- மழைச்சாரல்: காதல் இப்படியும் ஆரம்பிக்கும் - MY SASSY GIRL - விமர்சனம்
expr:class='"loading" + data:blog.mobileClass'>

Tuesday, 4 September 2012

காதல் இப்படியும் ஆரம்பிக்கும் - MY SASSY GIRL - விமர்சனம்

அன்பர்களுக்கு வணக்கம், ரொம்ப நாளாகிவிட்டது இது போன்ற காதல் படங்களை பார்த்து,முன்னாடி பார்த்ததும் உணர வச்ச படம் TIME TRAVELLERS WIFE. யார் எனக்கு இந்த படத்தை பத்தி சொன்னாங்கனு நான் எடுத்து வச்ச்சேன்னு தெரியலை, ஆனா 3 மாசமா பார்க்காம இருந்து இன்னைக்குதான் பார்த்தேன், கண்டிப்பா காதலிக்கனும், காதலிக்கும் போது வேற எந்த பிரச்சனையும் கண்ணுக்கு தெரியாது. ஏன்னா காதலை விட பெரிய பிரச்சனை எதுவும் கிடையாது. சரி நாம படத்துக்கு வருவோம், MY SASSY GIRL.

 

ஒவ்வொருத்தரும் தன்னோட காதலிய முதல் முதல்ல எப்படி பார்த்திங்கன்னு கேட்டா அவ்வளவு அருமையா வர்ணிப்பாங்க, கொஞ்சமாவது காதல் ரசம் சொட்டும், ஆனா இந்த படத்துல ஹீரோ ஹீரோயின்ன முதல்ல பார்க்கும் போது அவங்க ஃபுல்லா குடிச்சுட்டு ட்ரெய்ன்ல வாந்தி எடுப்பாங்க, மட்டையாவறதுக்கு முன்னாடி ஹீரோவ பார்த்து "ஹனி"னு சொல்றதால எல்லாரும் ஹீரோ தலைல கட்டி இறக்கி விட்டுருவாங்க. மட்டையான பொன்னை கூட்டிகிட்டு வீட்டுக்கா போக முடியும்? ஹோட்டல்ல ரூம் போடறார்.


குளிச்சுட்டு இருக்கும் போது ஹீரோயினுக்கு வர்ர போன்ன எடுத்து எங்க இருக்கோம்னு தெளிவா சொல்ல போலிஸ் வந்து கைது பன்னிருது, அதுக்கப்புறம் வெளிய வந்து வீட்டுக்கு போய் அம்மாகிட்ட அடி வாங்கி தூங்கி எழுந்து அந்த பொன்ன போய் பார்க்க போனா திரும்பவும் பாருக்கு போய் சரக்கு, மட்டை, அதே ஹோட்டல்ல ரூம், யாருக்கு கிடைக்கும் இந்த சான்ஸ்?

http://i39.photobucket.com/albums/e189/drunkenmaster42/MySassyGirl.jpg

ஆனா பயங்கர டார்ச்சர் கேஸ் ஹீரோயின்? ஒரு ஏரியோட ஆழம் தெரியனும்னா குதிச்சு அளந்துட்டு வர சொல்லுவா, எதுக்கு எடுத்தாலும் அடி விழும், வேற எந்த பொன்னையும் பார்க்க கூடாது, அவ எழுதற கதையை படிக்கனும், நல்லாருக்குன்னு சொல்லனும், கதைல ஹீரோயின் தான் சண்டை போட்டு ஹீரோவ காப்பாத்தற மாதிரி எழுதுவா.

ஹீரோவ அவரோட காலேஜ்க்கு வந்து அவங்க வாத்தியார்கிட்ட அபார்ஷன் பன்னப் போறேன் அந்த குழந்தைக்கு அப்பா ஹீரோதான்னு சொல்லி ஹீரோவ கூட்டி போற சீன் செம கலாட்டா.


ஆனா படம் அருமையான படம், ஒரு காதல் கதைல கடைசியில ஹீரோயின் செத்ததும் ஹீரோவ உயிரோட புதைக்கற மாதிரி க்ளைமாக்ஸ் வைக்க சொல்றது செம, அப்புறம் ட்ரெய்ன்ல ஒரு குழந்தை கிழிச்ச கோட்ட தாண்டும் போது இடது கால்ல தாண்டுனா ஹீரோ ஜெயிச்சதாவும் வலது கால்ல தாண்டுனா ஹீரோயின் ஜெயிச்சதாவும் வச்சுகிட்டு விளையாடும்போது வரிசையா ராணுவ வீரர்கள் வலது கால்ல தாண்டி ஹீரோக்கு கன்னத்துல பளார் பளார்னு அறை விழும் பாருங்க, அப்ப ஒரு வசனம், நம்ம பேரரசு படத்துல கூட இது மாதிரி இல்லைங்க.

