கேடி பில்லா கில்லாடி ரங்கா - விமர்சனம்

அன்பர்களுக்கு வணக்கம், நேரடியாக படத்திற்குள் செல்வோம், தமிழில் எனக்கு மிகவும் பிடித்த படங்களின் வரிசையில் "பசங்க" படத்திற்கு என்றும் இடமுண்டு, அதன் இயக்குனரின் படைப்பான படத்திற்கு யாருடைய விமர்சனத்தையும் கேட்காமல் போக வேண்டும் என்று நேற்று சென்றேன். மற்றவர்களுக்கு எப்படியோ எனக்கு நான் கொடுத்த 50 ரூபாய்க்கு இது போதும் என்றுதான் தோன்றியது, ஏனேன்றால் அதே தியேட்டரில்தான் 'அலெக்ஸ் பாண்டியன்' பார்த்தேன். 

 

படத்தில் கதைலாம் இருக்கானு கேட்க கூடாது, ஆரம்பமே அலப்பறைய குடுக்கறாங்க, புது வருசத்துக்கு முன்னாடி நாள் குடிய இத்தோட விடறோம்னு சபதம் எடுத்துகிட்டு குடிக்க ஆரம்பிக்கறப்ப தியேட்டர் முழுக்க விசில், அத்தனை குடிகாரங்களை அரசாங்கம் உருவாக்கி வச்சுருக்கு.

http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQWTkH5jkiM_zHrGBO-sNrDZ5IWSXDWJ4eHnaqCRtCl1yKJHl_kEw

மத்த படம் மாதிரி இல்லாம பட ஹீரோனு வர்ர 2 பேருக்கும் கவுன்சிலர் ஆகனும்னாவது லட்சியம் இருக்கேனு சந்தோச பட்டுக்க வேண்டியதுதான். தன்னை பார்த்து கண்ணடிக்கற பொன்னுகிட்ட " நீயெல்லாம் அண்ணன் தம்பி கூட பிறக்கலை?" னு கேட்கறதுல ஆரம்பிச்சு படம் முழுக்க சிவாவோட டைமிங் காமெடிதான் படத்தை காப்பாத்துது.

 http://kollywoodz.com/wp-content/uploads/2012/08/Kedi-Billa-Killadi-Ranga-Movie-Stills04.jpg

அதுலயும் அவர் ஜோடிகிட்ட, பேர் பாப்பாவாம்,
 "உங்க பேர்ல படம் வந்துருக்கு, பாப்பா போட்ட தாப்பா"
"யாரு ஹீரோ?"
"ஹீரோலாம் மேட்டர் இல்லைங்க, மேட்டர்தான் ஹீரோ, cd வேணுமா?"னு கேட்கறப்ப மறுபடியும் விசில்.

விமலுக்கு சரியான வாய்ப்பு களவானிக்கு அப்புறம் அமையலைனுதான் சொல்லனும், ஆனாலும் பராவாயில்லை, எனக்கு இவருக்கு ஜோடியா போட்ட பொன்னு ரொம்ப சுமாராதான் படுது, இல்லை இந்த படத்துல அப்படி காட்டிருக்காங்களானு தெரியலை.

ஆனா நிக்கற மாதிரி நிறைய காமெடி இருக்கு, இவங்களே 3 பவுன் செயின் கவரிங்ல வாங்கி MLA கிட்ட குடுத்து மேடையில போட சொல்றது ஏதோ தமிழின தலைவரை கிண்டல் பண்ற மாதிரி இருக்கு. ஒவ்வொரு ஓட்டா கரெக்ட் பன்னனும்னு முடிவு பன்னிட்டு அதுக்காக டாஸ்மாக்ல வேலை செய்யற பையனுக்கு சால்வை போடறதுலாம் பாண்டிராஜ் டச்.

https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcTvSbzCEuSQrvIYG5thKUFxGMXL3ip7WLWItnKXuO0GkHUQSlahTA

"உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் ரோசமில்லை ரோசமில்லை ரோசம் என்பது இல்லையே"

"டேய் என்னை பார்த்து கேவலமா சிரிங்களேன்"

"நீ எத்தனை தடவ என் பொன்னுகிட்ட அடி வாங்கி இருக்க? நான் 470 தடவை, என் பொன்டாட்டிகிட்ட 1280 தடவை, இவ்வளவு ஏன்? என் மாமியாரே என்னை 23 தடவை தூக்கி போட்டு மிதிச்சுருக்காங்கனா பாரேன்"

"சீன்ல ட்விஸ்ட் வைக்கறாங்களாம்"

"டேய் நீங்க அரசியலுக்கு புதுசா? சின்னம் கிடைச்சதுக்கே கொண்டாடறிங்க"

"ஏன்டா, வாங்குன 39 ஓட்டுக்கு ரிசல்ட்க்கு முன்னாடியே வெற்றிக்கு நன்றினு போஸ்டர் அடிச்சத கூட பொறுத்துக்குவேன்டா, ஆனா இந்த 39 ஓட்டுக்கு பொட்டிய மாத்திருவாங்கனு விடிய விடிய தூங்க விடாமா காவல் காக்க வச்சதைதான் தாங்க முடியலை"

"மச்சான் அவங்க தோத்துட்டாங்கடா"
"நாம?"
"நமக்கு டெபாஸிட் தான் போச்சு"

"உன்னையாவது அடிச்சாங்கடா, என்னை முட்டி போட வச்சு மண்டைலயே லவ் பன்னுவியா லவ் பன்னுவியானு கொட்டி அசிங்க படுத்திட்டாங்கடா?"

 "அடுத்தவன் காசுக்கு அப்பனும் பையனும் அலையறத பாரு, எங்களுக்கும் ஜெராக்ஸ் கடைலாம் இருக்கு"


இதெல்லாம் நம்மளை சிரிக்க வைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள், எனக்கு சிரிப்பு வருது, ஏன்னா நான் போனது டப்பா தியேட்டர், டிக்கெட் 50 ரூபாய்தான், தியேட்டர்ல இருந்த 90 பேர்ல 60 பேர் எனக்கு நல்லா தெரிஞ்சவங்க, ஒருத்தரை ஒருத்தர் கிண்டல் பண்ணிகிட்டு பார்த்தோம், எல்லாருமே அராத்துங்கறதால டைம்பாஸ் ஆச்சு.

நீங்க முடிஞ்ச வரைக்கும் நண்பர்களோட போங்க, க்ளைமாக்ஸ்க்கு மட்டும் வெளியே போய்ட்டு வாங்க,  படம் முடிஞ்சது போடற க்ளிப்பிங்ஸ் கூட நல்லாதான் இருக்கு.

Comments

  1. விமர்சனத்துகூட வசனம் வேற....நல்லா இருக்கு..அப்போ படம் 50 ரூபாய்க்கு ஒர்த் தான்,,..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இவங்களுக்கெல்லாம் பெரிய புத்திசாலினு நினைப்பு?

கலாய்ச்சுட்டாராமாம்...

Indiana Jones And The Temple Of Doom திரை விமர்சனம்