- மழைச்சாரல்: கோதாவரி - ஃபீல்குட் காதல் படம்
expr:class='"loading" + data:blog.mobileClass'>

Wednesday, 7 November 2012

கோதாவரி - ஃபீல்குட் காதல் படம்

அன்பர்களுக்கு வணக்கம், என்னதான் தமிழ் சினிமாவில் சமிப காலங்களில் ஏதேதோ மாற்றங்கள் நிகழ்ந்தாலும் ஃபீல் குட் படங்களின் எண்ணிக்கை சுத்தமாக குறைந்து விட்டது, வருபவர்கள் அனைவரும் சமுதாயத்தை திருத்துவதற்கும், நட்பிற்குமே படமெடுத்து தள்ளுகிறார்கள். இன்று நாம் பார்க்க போவது தெலுங்கில் வந்த ஒரு ஃபேல் குட் படம் "கோதாவரி"

 

தமிழில் 'இனிது இனிது' என்று ஒரு படம் வந்தது, அனைவரும் பார்த்திருப்பீர்கள், அதன் ஒரிஜினல் பதிப்பான "ஹேப்பி டேஸ்" படத்தினை இயக்கிய சேகர் கம்முலாவின் படம் தான் இந்த கோதாவரி. ரொம்ப நாளாக இனையத்தில் இருந்து எடுத்து வைத்து இருந்த படம். சரி கதைக்கு வருவோம்.

நாயகன் ராம் அமெரிக்காவில் படித்துவிட்டு மக்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று ஆளுங்கட்சிக்கு சென்று தன்னை சேர்த்து கொள்ளுமாறு கேட்டு அசிங்கபட்டு வரும் இயல்புக்கு புறம்பான குணம் படைத்தவன், இது போன்ற குணங்களால் நேசிக்கும் அத்தை மகள் ராஜியினை(நீது சந்த்ரா) மணக்க முடியாமால் IPS மாப்பிள்ளைக்கு விட்டு குடுக்கிறார்.


நாயகி சீதா(கமாலினி முகர்ஜி), அப்பா செல்லாமாக வளர்ந்து சொந்தமாக ஃபேஸன் டிசைனிங் தொழில் செய்ய விருப்பபட்டு, ஆணாதிக்கத்தாலும் அழகாய் பிறந்ததாலும் செய்ய முடியாமல் நொந்து போய் இருக்கும் நேரத்தில் வீட்டில் பார்த்த மாப்பிள்ளைக்கு ஓகே சொல்ல, அதுவும் கை நழுவி போக வெறுப்பில் தனியாக பத்ராச்சலம் செல்ல கோதாவரி படகில் செல்கிறார்.


அதே படகில் நாயகனின் சொந்தம் முழுவதும் கல்யாணத்திற்காக வருகிறார்கள், நாயகனுடன் நாயகி சிறு சிறு சண்டையில் அறிமுகமாகிறார்கள், ராமுக்கு காதல் தோல்வி என்பதை சீதா அவர் அவ்வப்போது அத்தைபெண்ணை பார்க்கும் பார்வையிலேயே தெரிந்து கொள்கிறார் சீதா, இருவருக்குள்ளும் நெருக்கம் துவங்குகிறது, 

படகில் பயணிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் இவர்களது காதலை தூண்ட ஏதோ ஒரு விதத்தில் காரணமாகிறார்கள், நாள் போக போக இருவருக்குள்ளும் காதல் துளிர்க்கிறது, ஆனால் சொல்லிக் கொள்ளாத கேப்பில் அத்தை பெண் ராஜி, திடிரென இடையில் வந்து "ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம்" என குண்டு போடுகிறார். 


சும்மாவே நகம் கடிக்கும் சீதாவிற்கு இந்த விஷயம் தெரியும் போது குழம்பி தவிக்கிறார், ஒரு வகையாக அப்படி ஏதும் கள்ள திருமணம் நடக்காமல் போனாலும், அந்த கல்யாணத்திற்கு ஒப்புக்கொண்டதற்காக நாயகனிடம் கோவித்துக் கொண்டு சீதா வீட்டிற்கு சென்று விடுகிறாள், எப்படி இருவரும் ஒன்று சேர்கிறார்கள் என்பது க்ளைமாக்ஸ்.

 

ரொம்ப நாள் கழித்து மனதில் காதலை தூண்ட செய்த படம் இது என்பதை அடித்து சொல்வேன், மென்மையான கதை, அழகான நாயகி, குழந்தை தனமான நடிப்பு, இனிமையான பாடல்கள் என சொல்லிக் கொண்டே போகலாம், கமாலினிக்காகவே 2 தடவை பார்த்தேன், என்ன ஒரு கவிதை தனமான நடிப்பு.


நாயகனுக்காக புடவையில் காத்திருப்பதும், தண்ணீரில் குதுத்தவனை காப்பாற்றியதாக சொல்லிக்கொண்டு தேங்க்ஸ்னை அடம் பிடித்து கேட்டு வாங்கும் போதும், நாயகனுக்கு குடுத்த ஸ்கார்ப்பை சண்டை போடும்போது மறக்காமல் கேட்டு திருப்பி வாங்கி கொள்ளும் போதும் அசத்துகிறார்.

பின்னனி இசை அருமை, சரியாக காதல் துளிர்விடும் ஒவ்வொரு இடத்திலும் சின்ன சின்னதாய் போடப்பட்டிருக்கும் ஹம்மிங்கிலும் பாடல்களிலும் நெஞ்சை என்னமோ செய்கிறார்கள், படம் பார்த்த 2 நாட்களாக இப்படத்தையே மனது அசை போடுகிறது.

ரிதம், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் மாதிரியான படங்களை விரும்புபவர்களுக்கு இப்படம் கட்டாயம் பிடிக்கும், தவற விடாமல் பாருங்கள், இது போல படம் எடுக்கும் இயக்குனர்கள் தமிழுக்கும் தேவை படுகிறார்கள்.

படத்தின் ட்ரெய்லர்உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள், பிடித்திருந்தால் ஓட்டளித்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

3 comments:

 1. பார்த்துடுவோம்

  ReplyDelete
 2. தமிழில் வராதா???????????????

  பார்க்க ஆசையாக உள்ளது...........

  ReplyDelete
 3. சுருக்கமான ரசனையான விமர்சனம்... படம் பார்க்க வேண்டும்...

  நன்றி...
  tm2

  ReplyDelete