பெருந்திணை - படலம் - 6

 ஒரு பொருள் தீப்பிடித்து எரியும். காற்று கொஞ்சம் வீசினால் அணைந்து போகும். கொஞ்ச நேரத்தில் அதன் மேல் சாம்பல் படரும். மொத்தமாக அணைந்து விட்டது என்று நினைக்கையில் வேகமாக அடிக்கும் காற்று சாம்பலை விலக்கி, மீண்டும் தீப்பிடிக்க வைப்பதோடு, கொழுந்து விட்டு எரிய செய்து விடும். அப்படி ஒரு சம்பவம் அசோக் - சைந்தவி இடையே நிகழ்ந்தது.


அன்றைய பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வுக்கு பிறகு எல்லாம் சற்று அடங்கித்தான் போனது. தன் இணையருடனான கூடலின்போது இடைப்பட்ட நபரின் முகம் அவர்கள் இருவரையுமே யோசிக்க வைத்திருந்தது. மனம் ஒரு சிறந்த அக்கவுண்டண்ட். எப்போதும் கிடைக்கக் கூடியவற்றைக் காட்டிலும் இழக்க நேர்வதை முன் கூட்டியே எச்சரித்து விடும்.


என்ன எதிர்பார்க்கிறான்? சைந்தவியின் உடலை, அவளுடனான கூடலை. ஆனால் அனிதாவுடனான இந்த உறவை பணயம் வைக்கலாமா? அந்தளவு அது அவசியமா? இந்த இடத்தில் உறவு என குறிப்பிடுவது திருமண பந்தத்தை அல்ல. உடலுறவைத்தான்.


அனைவருக்குள்ளும் ஒரு தவறான நம்பிக்கை இருக்கும். நமக்கு அனைத்தும் தெரியும். அனைத்தையும் அனுபவித்து பார்த்து விட்டோம். இனி இதில் புதிதாக என்ன இருக்கிறது என்று. முழுக்க முழுக்க செய்முறையில் மட்டுமே மதிப்பெண் வழங்கக்கூடிய விஷயமிது. அதுவும் ஒவ்வொரு முறையிலும் புதிதாக ஒன்றினை கற்றறிய வேண்டும்.


இணையரின் உடல் முதல் முறை கூடிய போது எப்படி இருந்தது, அதற்கடுத்த கூடலில் துவங்கி இறுதியாக கூடிய வரையிலான நிகழ்வை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். எங்கு துவங்கி எங்கு வந்து நின்றிருக்கிறிர்கள் என்பது புரியும். வெட்கம் விலகுவது மட்டுமல்ல. விளக்கமாக சொல்வதென்றால் இணையரின் உடலை புரிந்துக் கொள்வது. அது எங்கே எப்படி இருக்கும்? எப்படி மணக்கும்? எப்படி சுவைக்கும்? எம்மணத்திற்கு எச்சுவைக்கு என்னென்ன அர்த்தங்கள்? எந்த விரல் எத்திசையில் மடங்கினால் எவ்வளவு உச்சியை அடைந்துள்ளார் என முழுக்க முழுக்க பழக்கத்தினால் கற்றுக் கொள்வது.


உங்கள் உடலை நன்குணர்ந்த இணையரைத் தாண்டி எப்பேர்பட்ட கவர்ச்சி படைத்தவரும் பொருட்டானவர் அல்ல. ஆனால் உங்கள் உடலை அறியாத இணையர் என்றால் கதை வேறு. இங்கு முடிவெடுக்கும் இடத்திலெல்லாம் உங்களை உங்கள் உடல் வைத்திருக்காது. 


தன்னுடலின் மொத்த சூட்சமத்தையும் நன்குணர்ந்த அனிதாவுடனான கூடலை எதன் பொருட்டும் இழப்பதில்லை என முடிவெடுத்தான் அசோக். தன் மனதை வன்மையாக கண்டித்தான். அதுவும் அடங்குவது போல் அடங்கியது. காலம் வருவதற்காக காத்திருக்க துவங்கியது. அப்படியொரு காலமும் வந்தது.


