நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவர்கள்
அன்பர்களுக்கு வணக்கம், பதிவர் சந்திப்பு நடந்த பின் ஒவ்வொருவரும் தீயாய் எழுதுகிறார்கள், எனக்குதான் வழமையாய் எழுதும் பதிவுகளை கூட தொடர முடியவில்லை. இன்றும் பெரிதாய் எழுத போவதில்லை, எனக்கு தெரிந்து உங்களுக்கு தெரிவிக்க விரும்பிய பதிவர்களை அறிமுக படுத்துகிறேன்.
முதலாமவர் கவிஞர் சுரேகா, பதிவர் சந்திப்பிற்கு வந்த அனைவரும் இவரை அறிவார்கள், மதிய உணவிற்கு பின் முழுக்க மேடையை அலங்கரித்தவர், தன் சொல் திறமையால் யாரையும் தூங்க விடாமல் ரசிக்க வைத்தவர். ஆனால் அவரை பற்றி கேள்வி பட்டி இருக்கிறேனே ஒழிய, நேரில் சந்தித்ததில்லை,
சந்திப்பிற்கு சென்று வரவேற்பறையில் என் பெயரை பதிவு செய்து கொண்டிருக்கும் பொழுது சடாரென்று வந்தார், "ஹலோ, நான் சுரேகா" என்று அறிமுக படுத்திக் கொண்டார். ஒரு நல்ல கவிஞர், அவருடைய வலைப்பக்கம்
அடுத்தவர் அனைவரும் அறிந்த ஒரு மனிதர், கலைச்சிகரம், இயக்குனர்களின் பெயர் தெரிந்து படம் பார்ப்பவர்களுக்கு இவர் பெயர் மிக பரிட்சியம்.
இவரைப் போல் படமெடுக்க வேண்டும் என்று முயற்சிக்காத இயக்குனர்களே இல்லை, அருமையான ஒளிப்பதிவாளர். இயக்குனர் பாலு மகேந்திரா. தனது சினிமா அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக "மூன்றாம் பிறை" என்ற பெயரில் வலைப்பூ துவங்கியுள்ளார். அதன் முகவரி
உங்கள் நண்பர்களுடன் இந்த பதிவினை பகிர்ந்து கொண்டு அவர்களுக்கும் இவர்களின் வலைப்பக்கங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
சகோ.சுரேகா தளம் எனக்கு அறிமுகம் தான்! பாலு சார் தள அறிமுகத்திற்கு நன்றி நண்பா!
ReplyDeleteநீங்கள் சொல்வது உண்மைதான் அசாத்திய திறமை படைத்தவர் சுரேகா என்பதை பதிவர் சந்திப்பின்போது அறிந்து கொண்டேன்.
ReplyDeleteநன்றி!
ReplyDeleteதெரிந்தவர்கள்தான்.... அறிமுகம் அருமை
ReplyDeleteஇயக்குநர் பாலுமகேந்திரா அவர்களின் தளத்தை அறிந்துகொண்டேன்.. கவிஞரின் திறமையான பேச்சை பதிவர் சந்திப்பில் வீடியவோ மூலம் கண்டேன்..
ReplyDeleteசபையோர்களை கலகலப்பாக்குவதிலும், உற்சாகமூட்டுவதிலும் அவருடைய பேச்சிற்கு முக்கியப் பங்கு இருந்தது. காணொளி மூலம் நானும் கண்டு ரசித்தேன்..பகிர்வினுக்கு மிக்க நன்றி..!
பாலு அவர்களின் அறிமுகதிற்காக நன்றி
ReplyDelete