ஹரிதாஸ் - பாராட்டப்பட வேண்டிய முயற்சி
அன்பர்களுக்கு வணக்கம், முன்பு போல் நிறைய எழுத நேரமும் மனமும் இருப்பதில்லை, இன்று தான் இப்படத்தினை பார்த்தேன், படம் வருவதற்கு முன்பாகவே கேபிள் சங்கர் அவர்கள் தனது வலைத்தளத்தில் இப்படத்தினை குறிப்பிட்டு கட்டாயம் பார்க்க வேண்டிய படமென்று சொல்லி இருந்தார், நானும் என் நண்பர்களிடம் இப்படத்தினை பற்றி கூறி இருந்தேன், சரி படத்தினுள் செல்வோம்.
முதலில் ஆட்டிசம் பற்றி தெரிந்து கொள்வோம், அது ஒரு வகையான குறைப்பாடாக தெரியும் திறமை, இதனை உடையவர்கள் சராசரி சமூகத்தினை பார்ப்பவர்கள் அல்ல, அவர்களுக்கென்று ஒரு உலகத்தினை உருவாக்கி அதனுள்ளே வாழ்பவர்கள், உதாரணத்திற்கு ஆல்பர்ட் ஐன்ஸ்டின், பள்ளி படிப்பிற்கு தகுதியற்றவர் என்று வீட்டிற்கு அனுப்ப பட்டவர், அவரது தியரி இல்லாமல் இப்போதைய இயற்பியல் இல்லை.
எனக்கு ஒரு தோழி, ஆட்டிசம் சம்பந்தப்பட்ட பயிற்சிகளை கொடுப்பதற்கான படிப்பை(Rehabilitation science) படித்தவள், அவளிடம் பேசும் போது நிறைய விசயங்கள் தெரிந்து கொண்டேன், நாம் ஒவ்வொருவரும் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் தான், சிலர் புத்தகத்திற்குள்ளும், சிலர் கிரிக்கெட்டிலும், சிலர் சினிமாக்களிலும் தங்கள் உலகத்தை உருவாக்கி கொண்டுதான் இருக்கிறோம். சரி இதை பற்றி இன்னொரு பதிவில் பேசுவோம்.
படத்தில் இத்தகைய கதைக்களத்தை தேர்ந்தெடுத்த இயக்குனரை பாராட்டி விட்டு கதையை பார்ப்போம், முழுக்க முழுக்க கடுமையான என்கவுன்டர் பணியில் ஈடுபடும் போலிஸ் ஆபிசர் கிஷோர், தனது தாயாரிந் இறப்பிற்கு பின் தன் ஆட்டிசம் குறைபாடுடைய குழந்தையை தன்னுடன் அழைத்து வருகிறார், மருத்துவரிடம் கலந்தாலோசிக்கும் போது நிறைய விசயங்கள் தெரிகிறது. முக்கியமாய் முன்னாள் குடியரசு தலைவர் இத்தகைய குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் படிக்க ஏதுவான வகையில் சட்டம் இயற்றியுள்ளார்.
அரசு பள்ளி ஆசிரியையாய் வரும் சினேகா, கொஞ்சம் கொஞ்சமாய் குழந்தையை நெருங்கும் சூழல் இயல்பாய் இருக்கிறது, சொல்லிப்போனால் அனைத்து காட்சிகளும் யதார்த்தமாய் எடுக்கப் பட்டுள்ள்ளது, வேண்டுமென்றே திணிக்கப்பட்ட காமெடி காட்சிகள், என்கவுண்டர் காட்சிகள் தவிர, ஆனால் வேறு வழியில்லை, வெறுமனே ஆட்டிசம் பற்றி எடுத்திருந்தால் டாக்குமென்ரி படம் போல் இருக்கும்.
தன் மகனின் களம் எதுவென்று தெரியாமால் மழையில் அழும் காட்சியிலும், மகனை பைத்தியம் என்று சொன்ன கடைக்காரனை சீறி அறையும் காட்சியிலும், கடைசியில் ஓட்டப்பந்தயத்தில் தனது மகனை சேர்த்து கொண்டாலே அவனுக்கு வெற்றிதான் என கெஞ்சும் காட்சியிலும் கிஷோர் நம் மனதில் இடம் பிடிக்கிறார்.
யாருங்க அந்த பையன்? அவனோட முகத்தை பார்த்தா நடிப்புனே சொல்ல முடியாது, அவ்ளோ இயல்பா இருந்துருக்கான். நிறைய சின்ன சின்ன கேரக்டரை இயக்குனர் பார்த்து பார்த்து வச்சுருக்கார், இந்த படத்துலயும் குறை சொல்றதுக்கு விசயம் இருக்கு, ஆனா சொல்ல மாட்டேன், அப்புறம் மத்த படத்துக்கும் இதுக்கும் வித்தியாசம் இல்லாம போய்ரும்.
அன்புடன்
கதிரவன்
உங்களின் மேலான கருத்துக்களை தெரிவியுங்கள்
நல்ல விமர்சனம்... ஆட்டிசம் பற்றி திரு. யெஸ்.பாலபாரதி அவர்களின் தளத்தில் முழு விவரங்கள் உண்டு...
ReplyDeleteLink : http://blog.balabharathi.net/
வலைத்தள அறிமுகத்திற்கு நன்றி தோழரே
DeleteThanks Dhanapalan for the link!!
ReplyDelete