அசோக் அடங்கியிருக்கவும் சைந்தவியும் அதனை வளர்க்க விரும்பாமல் எப்போதும் போல இயல்பாக பழகத் துவங்கினாள். அவ்வபோது அவள் சோதித்து பார்த்ததிலும் அசோக் பக்கமிருந்து எந்த பிரச்சனையும் இல்லை. இடைப்பட்ட இந்த நாட்களில் இருவருமே தங்கள் இணையர்களது பக்கமாக கொஞ்சம் அதிகமாக நெருங்கியிருந்தார்கள். கேட்டால் இருவருமே மறுப்பார்கள். ஆனால் அதுதான் உண்மை. ஏனென்றால் அது அப்படித்தான்.


சேர்ந்தாற்போல் 3-4 நாட்கள் விடுப்பு வந்தது. குழந்தைகளுக்கேற்றார்போல் 2 நாட்கள் செலவளித்து விட்டு, ஒரு நாளை தங்களுக்கான கொண்டாட்டத்திற்கு ஒதுக்க வேண்டும் என முதலில் அனிதாதான் நினைத்தாள். சைந்தவியிடம் பேசவும் ஒரு திட்டம் உருவானது. நால்வருமாக பாண்டிச்சேரி போக திட்டமிட்டார்கள்.


முதல் நாள் மாலை கிளம்பினால் போதும். மாமியார் வசம் பையன்களை விட்டு செல்லலாம். அடுத்த நாள் மாலைக்கு மேல் இல்லை இரவு திரும்பி விடலாம் என்பது திட்டம். திட்டம் தெரியவரவும் முதலில் அசோக் தயங்கினான். என்னதான் அடக்கினாலும் தன் மனதின் வலிமை அவனுக்கு தெரியும். அது கூண்டை விட்டு வெளியே வராமலிருக்கும் வரை எல்லாம் சரிதான். கார்த்திக்கிற்கு உற்சாகம் தொற்றிக் கொண்டது. 


அசோக்கும் கார்த்திக்கும் நன்றாக பழகுபவர்கள்தான் என்றாலும் அவ்வளவு நெருக்கமில்லை. ஆனால் தேவை வரும்போது ஒட்டிக் கொள்வார்கள். Smoke Buddies. 


காரில் எப்போதும் போல முறை மாற்றி ஒவ்வொருவருக்கு பிடித்த பாட்டாகப் போட்டு அலற விட்டு, உடன் சேர்ந்து பாடி, இடையிடையே நின்று புகைப் பிடித்து, படு கொண்டாட்டமாக அக்குறும்பயணம் சென்றுக் கொண்டிருக்க, இடையே அசோக் கொஞ்சமும் சலனப்படவில்லை.


ஒரு சூட் ஏற்பாடு செய்திருந்தார்கள். ஒரு வரவேற்பறை. இரு படுக்கையறைகள். ஒரு பால்கனி. அங்கிருந்து கடலை நன்றாகப் பார்க்கலாம். அங்கேயும் வசதியாக நால்வரும் அமர்வதற்கு இடமிருந்தது.


திட்டமிட்ட படி பானங்கள் வரவழைக்கப் பட்டு, பால்கனியில் அமர்ந்து கடலையும் நிலவையும் பார்த்தபடி, போதைக்குள் புக ஆரம்பித்திருந்தார்கள். இடையில் அசோக்கிற்கு வேலை தொடர்பாக போன் வந்துக் கொண்டேயிருந்தது. பேசியே ஆக வேண்டிய சூழல். மற்றவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அவர்களது படுக்கையறையில் பேசி முடித்து வருவதாக சொல்லி சென்றான்.


அவன் சென்ற கொஞ்ச நேரத்தில், பானம் சிந்தி, டீ ஷர்ட்டை மாற்றி வருவதாக சொல்லி சைந்தவியும் கிளம்பினாள். 


போன் பேசிக் கொண்டே சிகரெட்டை பற்ற வைக்க லைட்டரைத் தேடிய அசோக், பக்கத்து அறையில் இருக்குமோ என்று நினைத்தான். அதில் தவறில்லை. என்ன ஒன்று, ஆளில்லாத அறை என்று நினைத்திருந்தாலும் எதற்கும் கதவை தட்டிப் பார்த்திருக்க வேண்டும். சைந்தவியாவது கதவை தாளிட்டிருக்க வேண்டும். இருவரும் நிதானத்தில் இல்லை. 


அசோக் கதவை திறக்க, உள்ளே சைந்தவி…



- தொடரும்


Comments

Popular posts from this blog

எதற்காக வாசிப்பு?

இவங்களுக்கெல்லாம் பெரிய புத்திசாலினு நினைப்பு?

Indiana Jones And The Temple Of Doom திரை விமர்சனம்