பெருந்திணை - படலம் - 7

 அனிதா சொல்ல சொல்ல சைந்தவிக்கு என்ன பதில் சொல்வது என்றும் தெரியவில்லை. முகத்தை எப்படி வைத்துக் கொள்வது என்றும் புரியவில்லை. 


நெருக்கமான தோழிகள் என்றால் முழு நெருக்கம்தான். ஒளிவு மறைவு என்று பெரிதாக எதுவும் இருக்காது. மனதில் தேக்கி வைக்காமல் சொல்லித் தீர்க்கும் நட்பு இல்லாமையே பெரும் வறுமை. இணையருடன் சின்ன சின்ன சண்டைகள் வரும் நேரங்களில் அவரை குறை சொல்லி புலம்பவும் இவள்தான், கொண்டாடி மகிழ்வதை வெட்கம் பொங்க குறும்பு மின்ன கொட்டித் தீர்க்கவும் இவள்தான்.


பாண்டிச்சேரியில் தங்கிய இரவு நிகழ்ந்ததைத்தான் முதலிரவை முடித்து வந்தவள் கணக்காய் விவரித்துக் கொண்டிருந்தாள் அனிதா. 


தான் மேலாடையின்றி கண்ணாடி முன்பு நின்று பார்த்துக் கொண்டிருக்கையில் அசோக் கதவினைத் திறந்து பார்த்ததும், சில கணங்கள் என்ன செய்வது என புரியாமல் இவளும் உறைந்து நின்றதும், அவன் உறைந்து நிற்பதையும் மீறி அவன் ஷார்ட்ஸ் அசைய, பதறியபடி அங்கிருந்து வேகமாக அவன் கதவை மூடியபடி நகர்ந்ததும் அவள் நினைவுக்கு வந்தன.


“அன்னைக்கு என்னாச்சுன்னே தெரியலை. இத்தனை வருசத்துல இவ்வளவு வெறியோட அவன் பண்ணதேயில்லை. எத்தனை பொசிஷன்ங்கற? மாத்திக்கிட்டே இருக்கான். எனக்கு ஆரம்பிச்சதுமே தெரிஞ்சுருச்சு, இன்னைக்கு நம்ம பேச்சு எதுவும் அவன் காதுல விழப்போறதில்லைன்னு. அப்புறம் இதெல்லாம் எப்பவாவது கிடைக்கறது, குறுக்க பேசி கெடுத்துடக் கூடாதுல்ல?”


“பெட்ல ரஃபா நடந்துக்கிட்டாலே ஒரு கிக்குதான்ல?”


“ஆமா, அதை வாயை திறந்து சொல்லியும் பார்த்தாச்சு, அப்பவும் அப்பப்பலாம் கிடைக்காது. எப்பவாவதுதான் அவனா நடந்துக்கறான். அதுலயும் வழக்கமா சீக்கிரம் முடிஞ்சுட போகுதுன்னு ஒரு பதட்டம் வரும்ல, அது சுத்தமா இல்லை. முடியவே முடியாதுன்னு தோணிடுச்சு”


“ஏன் அப்படி, டிரிங்க்ஸ் பண்ணதாலயா?”


“சேச்சே, எத்தனைவாட்டி டிரிங்க்ஸ் பண்ணிட்டு பண்ணிருக்கோம், இதுக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை. கொஞ்சங்கூட நிதானமே இல்லை. நானும் ஏய், டேய் னு வலில கத்தறன், மயிறா கூட மதிக்கலை, சும்மா கதற விட்டுட்டான்”


“செமயா என்ஜாய் பண்ணிருக்க”


“ஆமான்னுதான் சொல்லனும், ஆனா எனக்கு ஒரே ஒரு உறுத்தல்”


“என்ன?”


“அவன் அதை அனுபவிச்சு பண்ணாப்ல இல்லை, எப்படியாவது முடிக்க முயற்சி பண்ணாப்லதான் இருந்துச்சு”


“ஏன் அப்படி சொல்ற?”


“எனக்கு தெரியாதா? அவன் எங்கிட்ட பேசனது, நடந்துக்கறதுலயே தெரிஞ்சுருச்சு. ஏதோ கொலைப்பசில இருந்தவனாட்டம் இருந்தது”





“பட்டினியா என்ன?”


“சேச்சே அதெல்லாம் வேளாவேளைக்கு கவனிச்சுட்டுதான் இருக்கேன். அது கொஞ்சம் டல்லாதான் போயிட்டுருந்தது. அன்னைக்கு தீப்பிடிச்சுருச்சு, ம், நினைச்சாலே மப்பாகுதுடி”


“ஓவரா பண்ணாதடி”


“சரி சொல்லு, அன்னைக்கு உனக்கு எப்படி போச்சு?”


“எப்பவும் போலத்தான், உன் அளவுக்கு ஸ்பெசல் இல்லை. ரெண்டாவது நாங்க ரெண்டு பேருமே நல்லா டிரிங்க் பண்ணியிருந்தோம்.”


