- மழைச்சாரல்: கொம்பனும் குட்டிப்புலியும்
expr:class='"loading" + data:blog.mobileClass'>

Tuesday, 7 April 2015

கொம்பனும் குட்டிப்புலியும்

படத்தை பற்றி சொல்வதற்கு முன்பு ஒரு விஷயம் சொல்கிறேன். எனது கல்லூரியில் சீனியர் ஒருவர் இருப்பார், அவருக்கு இருக்கும் எல்லா கெட்ட பழக்கங்களும் உண்டு, படிப்பிலும் ஒவ்வொரு பருவத்திலும் அர்ரியர் எண்ணிக்கையை ஏற்றி கொண்டே செல்வார். ஆனால் முரணாக ஒரு பழக்கம் அவரிடம் உண்டு. ஜீனியர்ஸ் ஐ பார்த்தால் “டேய் ஒழுங்கா படிங்கடா, தம்மடிக்காதிங்கடா, தண்ணி அடிக்கறது கெட்ட பழக்கம்டா, இல்லைன்னா என்னை மாதிரி கஷ்ட பட வேண்டியது தான்” என் அறிவுரையாய் அரிந்து தள்ளுவார். இதில் என்ன இருக்கிறது, எல்லா சீனியர்களும் செய்வதுதானே என்பீர்கள். இவர் இதை தன்னுடைய இரண்டாம் வருடத்திலேயே துவங்கி விட்டார். செய்வது தவறு என தெரிந்தால் திருத்திக் கொள்ள வாய்ப்பு இருக்கும் பொழுது திருத்திக் கொள்ளாமல் அடுத்தவருக்கு அறிவுரை கூறுவது…?அது போலத்தான் கொம்பனும், படம் துவங்கிய உடனே பெண்கள் விடியற்காலையில் எழுந்து பொறுப்பாக வேலைக்கு செல்வதும், ஆண்கள் பொறுமையாக ப்ஞ்சாயத்துக்கு கிளம்புவதை பார்த்து தனது மகனிடம் “ஒழுங்கா படிக்கலைன்னா இவனுங்க மாதிரி உருப்படாம போயிடுவ” என் சொல்வதையும் பார்த்துவிட்டு “ஓகோ, இப்படம் ஊரில் வெட்டியாய் திரிபவர்களுக்கு பாடமாய் இருக்கும் போல” என நினைத்து பார்க்க ஆரம்பித்தால் ஏமாற்றமே மிஞ்சும்.

சொந்த வேலையை விட ஊர்பிரச்சனைக்காக அதிகம் நேரம் ஒதுக்கும் நாயகன், தந்தைக்கு ஒரு கட்டிங் அளவாய் ஊற்றிக் கொடுத்து நிறைய மீன் வருத்து கொடுக்கும் நாயகி, தன்னை எதிர்ப்பவர்களை ஒழித்து கட்டும் வில்லன் கும்பல், இவர்களிடம் பெண் கொடுத்து நடுவில் வந்து சிக்கிக்கொள்ளும் ராஜ்கிரன் கதாபாத்திரம் என வைத்துக்கொண்டு என்ன பெரிய வித்தியாசமான படம் கொடுத்து விட முடியும்?

No comments:

Post a Comment