- மழைச்சாரல்: சதுரங்க வேட்டை - உலக சினிமா
expr:class='"loading" + data:blog.mobileClass'>

Saturday, 19 July 2014

சதுரங்க வேட்டை - உலக சினிமா

அன்பர்களுக்கு வணக்கம், உங்களுக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து கொஞ்சம் தெளிவா சொல்லனும்னா உங்க கையில பணம் வர ஆரம்பிச்சதுக்கு அப்புறம் யார்கிட்டயாவது பணத்தை ஏமாந்து இருக்கிங்களா? கடன் கொடுத்து ஏமாந்ததை கேட்கலைங்க, குறுக்கு வழில சம்பாதிக்க ஆசைப்பட்டு ஏமாந்து இருக்கிங்களா?

1 வச்சா 2
2 வச்சா 4
5 வச்சா 10
10 வச்சா 20 னு கூவி கூவி கூப்பிடற லங்கர் கட்டை உருட்டறவன்கிட்ட பணத்தை விட்டு இருக்கிங்களா? 

வெறும் 2 பேரை நமக்கு கீழ் சேர்த்து விட்டா போதும், அதுக்கு அப்புறம் வேலைக்கே போகாம பணம் சம்பாதிக்கலாம்னு சொல்ற, உங்களை சேர சொல்லி டார்ச்சர் பண்றவங்களை பார்த்துருக்கிங்களா?

உங்களுக்கு தெரிஞ்சவங்க யாராவது மன்னுளி பாம்பு வியாபாரம் பண்ணி கோடி கோடியா சம்பாதிக்கலாம்னு பைத்தியகாரனா அலைஞ்சத பார்த்துருக்கிங்களா?

கோபுர கலசத்துல இடி இறங்குனா அது இரிடியமா மாறிடும், அப்படி மாறுன கலசத்தை கோடி கணக்குல வாங்க ஆள் இருக்குனு நம்பற ஆளா நீங்க?

உங்களோட, நம்மளோட முட்டாள்தனத்தை வெளிப்படையா காட்டற படம் தான் இந்த "சதுரங்க வேட்டை"

http://content.silverscreen.in/wp-content/uploads/2014/06/394d443a30f9fc26ff7b2982df0b6395.jpg

"ஒருத்தனை ஏமாத்தனும்னா அவன்கிட்ட கருனைய எதிர்பார்க்க கூடாது, அவன் ஆசைய தூண்டனும்" இதான் படத்தோட நாயகன் காந்தி பாபுவோட சித்தாந்தம்

கிடைக்கறவங்க எல்லோரோட ஆசையையும் தூண்டி விட்டு, ஏமாத்தி லட்சத்துலயும் கோடிலயும் பணம் சம்பாதிச்சுகிட்டு ஆள் போய்ட்டே இருக்கார். ஒரு இடத்துல போலிஸ்ல மாட்டுன பிறகுதான் அவரால எத்தனை பேர் ஏமாந்தாங்கங்கற பட்டியல் வெளிய வருது.

கோர்ட்ல வரப்போற ஜட்ஜ்மென்ட் நமக்கே தெரியும், ஏன்னா நாமதான் தினமும் இந்த படத்தோட கதை தினசரி செய்திகள்ல படிக்கறோமே!

கேஸ்ல இருந்து தப்பிச்சு வெளிய வர காந்தி பாபுவ அவரால ஏமாத்தப்பட்ட ஒருத்தன் ஒரு ரவுடி கும்பலோட உதவி மூலமா கடத்திட்டு போய் டார்ச்சர் பண்ணி பணம் கேட்க, நாயகனோட பணத்தை எடுத்துட்டு வரவேண்டிய அவரோட அல்லக்கைங்க அவரை ஏமாத்திட்டு ஒட அதுக்கு அப்புறம் தான் கதையோட விறுவிறுப்பு  அதிகமாகுது.

