Posts

Showing posts with the label சிறுகதை

மைத்திருவிழா

நல்ல வெயில். ஒவ்வொரு வருடமும் இதுவரை இப்படியான வெயிலைப் பார்த்ததில்லை என்ற வசனத்தை எதிர்கொள்வது வழக்கமாகி விட்டது. காரணம் இதோ கண்ணெதிரேயே தெரிகிறது. இந்தச் சாலையில் முன்பெல்லாம் இருபக்கமும் இருந்த அடர்த்தியான புளிய மரங்கள் நினைவில் கூட மங்கலாகத்தான் தெரிகின்றன. சாலை விரிவாக்கம் என்ற வசதிக்காக எவ்வளவு பெரிய விலையைக் கொடுத்திருக்கிறோம்? ஐம்பது கிலோமீட்டருக்கு மூன்று முறை ஜூஸ் குடிக்க வண்டியை நிறுத்துமளவு வெக்கை. காலை 10 மணிக்கெல்லாம் பயிற்சி நிலையத்திற்கு வரச் சொல்லித்தான் ஆர்டர். ஆனால் பூத் ஆர்டர் வருவதற்கு எப்படியும் 12 மணிக்கு மேலாகும் என்பதால் எல்லோரும் 1 மணிவாக்கில்தான் வருவார்கள். எங்கள் குழுவில் எல்லோரும் ஆண்கள். வழக்கமாகத் தேர்தல் பணிக்கெனக் குழுக்களைப் பிரிக்கும்பொழுது ஆண்களும் பெண்களும் இருப்பது போலத்தான் பிரிப்பார்கள். ஏனென்றால் பெண்களால் அனைத்து உடல் உழைப்பு வேலைகளையும் செய்ய முடியாது. மேலும் பூத் ஏஜெண்டுகளைச் சமாளிப்பது அத்தனை எளிதல்ல. முழுக்கப் பெண்களென்றால் எளிதாக மிரட்டி தேர்தலை அவர்கள் விருப்பத்திற்கேற்றவாறு நடத்தத் துவங்கி விடுவார்கள். என்னுடன் கடந்த உள்ளாட்சித் தேர்தலு...

வேஷம்

Image
அன்பர்களுக்கு வணக்கம், இன்றைய தேதியில் ஒவ்வொருவரும் தங்களது சொந்த அடையாளங்களை தொலைத்து விட்டு வேலைக்காகவும், சம்பளத்திற்காகவும் இன்னும் பல காரணங்களுக்காகவும் நாம் வேடமிட்டு வாழ்கிறோம். அதை விளக்கும் ஒரு சிறிய நகைச்சுவை சிறுகதை. சர்க்கஸ் முதலாளியிடம் இளைஞன் ஒருவன் வந்தான். ஐயா நான் ஏழை. வேலை இல்லாமல் தவிக்கிறேன். எந்த வேலை கொடுத்தாலும் செய்கிறேன். ஏதேனும் வேலை கொடுங்கள் என்று கெஞ்சினான். இரக்கப்பட்ட முதலாளி, இங்கு உனக்குத் தருவது போல வேலை எதுவும் இல்லை. சர்க்கசில் இருந்த கொரில்லா குரங்கு ஒன்று இறந்து விட்டது. அந்தக் கொரில்லாவின் தோலை போர்த்திக் கொண்டு நீ கொரில்லா போல நடி சர்க்கசைப் பார்க்கும் எல்லாரும் உன்னை உண்மையான கொரில்லா என்றே நினைத்துக் கொள்வார்கள். நான் உனக்கு சம்பளம் தருகிறேன். நீ என்ன சொல்கிறாய்? என்று கேட்டார். அவனும் ஒப்புக் கொண்டான். சர்க்கஸ் நடந்து கொண்டிருந்தது. கொரில்லாவைப் போல வந்த அவன் கம்பிகளில் தாவி விளையாடினான். பிடி தவறிய அவன் சிங்கத்தின் கூண்டருகே விழுந்தான். சிங்கம் அவனை நெருங்கியது. பயந்து போன அவன், ஐயோ! சிங்கம்! என்னைக் காப்பாற்று...

கடவுள் எல்லாத்தையும் பாத்துக்குவாரா ?

Image
ஒரு ஊர்ல ஒரு ஆள் இருந்தான். அவனுக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம். அடிக்கடி கோவிலுக்கு போவான்.கடவுளை வேண்டிக்கு வான். அதுக்கப்புறம் காட்டுக்கு போவான். விறகு வெட்டுவான்.அதை கொண்டுகிட்டு போய் விற்பனை செய்வான். ஓரளவுக்கு வருமானம் வந்தது. அதை வச்சிக் கிட்டு நிம்மதியா வாழ்க்கை நடத்திகிட்டு இருந்தான். ஒரு நாள் அது மாதிரி அவன் காட்டுக்கு போகும் போது அங்கே ஒரு நரியை பார்த்தான். அந்த நரிக்கு முன்னங்கால் ரெண்டுமே இல்லை . எதோ விபத்துல இழந்துட்ட போல இருக்கு! அது பாட்டுக்கு ஒரு மரத்தடியில உட்கார்ந்திருக்கு! அதை இவன் பார்த்தான் அப்போ இவன் மனசுல ஒரு சந்தேகம் " இந்த நரிக்கு ரெண்டு காலும் இல்லை ... அப்படி இருக்கறப்போ இது எப்படி வேட்டையாடி தன்னுடைய பசியை போக்கி கொள்ள முடியும் ?" அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சான். இப்படி யோசிச்சுகிட்டு இருக்கும் போதே அந்த பக்கமா ஒரு புலி வந்தது அதை பார்த்த உடனே ஓடி போய் ஒரு மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சி கிட்டான் , ஒளிஞ்சிகிட்டு என்ன நடக்குதுன்னு கவனிக்க ஆரம்பிச்சான். அந்த புலி என்ன பண்ணிச்சுன்னா ... ஒரு பெரிய மானை அடிச்சி இழுத்துகிட்டு வ...

பூதத்தின் காதல்- அடல்ட் ஸ்டோரி

Image
எச்சரிக்கை  1 : எப்பவோ   ஈமெயிலில்   வந்திறங்கிய   கதை   இது .  முன்னமே   நீங்க   வாசித்திருக்கக்   கூடும் .  இருந்தாலும்   என்ன ,  வந்தது   வந்தீர்கள்   படித்து   வையுங்கள் ! எச்சரிக்கை   2 :  இது   அடல்ட்   கதை .  அதனால்   அடல்ட்   ஆனவர்களை   விடவும்   அடல்ட்   ஆகவிருப்பவர்கள்   முண்டியடித்துக்   கொண்டு   வந்து படிக்கலாம் .  தனியறிவு   கூடும் . அ வர்கள்   இளம்   தம்பதியினர் .  கணவன்   மனைவிக்கு   கோல்ஃப்   விளையாடக்   கற்றுக்   கொடுத்துக்கொண்டிருக்கிறான் .  மனைவி   எக்குத்தப்பாய்   ஓங்கி   விட்ட   ஒரு   அடியில்   பந்து   பத்து   ஃபர்லாங்   பறந்து   காணாமற்   போகிறது .  பந்தைத்   தேடி   இருவரும்   அந்த   நீண்ட   கோல்ப்   மைதானத்தில்   நெடும்பயணம்   புறப்படுகிறார்கள் ,  க...