ROCKET SINGH - SALESMAN OF THE YEAR திரை விமர்சனம்

அன்பர்களுக்கு வணக்கம்,என்னவோ சோம்பல் போட்டு வாட்டுவதாலும் இடைவிடாத மின்வெட்டினாலயும் பதிவு எழுதும் எண்ணமே வருவதில்லை, விதவிதமாய் எழுதும் எண்ணங்கள் மனதில் இருந்தாலும் திரைவிமர்சனம் மட்டுமே நினைத்ததும் எழுதக் கூடியதாய் இருக்கிறது.


இன்று நாம் பார்க்க இருக்கும் படம் "ROCKET SINGH - SALESMAN OF THE YEAR". இப்படத்தினை பற்றி கேள்விப் பட்டு இருப்பினும் நாயகன் ரன்பீர் கபூருக்காகத்தான் பார்க்க துவங்கினேன், ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்துகிறார் மனிதர், இவருடைய படமான
'BACHNA AE HASEENO'க்கு ஏற்கனவே விமர்சனம் எழுதி இருக்கிறேன். இவருடைய தற்போதைய வெற்றிப் படமான BARFI பற்றி கேள்விப் பட்டு இருப்பீர்கள். சரி கதைக்கு வருவோம்.

படத்தின் பெயரிலேயே நாயகன் ஒரு சிங் என்பது தெரிந்திருக்கும், அபியும் நானும் படம் பார்த்த பின் தான் எனக்கு அந்த சமுதாயத்தின் பெருமை புரிந்தது. தாத்தாவால் வளர்க்கப்பட்டு கல்லூரியில் ரசனையாக பேசி திரிந்து சரியாக பாஸ் மட்டும் ஆகி வெளிவரும் நாயகனுக்கு SALESMAN ஆக வேண்டும் என்பது விருப்பம், அதுதான் தனக்கு பொருத்தமாக இருக்கும் என நம்புகிறார்.


அவர் இன்டர்வியு செல்லும் இடத்தில் விடாமுயற்சியால் வேலை கிடைக்கிறது, அவருக்கு சேல்ஸ் என்பதனை நேரடியாக விளக்க அவருடைய மேலாளர் உடன் அழைத்து சென்று ஆர்டர் பிடித்து காட்டும் இடம் மிக அருமை. ஆனால் அடுத்த முறை தனியாக செல்லும் நாயகன் தனது அதிகப்படியான நேர்மையால் தன் நிறுவனத்தில் அனைவரிடமும் பேரை கெடுத்து கொள்கிறார்.

 அன்றிலிருந்து அலுவலகத்தில் அனைவரிடத்திலும் கேலிப் பொருளாகிறார். அங்கு டெலிபோன் ஆப்ரேட்டராய் இருப்பவர் செய்த உதவியால் ஆர்டர் பிடிக்க நேரடியாய் செல்லும் இடத்தில் தனது நிறுவனம் கம்ப்யுட்டர்களை அதிகப்படியான விலைக்கு விற்பதனையும் அதே நேரம் சர்வீசும் சரியில்லை என்பதனையும் உணர்ந்து கொண்டு தனியாய் சொந்த கம்பெனி பெயரில் சேல்ஸ் செய்ய துவங்குகிறார்.

அனைவரும் அவர் மேல் காகித ராக்கெட்டினை விடும் நேரத்தில் நிறுவனத்திற்கு ராக்கெட் கார்ப்பரேஷன் அன பெயரிடுகிறார், அதற்கு உதவ அலுவலகத்தில் எப்போதும் தூங்கும் ஆபாஷ படங்களை பார்க்கும் நண்பநை உபயோகிக்கிறார், வெற்றிகரமான விற்பனை துவங்குகிறது.

நிறுவனத்தில் யாரும் ஊழியர்கள் இல்லை, அனைவரும் பங்குதாரர்கள், அடுத்ததாய் அந்த டெலிபோன் ஆபரேட்டர், கம்ப்யுட்டரை விரைவாய் பிரித்து மேய தெரிந்த ஆபிஷ் ப்யூன், இவர்களை கண்டறிய பணிக்கப்படும் மேலாளர் என 5 பேர் சேர்ந்து ரகசியமாய் "ROCKET SALES CORPORATION"ஐ நடத்துகிறார்கள்.


நாளுக்கு நாள் இவர்களின் விற்பனை அதிகமாகிக் கொண்டே போகிறது, இவர்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தின் முதலாளிக்கு புதிதாய் போட்டி போடும் நிறுவனத்தினால்தான் தங்களது விற்பனை பாதிக்கப்படுவது தெரிந்து அந்த கம்பெனியினை தேட துவங்குகிறார். வெளியில் இருந்தால்தானே கண்டறிய முடியும்.

இரண்டு கம்பெனி நிறுவனர்களும் போனில் பேசிக்கொள்ளும் காட்சி அருமையாய் எடுத்திருப்பார்கள். கம்பெனியினை விட்டு வெளியேற அனைவரும் முடிவெடுத்த நேரத்தில் எதிர்பாராமல் மாட்டிக் கொண்டு சிறை செல்கிறார்கள். மற்றவர்களின் நலனுக்காக 3 வருடம் எந்த தொழிலும் ஈடுபட மாட்டேன் எனவும், தனது ராக்கெட் சேல்ஸ் நிறுவனத்தினை அவர்களது நிறுவத்திடமே விட்டு குடுத்து விடுகிறார் நாயகன்.


ஆனால் பழைய சேல்ஸ் ரேட்டை என்ன முயன்றாலும் யாராலும் கட்டுக்குள் வைக்க முடியவில்லை, நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கிறது. என்ன முடிவு என்பதனை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். நாயகனுக்கு காதல் காட்சிகளும் உண்டு, ஆனால் கதையின் வேகத்தினை பாதிக்காதவாறு வைக்க பட்டுள்ளது.


தொழிலில் ஈடுபடும் அனைவரும் பார்க்க வேண்டிய படம், காதலும் வன்முறையும் இல்லாமலே படம் நல்ல வேகம், ரன்பீர் கபூர் ஒரு திறமையான நடிகன் என்பதற்கு இப்படமும் ஒரு சாட்சி, கண்டிப்பாய் அனைவராலயும் இப்படத்தின் மூலம் ஒரு கருத்து உணர முடியும், தவறாமல் பாருங்கள்.

படத்தின் ட்ரெய்லர்



பதிவு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள், ஓட்டளியுங்கள், குறையிருப்பின் தெரிவியுங்கள்.

Comments

  1. ங்கொய்யால..அரைகுறையா ரிவ்யூ எழுதி வைச்சிருக்க...நான் எழுதுறேன் வந்து படி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மைத்திருவிழா

எதற்காக வாசிப்பு?

இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பண்ணிக்கலாம்- கடுப்பு பாகம் 2