“நாங்களும்தான்”


“இல்லைடி, எனக்கு பெருசா எதுவும் ஞாபகமில்லைன்னேன்”


“ஓ, அப்படி”


ஆனால் அன்று நடந்தது அனைத்தும் சைந்தவிக்கு நன்றாக நினைவிலிருந்தது. எப்போதும் போல் தன்னுடலை கண்ணாடியில் இரசித்துக் கொண்டிருந்தவளுக்கு அசோக் கதவை திறந்து வந்ததே பெரும் அதிர்ச்சியை தந்தது. ஏனென்று தெரியவில்லை, அந்த நொடி கத்தவில்லை. ஆனால் ஓரிரு நொடிகளில் சுதாரித்து கைக்கெட்டிய துணியை வைத்து மறைக்க முயன்றாள். ஆனால் அது முழுமையானதாக இல்லை.


அவள் கத்தாததாலோ என்னவோ அசோக்கிற்கு அங்கிருந்து உடனே நகர வேண்டும் என்றே தோணவில்லை. ஆனால் அவளை பார்க்க பார்க்க அவனையறியாமல் அவனுடல் எதிர்வினையாற்றுவதை அவன் உணர துவங்கியதும், அதை அவளும் பார்க்க நேர்ந்தால் என்னாவது என்ற எண்ணம் அனிச்சையாய் அவனுள் தோன்றவும்தான் அங்கிருந்து விலகி நகர வேண்டும் என்பது அவனுக்கு உறைத்தது.


அசோக் நேராக அவர்கள் அறைக்கு சென்று தாளிட்டுக் கொண்டான். சைந்தவி கொஞ்சம் நிதானித்து விட்டு, உடை மாற்றிக் கொண்டு, வெளியே சென்று, எதுவும் நிகழாதவளாய் சென்று குடியரட்டையில் இணைந்து கொண்டாள். அதற்கும் பல நிமிடங்கள் கழித்துதான் அசோக் வந்தான். சைந்தவி மிகவும் இயல்பாய் வாயாடினாள். அப்படி ஒரு சம்பவம் நடந்ததை இருவருமே மறந்து கடந்து விட வேண்டும் என விரும்பினாள். அதற்கு தான் முதலில் இயல்பாக இருக்க வேண்டும் என்பது அவளுக்கு புரிந்தது.


அவளின் விருப்பம் அசோக்கிற்கும் புரிந்தது போலத்தான் அவளுக்கு தெரிந்தது. சற்று நேரத்தில் அனைவரும் சகஜமானதாக உரையாடல் போன போக்கு காட்டினாலும் அசோக் சற்று வேகமாக குடிப்பதை அவள் கவனிக்காமல் இல்லை. இயல்பாக இருக்க முயன்றாலும் அவனது நடவடிக்கைகளை கவனிக்காமல் இருக்க அவளால் முடியவில்லை.


நள்ளிரவுக்கு பிறகு அவரவர் அறைகளுக்கு சென்ற பின்னரும் சைந்தவியால் முழுமையாக அச்சம்பவத்திலிருந்தும் அவன் என்ன செய்கிறான் என்பதிலிருந்தும் மனதை திருப்ப முடியவில்லை. அனிதாவிடம் ஏதாவது சொல்வானோ என்ற நினைப்பு வந்ததும் சுத்தமாக வேறு எதனையும் அவளால் யோசிக்க முடியவில்லை. 


ஆனால் அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கவில்லை என்பதையும் அவளால் உணர முடிந்தது. அது கொடுத்த ஆசுவாசத்தில் அவளும் கார்த்திக்கிற்கு ஈடு கொடுத்தாள். அவர்களிடைய நிகழ்ந்தது எப்போதும் போலத்தான். அதில் அவளுக்கு புகார் இல்லை. ஆனால் தன்னைக் கண்டு சென்றவனின் வெறியாட்டத்தை கேட்டதிலிருந்து மனம் ஏதேதோ யோசிப்பதை அவளால் தடுக்க முடியவில்லை.


தன்னை நினைத்துத்தானோ? இது அனிதாவுக்கு தெரிந்தால் எப்படி எடுத்துக் கொள்வாள்? நானாக இருந்தால் எப்படி எடுத்துக் கொள்வேன்? அந்த நேரத்தில் அதையெல்லாம் யோசிக்க முடியாது. சரி அதற்கடுத்த நாள் தெரிய வந்தால்?


ஒருவேளை இது எதற்கும் நான் காரணமில்லையோ? எப்படி தெரிந்துக் கொள்வது? 


- தொடரும்


Comments

Popular posts from this blog

எதற்காக வாசிப்பு?

இவங்களுக்கெல்லாம் பெரிய புத்திசாலினு நினைப்பு?

Indiana Jones And The Temple Of Doom திரை விமர்சனம்