22 FEMALE KOTTAYAM திரை விமர்சனம்
அன்பர்களுக்கு வணக்கம், என்னவோ எப்போது பார்த்தாலும் வேறு மொழிப் படங்களை பற்றி எழுதுவதற்குதான் நேரம் அமைகிறது, ஏற்கனவே வாங்கி வைத்து ரொம்ப நாள் பார்க்காமல் இருந்து பார்த்த படம், எனக்கு அறிமுகப்படுத்தியது "வல்லத்தான்". படத்தின் பெயர் 22 FEMALE KOTTAYAM.
படத்தின் ஆரம்பத்திலேயே தெரிந்து விடுகிறது, ஏதோ ஒரு த்ரில்லர் வகை என எதிர்பார்க்கும் பொழுதே கதை நாயகியின் அறிமுகப்பாடலில் மனம் லேசாகிறது, கொச்சினில் ஒரு பெரிய மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்க்கும் நாயகிக்கு வெளி நாட்டில் சென்று வேலை பார்க்கும் ஆசை உண்டு. அதற்காக வீசா அப்ளை செய்து வாங்கி குடுக்கும் நிறுவனத்தில் நாயகனை சந்திக்கிறாள்.
கதையோடு நர்ஸ்களின் வாழ்க்கை பற்றியும் சொல்கிறார்கள். வீசா கிடைத்தற்காக ஹீரோவுக்கு ட்ரிட் தரும் பொழுது நிறைய குடித்த ஹீரோயின் தெளிவாக இருப்பதும் போதையேறிய ஹீரோவினை வீட்டில் கொண்டு விடுவதும் நல்ல ரசனைக்குரிய இடங்கள். அதன் பின் கொஞ்சமாய் இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகரிக்கிறது, காதலாகிறது.
ஹீரோ ஏதோ சொல்ல வரும் நேரத்தில் டக்கென்று "I AM NOT A VIRGIN" என ஹீரோயின் போட்டு உடைக்கும் இடம் தற்கால பெண்களின் மனதைரியத்தினை காட்டுகிறது. நல்ல அழகாய் காதல் பூத்து இருவரும் ஒரே வீட்டில் தங்குகிறார்கள், கூடுகிறார்கள், வாழ்வு ரம்மியமாய் போகிறது. ஒரு முறை ஹோட்டலில் வரும் சின்ன சண்டையில் பெரிய இடத்து பையனை அடித்து விட பிரச்சனை பெரிதானதால் ஹீரோ தலைமறைவாகிறார்.
அப்படி தலைமறைவாவதற்கு உதவும் பெரிய மனிதரான பிரதாப் போத்தன் ஹீரோயினிடம் நிலைமையை விளக்கி விட்டு இயல்பாய் உரிமையாய் "CAN I HAVE A SEX WITH YOU?" என்று கேட்கும் இடம், அடுத்து நடக்கின்ற காட்சிகள் யாரும் எதிர்பார்க்காததாய் அமைகிறது.
வழக்கமாய் சினிமாவிலும், பத்திரிக்கையிலும் கற்பழிப்பு பற்றியும் வல்லுறவு பற்றியும் படித்திருந்தாலும் அதன் பின் ஒரு பெண்ணின் உடல் நிலை எந்த அளவு பாதிக்க படும் என்பதை இப்படம் மூலமே அறிந்து கொண்டேன். ஹீரோவால் ஏதும் செய்ய முடியாத நிலை? எல்லாவற்றையும் மறந்து ஒரு புது வாழ்க்கையை துவங்கும் நேரத்தில் ஒரு விடியற்காலையில் "CAN I HAVE SEX WITH YOU ONE MORE TIME? PLEASE, I AM A PATIENT" என்று பயமுறுத்துகிறார் பிரதாப்.
இவரை தமிழ் சினிமா கொஞ்சம் கூட பயன் படுத்திக் கொள்ளவில்லை என்பேன், அதிலும் கடைசியில் "BLOODY BITCH" என்று சொல்லியபடி அவர் இறப்பது நல்ல வில்லனுக்குரிய அடையாளம், உடலால் பாதிக்கப்பட்ட பெண்ணை மனதளவில் கொலை செய்கிறார் ஹீரோ, துரோகம், கஞ்சா கேசில் போலிஸில் சிக்க வைக்கிறார்.
எப்படியோ வாழ நினைத்த பெண் சிறைச்சாலையில், கர்ப்பமாய் இருக்கும் ஒரு பெரிய பெண் தாதாவின் அறையில், அப்பெண் தாதா கதாபாத்திரத்தை நன்றாக காட்டி இருக்கிறார்கள். எதிர்பார்த்தபடியே பிரசவம் பார்ப்பது நாயகிதான். தன்னால் பார்த்து கொள்ளப்பட்ட ஒரு பெரியவர் இறக்கும் பொழுது எழுதி வைத்த சொத்தினை தங்கையிடம் ஒப்படைத்து விட்டு பழிவாங்க தயாராகிறாள் நாயகி.
அந்த தாதாவிடம்
"அக்கா, நான் ஒருத்தனை கொல்லனும்" என்றதும், சிரித்தவாறே
"உன் கதைல 2 வில்லன்களாச்சே, ஒருத்தனை கொன்னா போதுமா?"
"பத்தாது"
என கொலைக்கான திட்டங்கள் செயல் படுத்த படுகின்றன, இதன் பின் வரும் காட்சிகளும் க்ளைமாக்சும் தமிழ் சினிமாவிற்கு புதியது, நம் நகரங்களிலும் இப்படிப்பட்ட வல்லுறவுகள் தொடர்கின்ற நிலையில் ஏன் இது போன்ற படங்கள் வருவதில்லை?
எல்லா கோணங்களிலும் அழகாய் தெரியும் நாயகி, கொடுரமான வில்லத்தனம் காட்டும் பிரதாப், விறுவிறுப்பான திரைக்கதை, வித்தியாசமான கதைக்களம், எதிர்பாராத திருப்பங்கள் என நிறைய நல்ல அம்சங்கள் படத்தில் இருக்கிறது, முதல் பாதியில் வரும் அழகான காதலும் முக்கியமான ஒரு அம்சம், தவறாமல் பார்க்க வேண்டிய படம்.
படத்தின் டிரைலர்
நண்பர்களே ஏதேனும் குறை இருப்பின் கருத்தாக தெரிவியுங்கள், பிடித்திருந்தால் மேலே தமிழ்மண ஓட்டுப்பட்டையும், கீழே தமிழ்10 ஓட்டுப்பட்டையும் இருக்கிறது, ஓட்டளித்துவிட்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நல்ல விமர்சனம்!
ReplyDeleteமலையாளப் படங்கள் எப்போதும் வித்தியாசமாக எடுக்கப் படுகின்றன.விமர்சனம் நன்று.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Deleteசுருக்கமான நல்ல விமர்சனம்...
ReplyDelete