2 ஆப்ஸன், ஒன்னு ஏமாத்திட்டு போன பழைய காதலி, இன்னொன்னு தன்னை சந்தோஸமா வச்சுருக்க புது காதலி, யாரை தேர்ந்துடுக்க போறார்ங்கறதை நீங்களே படம் பார்த்து தெரிஞ்சுக்கங்க,


படத்துல எல்லாருக்கும் பிடிக்காத ஒரு விசயம் ஹீரோ அப்பப்ப டவல் அ அவுத்துட்டு நிக்கறதுதான், ஆனா அவர்தான் மொத்த படத்தையும் தாங்கறார், லவ் ஃபெயிலியர் ஃபீலிங்க ரொம்ப இயல்பா பன்றார். படத்துல இன்னொரு புதுமணத்தம்பதிகள் வருவாங்க, அந்த மாப்பிள்ளை ரொம்ப பாவங்க, எப்ப பாரு அந்த பொன்னு அவரை படுக்கைக்கே கூப்பிட்டுட்டுருக்கும்.
படத்துல பாராட்டகூடிய விசயம் நிறைய இருக்குங்க, காதல்ல ஏமாற்றபட்டவங்க கட்டாயம் இந்த படத்தை பார்க்கனும்.

படத்தோட ட்ரெய்லர்


உங்கள் கருத்துக்களை மறக்காமல் பதியவும்.

என்றும் அன்புடன்

கதிரவ்ன்



Comments

Popular posts from this blog

எதற்காக வாசிப்பு?

இவங்களுக்கெல்லாம் பெரிய புத்திசாலினு நினைப்பு?

Indiana Jones And The Temple Of Doom திரை விமர்சனம்