"வானம் ஏன் நீலமா இருக்கு தெரியுமா? எனக்காகதான், ஏன் வருசத்துக்கு 4 பருவம் எனக்காகத்தான், நீ பிறந்ததும் எனக்காகத்தான், என்கிட்ட தோக்கனும்னுதான்"

"ஆனா உனக்கு 1 வருசம் முன்னாடியே நான் பிறந்துட்டன்"

"அதனால என்ன பீட்டர் முன்னாடியே பிறந்து இயேசுக்கு காத்திருக்கலியா, அது மாதிரிதான்"

அதே மாதிரி ஹீரோயின் பிறந்த நாளுக்கு வித்தியாசமா ஏதாவது பன்னனும்னு தீம் பார்க்ல லைட்டிங், பட்டாசுலாம் ஏற்பாடு பன்னிட்டு போனா அங்க தற்கொலை பன்னிக்க வந்துருக்க ராணுவ வீரன்கிட்ட 2 பேரும் மாட்டிகிட்டு முழிக்கற சீன் செம,


முக்கியமான ஒரு சீன், இதை நீங்க ஏற்கனவே பார்த்துட்டிங்க, வீட்ல பார்த்த மாப்பிள்ளைகிட்ட ஹீரோவ ஃப்ரெண்ட்னு அறிமுக படுத்தும் போது ஹீரோயினுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்க ஹீரோ 10 கண்டிஷன் போடறதும் அதை தெரிஞ்சுகிட்ட ஹீரோயின் ஹீரோக்காக ஓடறதும் செம டச்சிங், தமிழ்ல எந்த படம்னா "சிவா மனசுல சக்தி". இந்த படத்தோட க்ளைமாக்ஸ்க்கு கொஞ்சம் முந்தின சீன், அந்த வீட்ல பார்த்த மாப்பிள்ளையா "ஆர்யா" நடிச்சுருப்பார். கிட்டதட்ட இந்த படத்தை கொஞ்சம் மசாலா தடவிதான் sms படம் எடுத்துருக்காங்க, நம்ம சந்தானம் கேரக்டர் தனி.

ஏற்கனவே பழகுன காதலனை மறக்க முடியாமையும், புதுசா பழகறவனை பிடிச்சுருந்தும் நெருங்க முடியாம தவிக்கறதுலயும் ஹீரோயின் கேரக்டர் செம, பழைய காதலை மறக்கறதுக்காக 2 வருசம் டைம் கேட்டு ஒரு மரத்தடியில 2 பேர் பிரியற சீன்ல லைட்டா எனக்கு கண்ல தண்ணி எட்டி பார்த்துச்சு, சமாளிச்சுட்டேன்.


இந்த படம் பிடிக்கலைனா நீங்க யாரையும் இது வரைக்கும் காதலிக்கலைனு அர்த்தம், நாம காதலிக்கறவங்களை 100% வெறுக்கறோம், 200% நேசிக்கறோம், அதுதான் உண்மையான காதல், தினமும் சண்டை போடனும், அடிச்சுக்கனும், அழனும், சிரிக்கனும், பிரியனும், கட்டி பிடிச்சு ஒன்னு சேரனும், சின்ன சின்ன தப்பு கண்டு பிடிச்சு முறைக்கனும், அது தனி ஃபீலிங், அனுபவிக்கனும்.

கடைசியா 2 பேரும் எப்படி ஒன்னு சேருவாங்கனு ஒவ்வொரு நிமிஷமும் எதிர்பார்க்க வச்சு சேர்த்துருக்காங்க, எனக்கு இந்த படத்தை தமிழ்ல பார்க்கனும்னு ஆசையா இருக்கு, தமிழ்ல ஹீரோயினுக்கு தமன்னா, ஹீரோவா நம்ம விமல் இல்லை சிவகார்த்தி கேயன், செமயா இருக்கும்.

காதல்.............. பன்னனுங்க........

படத்தோட ட்ரெய்லர்படத்தை முடிஞ்ச வரைக்கும் பாருங்க, இந்த பதிவு பிடிச்சுருந்தா பகிர்ந்துக்கங்க, கருத்துக்களை தெரிவியுங்க, நிறைய பேர் படிக்க ஓட்டு போடுங்க.

6 comments:

 1. ஆஹா...நல்லாருக்கே,அப்பவே பாக்கணுமே....!இந்தப்படத்தை எடுத்தவர் வாழ்க.பதிவிற்கு நன்றிங்க....!

  ReplyDelete
  Replies
  1. வாசித்தமைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 2. Replies
  1. வாசித்தமைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 3. அட தமிழ்படம் மாதிரியே இருக்கே. நல்லாஎழுதி இருக்கீங்க வாத்தியாரே!

  ReplyDelete
  Replies
  1. வாசித்தமைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete