- மழைச்சாரல்: மரியான் - அவசர பட்டுட்டேன்
expr:class='"loading" + data:blog.mobileClass'>

Friday, 19 July 2013

மரியான் - அவசர பட்டுட்டேன்

தனுஷ்க்குனு ஒரு அடையாளம் வந்துருச்சு, அவருக்கு போட்டினுலாம் இனி யாரும் நிக்க முடியாத இடத்துக்கு போய்ட்டார், "மரியான்"படத்தை உண்மையிலேயே தனுஷ் அ நம்பித்தான் முதல் நாள் பார்க்கப்போனேன், படம் கமர்ஷியல் இல்லைனு தெரியும், அதுக்காக இவ்ளோ மெதுவா போனா எப்படி? ஆடியன்ஸ் ஒவ்வொருத்தரும் வாட்ச் அ பார்த்துகிட்டே படம் பார்க்கறாங்க...

 

கதைக்களம் புதுசுனு சொல்ல முடியாது, நீர்ப்பறவைல பார்த்தது, அப்புறம் கொஞ்சம் மயக்கம் என்ன, செகன்ட் ஆஃப் "ரோஜா", இன்னும் கொஞ்சம் யோசிச்சுருக்கலாம், ஆனா ஒருவேளை உண்மைக்கதைங்கறதால எதுவும் செய்ய முடியலையோ என்னவோ?

அதுக்குனு படம் மொக்கைனு சொல்ல மாட்டேன், ஏன்னா படத்தை 2 பேர் தூக்கி நிறுத்துறாங்க, படத்தோட ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், அவங்க இல்லைன்னா பல பேர் எழுந்து ஓடிருப்பாங்க, ஒவ்வொரு ஃப்ரேமும் தமிழுக்கு புதுசு, ஆப்பிரிக்கா புதுசு, முக்கியமா பார்வதி மேனன் ஃப்ரெஷ் ஆ இருக்க புதுசு.

படத்துல தனுஷ் அ உபயோகப்படுத்துன அளவுக்கு மத்த எல்லோரையும் கண்டுக்காம விட்டது வருத்தப்படத்தக்க விஷயம், அதுலயும் அந்த மலையாள நடிகர் சலிம் எனக்கு பிடிச்ச நடிகர், அநியாயத்துக்கு சும்மா வந்துட்டு போறார், ஒருவேளை "நான் ஈ" படத்துல தமிழ் மார்க்கெட்டிங்காக சந்தானத்த உள்ளே சொருகுன மாதிரி மலையாளத்துக்கு அவரை பயன்படுத்துறாங்களோ?

பரபரனு நம்மளை நுனி சீட்டுக்கு கொண்டு வர சீன் எதுவும் இல்லைனாலும் படம் போகுது, நாம எதிர்பார்க்கற பாட்டை தவிர மத்த பாட்டு வரப்ப கடுப்பாகுது, சமிபத்துல நான் பார்த்த படத்துல சந்தானம் வராத படம் இதுதான்னு நினைக்கறேன்...


ஆனா ஒன்னு, பார்வதி மேனன் அழகு, பல இடத்துல நாம எதிர்பார்க்காததலாம் காட்டி நம்மளை உற்சாகப்படுத்துறாங்க, சுத்தமா வறண்டு போன பாலைவனத்துல கூட இவங்க பாவடை தாவணில வர்ரது உள்ளே என்னமோ செய்யுது, நாம் திரும்ப மரியான் பார்க்கப்போறேன்னா அதுக்கு பார்வதி டார்லிங்தான் காரணம்.

ஆக மொத்ததுல நான் என்ன சொல்றனா படம் நல்லாருக்கு, உலக தரத்துக்கு எடுக்க முயற்சி பண்ணிருக்காங்க, அதனால என்னை மாதிரி அவசரப்படாதிங்க, பொறுமையா போய் பாருங்க.


6 comments:

 1. add 'follow by e.mail.' facility.

  ReplyDelete
  Replies
  1. தான் ஸ்குரோல் பன்னா, டாப்ல வருமே

   Delete
 2. திங்கள் பார்கலன்னு இருக்கேன் உங்கள மாதிரி அவசரபடம

  ReplyDelete
 3. 3,mayakkam enna, vengai,maapillai,uthamaputhira,kutty,padikathavan .except aadukalam (that too not financialy big hit) all his movies in last 5 yrs are flops.what is there to expect from danush?

  ReplyDelete
  Replies
  1. தனுஷ்கிட்ட ஹிட் படம் எதிர்பார்க்க நான் புரடியுசரா?
   மயக்கம் என்ன, 3, வேங்கை இந்த படத்துலலாம் தனுஸோட நடிப்பு எனக்கு பிடிச்சுருந்தது,
   அது மாதிரி எதிர்பார்த்துதான் போனேன்

   Delete