A Cinderella Story திரைவிமர்சனம்
அன்பர்களுக்கு வணக்கம், என் மாணவர்களுக்கு தேர்வு நெருங்குவதால் முன் போலதிகமாய் எழுத இயலவில்லை, தினமும் இறக்கம் செய்யும் படங்களும் என் கணிணியினை நிரப்பிக் கொண்டே வருகிறது, ஒரு படத்தினை பார்த்ததும் அதன் விமர்சனம் எழுதிய பின்புதான் அதனை அழிப்பது வழக்கம், எப்போதோ எடுத்து வைத்து சமிபத்தில் பார்த்த படம் "A CINDERELLA STORY".
இந்த சின்ட்ரெல்லா பெயரினை கேள்விப் படாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள், அது போலத்தான் அந்த கதையும், சிறுவயதில் பெற்றோரினை இழந்து சித்திக் கொடுமையால் வாடும் கதா நாயகி தேவதையின் வரத்தால் இரவு அரண்மனையில் நடக்கும் விருந்திற்கு முகத்தினை காட்டாமல் சென்று இளவரசனை கவர்ந்து பின் காலணியினை வைத்து இருவரும் சேரும் கதை, சிறுவயதில் பலருக்கு இது BED TIME STORY ஆக இருந்திருக்கும். எனக்கு இல்லைங்க.
படத்துக்கு வருவோம், இப்ப மேல படிச்ச அதே கதைய இப்ப இருக்க கலாச்சாரத்துக்கு ஏத்த மாதிரி எடுத்தா எப்படி இருக்கும்? அந்த ஒரு கேள்விக்காகத்தான் நானும் படம் பார்த்தேன். கதைப்படி அம்மா இல்லாத ஒரு பெண் குழந்தை அவங்க அப்பா கூட சந்தோஷமா இருக்கறப்ப சித்தியா 2 குழந்தையோட ஒரு மேக் அப் பைத்தியம் வருது, எதெச்சையா அவங்கப்பாவும் இறந்துடறார்.
படிப்பை இழந்துட கூடாதுனு சொந்த ரெஸ்டாரண்ட்லயே வேலை பார்த்துகிட்டே காலேஜ் போற நம்ம கதா நாயகிவங்க காலேஜ் வெப்சைட்ல முகம் தெரியாத ஒரு பையன் கூட கவிதையா பேசி 2 பேரும் ஒருத்தரை ஒருத்தரை விரும்ப ஆரம்பிக்கறாங்க.
ஹீரோ யார்னா காலேஜ்ல எல்லா பொன்னுங்களும் சை அடிக்கற பார்ட்டி, பெரிய ஃபுட்பால் ப்ளேயர், சரி எத்தனை நாள்தான் பார்த்துக்காமயே காதலிக்கறதுனு 2 பேரும் பேசி காலேஜ்ல நடக்கற ஒரு ஃபேன்சி டான்ஸ் பார்ட்டில பார்த்துக்கறதுனு முடிவுக்கு வராங்க.
ஆசையா கிளம்பறப்ப கொடுமைக்கார சித்தி வேலை வச்சுட்டு நகர முடியாத மாதிரி செஞ்சுட்டு மேக் அப் பன்னிட்டு கிளம்பிடறா, கூட வேலை பார்க்கற எல்லாரும் ஏத்திவிட்டு பார்ட்டிக்கு நல்லா தேவதை மாதிரி மேக் அப் பன்னி அனுப்பறாங்க, பார்ட்டில சொன்ன இடத்துல காத்திருந்து 2 பேரும் சந்திச்சுக்கறாங்க.
முகமூடி போட்டு இருக்கறதால ஹீரோக்கு ஹீரோயின் யார்னு தெரியலை, ஆனா நல்லா கடலை, ஹீரோயின் கூட வந்த பையனும் முகமூடி போட்டுகிட்டு, ஹீரோ கழட்டி விட்ட ஒரு சீன் பார்ட்டி கூட செட் ஆகி கிஸ் அடிச்சுட்டு இருக்கான், 12 மணிக்குள்ள ரெஸ்டாரண்ட் போகனும்னு அடிச்சு பிடிச்சு போயிடறாங்க.
வெறும் கண்ணை மட்டும் பார்த்து மயங்குன நம்ம ஹீரோ யார் அந்த சின்ட்ரெல்லானு காலேஜ் முழுக்க போஸ்டர் அடிச்சு தேடறான், ஆனா ஹோட்டல்ல வேலை பார்க்கற நம்மள ஹீரோக்கு பிடிக்குமானு தாழ்வு மனப்பான்மையோட ஹீரோயின் சொல்லாமையே இருக்கறா, உண்மைய சொல்லி மூக்கறு பட்டு உட்கார்ந்துட்டு இருக்க நண்பன் ஒரு பக்கம்.
ஆனா இந்த உண்மைகளை தெரிஞ்சுக்கற ஹீரோயினோட சித்தி பொன்னுங்க அதை வில்லிகிட்ட சொல்லி திட்டம் போட்டு அசிங்க படுத்தி ஹீரோயின் அ அழ வைக்கறாங்க, 2 பேரும் சேர முடியாத மாதிரி செஞ்சுடறா, பெரிய யுனிவர்சிட்டில இருந்து கிடைச்ச வாய்ப்பையும் சித்தி மறைச்சுடறா. சண்டை போட்டு வீட்டை விட்டு தனியா போயிடற ஹீரோயின் எப்படி எல்லா பிரச்சனையும் தாண்டி ஹீரோ கூட சேர்ராங்கறதுதான் க்ளைமாக்ஸ்.
கதை நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச கதைனாலும் எடுத்துருக்க விதம் போரடிக்காம போகுது, நான் கூட எங்க தேவதை,வரம்னுலாம் மாயமந்திரத்தை கொண்டு வந்திருவாங்களோனு பயந்தேன், அப்படி எல்லாம் இல்லாம அழகா காதலா, கவிதை படத்தை எடுத்துருக்காங்கனு நம்பறேன். பார்க்கலாம்.
படத்தோட ட்ரெய்லர்.
மறக்காம ஓட்டு போட்டு, உங்க நண்பர்கள்கிட்ட பகிர்ந்துக்கங்க.
அன்புடன் கதிரவன்.
ReplyDeleteஒ! வாத்தியார நீங்க!
விமர்சனம் நல்லா இருக்கு. கதிர்.
தமிழ்மண ஓட்டுப பட்டையை இணைக்க வில்லையா! .
அட வாத்தியாரா நீங்கள்?? வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆமாம் சிறுவயதில் எங்களூர் காரம்சாரம் சேர்த்து எனது அன்னை இந்தக் கதையை சொல்லியிருக்கின்றார். இப்போது ஹாலிவூட் காரங்கள் தங்களூருக்கு ஏற்றமாதிரி செய்திருக்கின்றனர்.
நல்ல பதிவு நன்றி.
Hi, yeah this post is genuinely pleasant and I have
ReplyDeletelearned lot of things from it about blogging. thanks.
Feel free to surf my webpage ... top 10 ads