சுருக்கமா சொல்லனும்னா பணம்தான் எல்லாமேனு நினைச்சு குறுக்கு வழில சம்பாதிக்கற நாயகன், அதே பணத்துக்காக என்ன வேணா செய்யற கொலைகாரன்கிட்ட மாட்டுனா என்ன ஆகும்? இதான் கதை

http://moviegallery360.com/wp-content/uploads/2014/04/Sathuranga-Vettai-Movie-images-08.jpg

கதை நாயகன் நடராஜ் (பாலிவுட் கேமராமேன்) இது மாதிரி கதைய எங்க இருந்து தேடி பிடிக்கறாரோ? இவருக்குனு எழுதுன கதை மாதிரியே இருக்கு, சில வசனங்களை இவரோட பாடி லாங்வேஜ்ல சொன்னாதான் சரியா வரும்னு தெளிவா எழுதி இருக்காங்க

"காசில்லாதவன் உடம்பை வச்சு கத்துக்கோ, காசு இருக்கவன்கிட்ட வைத்தியம் பார்த்து சம்பாதி"

"ஏமாறாரதும் ஏமாத்தறதும் இயற்கையா நடக்கற விஷயங்கள்"

"தமிழ்நாட்டை சிங்கப்பூரா மாத்தரோம்னு சொல்லி ஓட்டு வாங்கறாங்க, 5 வருசம் கழிச்சும் தமிழ்நாடு அப்படியேதான் இருக்கு, அவங்களும் என்னை மாதிரி 420 தானே, உங்களால அரெஸ்ட் பண்ண முடியுமா?"

"முதலாளி இல்லைன்னா தொழிலாளி இல்லைன்னு சொல்றது முதலாளித்துவம், அதே தொழிலாளி இல்லைன்னா முதலாளி இல்லைன்னு சொல்றது கம்யுனிஷம்"

"உன்னை ஏமாத்தனவன் மேல கோப படாத, ஒரு வழில அவன் உனக்கு குரு"

ஒரு சாதாரண தமிழ் சினிமாவுக்கான எந்த ஒரு அடையாளமும் இதுல இல்லை, குத்துப்பாட்டு, சண்டைக்காட்சிகள், தனி டிராக் காமெடி, பஞ்ச் வசனங்கள்னு எதுவுமே இல்லை,ஆனா படத்துல பல இடத்துல நீங்க சிரிப்பிங்க, படத்தோட நாயகிய உங்க தெருவுல எளிதா நீங்க கண்டு பிடிக்கலாம், அவ்ளோ எளிமையா நடிச்சுருக்காங்க நாயகி இஷா நாயர்

http://moviegallery360.com/wp-content/uploads/2014/04/Sathuranga-Vettai-Movie-images-04.jpg

தமிழ் சினிமாவுல வந்த "கான் மூவி" அது இதுனு சொல்றாங்க, என்னோட மொழில சொல்லனும்னா நாட்ல நடக்கற விஷயங்களை உலகத்தரத்துல சொல்ல எடுக்கப்பட்ட ஒரு நல்ல முயற்சி, கண்டிப்பா இந்த படம் தோற்காது.

http://cdn.onlykollywood.com/wp-content/uploads/2014/06/sathuranga-vettai-release-date.jpg

டெக்னிக்கலா என்னை கவர்ந்த விஷயம் கேமரா தான், அது சுமாரா போயிருந்தா படம் டாக்குமென்ட்ரி ஆகிருக்கும், அதுல குறிப்பா இடைவேளைக்கு முன்னாடி கோர்ட்ல இருந்து ஹீரோ நடந்து வர லென்த் சீன், அதோட மேக்கிங் எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது.

ஹீரோவோட ஃபிளாஷ்பேக்கை ஒரு காமிக்ஸ் மாதிரி சொன்ன விதமும் உண்மையிலேயே அருமையா புது முயற்சி தான்.

படத்தோட தயாரிப்பாளர் நடிகர் மனோபாலா, அதுக்கு ஸ்ட்ராங்கா சிபாரிசு பண்ணது நலன் குமாராசாமி(சூது கவ்வும் - இயக்குனர்) சொல்லிகிட்டே போலாம், நீங்க போய் படம் பாருங்க.

படத்தோட ட்ரெய்லர்பார்க்க வேண்டிய படம் நட்பூஸ்

No comments:

Post a Comment