- மழைச்சாரல்: SALT n PEPPER மலையாளம் திரைவிமர்சனம்
expr:class='"loading" + data:blog.mobileClass'>

Tuesday, 16 October 2012

SALT n PEPPER மலையாளம் திரைவிமர்சனம்

அன்பர்களுக்கு வணக்கம், வரவர நண்பர்கள் கேலி செய்யும் அளவிற்கு மலையாள படங்களை பார்க்க துவங்கி விட்டேன், எப்போதும் தமிழனுக்கு தமிழ் பெண்களை விட மலையாளப் பெண்களைத்தான் அதிகம் பிடிக்கும், மறுக்கும் ஆண்கள் மறக்காமல் பின்னூட்டமிடவும், "22 FEMALE KOTTAYAM" படத்திற்கு அந்த இயக்குனரின் படமான "SALT N PEPPER" படத்தினை மிகவும் விரும்பி தரவிறக்கம் செய்து பார்த்தேன்.

 

ஜாக்கி அண்ணன் எனக்கு முந்தி கொண்டார், அவர் எழுதிய இப்படத்தின் விமர்சனத்தில் பாலகுமாரனின் "ருசியை அறு" வாக்கியத்தினை மேற்கோள் காட்டி இருப்பார், நான் பாலகுமாரனின் தீவிர விசிறி, என் நடவடிக்கைகளில் பலவற்றினை மாற்றியது பாலகுமாரனின் எழுத்துக்கள் தான், ஆனால் என்னால் இன்னமும் ருசியை அறுக்க முடியவில்லை, இப்படத்தின் மென்மையான ஆழமான காதல் சொல்லப் பட்டுள்ளது.

படத்தில் கதை நாயகன் நமது சண்டைக்கோழி வில்லன் "லால்" அகழ்வாராய்ச்சி துறையில் வேலை பார்ப்பவர், பெண் பார்க்கும் இடத்தில் பலகாரத்தினை ருசித்து சாப்பிட்டு சமையல்காரனை கையோடு கூட்டி வருபவர், பட ஆரம்பத்தில் சிறுவயது பள்ளியில் ஆசிரியர் உணவு சங்கிலி பற்றி பாடம் நடத்தும் பொழுது வாழ்வதற்காக சாப்பிடுகிறோம் என சொல்வார், அதற்கு லால் "இல்லை சாப்பிடுவதற்காகத்தான் வாழ்கிறோம்" என் சொல்லி புளியங்காய் எடுத்து சப்பி சாப்பிட்டு எல்லோருடைய வாயிலும் உமிழ் நீர் சுரக்க வைப்பார்.

தனியாக சமையல்காரனுடன் வாழ்ந்து வரும் காளிதாசனுடன்(லால்) அவரது தூரத்து உறவினர் மகன் வந்து தங்குகிறான், அவன் மூலம் கிடைத்த செல்போனில் ராங் நம்பர் மூலமாக தோசை ஆர்டர் குடுத்து அறிமுகமாகிறார் மாயா(ஸ்வேதா மேனன்), திட்டி, சாரி கேட்டு நட்பாகிறார்கள், இருவருமே வயதான பிரம்மசாரிகள், எதிர்பாலினத்தின் நட்பு இருவருக்குமே புதிது. அந்த இரண்டாம் உலகப்போர் காதலும் கேக்கும் கவித்துவமாக காட்டிருக்கிறார்கள்.

 

இருவரும் நேரில் சந்திக்க முடிவெடுக்கும் பொழுது இருவருக்குமே தயக்கம், வயது அதிகமாய் தெரியும் தோற்றத்தில் இருக்கும் நிலையில் முதல் சந்திப்பில் பிடிக்காமல் போய் நட்பினை இழக்க இருவருமே தயாராயில்லை, இருவருமே இளமையான தங்களது நண்பர்களை அனுப்ப, இருவருக்குமிடையேயான நட்பு முறிகிறது.

 

புதிதாய் இளைய ஜோடிகளுக்குள் நட்பு துவங்குகிறது,கொஞ்சம் கொஞ்சமாய் மனதிலும் இடம் பிடிக்கிறார்கள், அதே நேரத்தில் திடிரென்று பிரிவினை தாங்க முடியாத காளிதாசன் - மாயா விற்கு தாங்க முடியாத சோகமும், வாழ்வில் வெறுப்பும் ஏற்படுகிறது, கொஞ்சம் கொஞ்சமாய் துணிச்சலாய் முடிவெடுத்து லால் போன் செய்து மாயாவை நேரில் சந்திக்கலாம் என வர சொல்கிறார், மாயாவிற்கும் எதுவாருந்தாலும் முடிவுக்கு வருவதே நல்லது என நேரில் சந்திக்க கிளம்புகிறார்.


இளம் ஜோடிகளுக்கு பயம் வருகிறது, எங்கே அவர்கள் நேரில் சந்தித்து கொண்டால் நமது காதல் பாதியில் கெட்டு விடுமோ என்று தனி தனியாக பயந்து ஒரே மாதிரி முடிவெடுத்து ஊரை விட்டு கிளம்புகிறார்கள், அங்கே எதெச்சையாக 4 பேரும் ஒரே வண்டியில் பயணிக்கும் சூழல் வருகிறது, சண்டை வந்து ஆளுக்கு ஒரு பக்கம் கிளம்பி செல்கிறார்கள், எப்படி இந்த 2 ஜோடியும் ஒன்று சேருகிறது என்பதே கதையின் முடிவு.

 

அழகான படம், ஆழமான உணர்வுகள், அதிலும் ஸ்வேதா மேனன் குடித்து விட்டு பேசும் காட்சி எதார்த்தமான உண்மைகள், காதல் துவங்கிய பின்னர் இருவரும் தோற்றத்தில் கவனம் செலுத்தும் காட்சிகள் கவிதை, அந்த "பிரேமிக்கும் போல்" பாட்டை 10 தடவைக்கு மேல் திரும்ப திரும்ப கேட்டேன், அருமையான படம், தவற விடாதீர்கள்.

படத்தின் ட்ரெய்லர்.பதிவினை பிடித்திருந்தால் ஓட்டளித்து, நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள், உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

2 comments:

  1. நீங்கள் சொல்வதைப் பார்த்தால் வித்தியாசமான கதையாகத் தோன்றுகிறது.விமர்ச்னம் நன்று

    ReplyDelete
  2. நல்ல படம் போல்தான் இருக்கு.. அதென்ன கேரளப்பெண்கள் என்றால் தமிழனுக்குப்பிடிக்கும்..! அப்படியா?ஆச்சிரியமா இருக்கே தகவல்..!

    ReplyDelete