- மழைச்சாரல்: யாமிருக்க பயமே - Tamil Horror Comedy Film
expr:class='"loading" + data:blog.mobileClass'>

Friday, 9 May 2014

யாமிருக்க பயமே - Tamil Horror Comedy Film

அன்பர்களுக்கு வணக்கம், தமிழில் முதல் முறையாக வந்திருக்கும் Horror-Comedy படம், தமிழ் சினிமாவில் புதிய வகை படங்களை ரசிப்பவர்களுக்கு கண்டிப்பாக இப்படம் பிடிக்கும். படத்திற்குள் செல்வோம். 

 

கிருஷ்னா, ரூபா மஞ்சரி காதலர்கள் என்று சொல்லிக் கொண்டு திரிபவர்கள், ஊர் முழுக்க ஏமாற்றிவிட்டு தன் தந்தையிடம் இருந்து வந்திருக்கும் பாரம்பரிய சொத்தை பார்க்க கிளம்பி சென்றவர்களுக்கு பாழடைந்த பங்களா பலத்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

ஆனால் ஊர் முழுக்க கடன்காரர்கள் தொல்லை, தப்பிக்க வேறு வழியில்லாமல் பெரிதாக ஏமாற்றி கிடைக்கும் பணத்தை வைத்து அந்த பங்களாவை சீராக்குகிறார்கள்.

இதற்கு உதவியாய் கருனாகரன் (அருமை நாயகம்-சூது கவ்வும்), அவனது தங்கை ஓவியா, எல்லாரும் சேர்ந்து குளுகுளு ரெஸ்டாரண்ட்டினை ஆரம்பிக்கிறார்கள், அதன்பின் தான் திகில் ஆரம்பிக்கிறது, அங்கே தங்க வருகின்ற ஒவ்வொருவராய் இறக்கிறார்கள்.