Posts

Showing posts with the label THRILLER

சதுரங்க வேட்டை - உலக சினிமா

Image
அன்பர்களுக்கு வணக்கம், உங்களுக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து கொஞ்சம் தெளிவா சொல்லனும்னா உங்க கையில பணம் வர ஆரம்பிச்சதுக்கு அப்புறம் யார்கிட்டயாவது பணத்தை ஏமாந்து இருக்கிங்களா? கடன் கொடுத்து ஏமாந்ததை கேட்கலைங்க, குறுக்கு வழில சம்பாதிக்க ஆசைப்பட்டு ஏமாந்து இருக்கிங்களா? 1 வச்சா 2 2 வச்சா 4 5 வச்சா 10 10 வச்சா 20 னு கூவி கூவி கூப்பிடற லங்கர் கட்டை உருட்டறவன்கிட்ட பணத்தை விட்டு இருக்கிங்களா?  வெறும் 2 பேரை நமக்கு கீழ் சேர்த்து விட்டா போதும், அதுக்கு அப்புறம் வேலைக்கே போகாம பணம் சம்பாதிக்கலாம்னு சொல்ற, உங்களை சேர சொல்லி டார்ச்சர் பண்றவங்களை பார்த்துருக்கிங்களா? உங்களுக்கு தெரிஞ்சவங்க யாராவது மன்னுளி பாம்பு வியாபாரம் பண்ணி கோடி கோடியா சம்பாதிக்கலாம்னு பைத்தியகாரனா அலைஞ்சத பார்த்துருக்கிங்களா? கோபுர கலசத்துல இடி இறங்குனா அது இரிடியமா மாறிடும், அப்படி மாறுன கலசத்தை கோடி கணக்குல வாங்க ஆள் இருக்குனு நம்பற ஆளா நீங்க? உங்களோட, நம்மளோட முட்டாள்தனத்தை வெளிப்படையா காட்டற படம் தான் இந்த "சதுரங்க வேட்டை" "ஒருத்தனை ஏமாத்தனும்னா அவன்கிட்ட கருனைய எதிர்...

யாமிருக்க பயமே - Tamil Horror Comedy Film

Image
அன்பர்களுக்கு வணக்கம், தமிழில் முதல் முறையாக வந்திருக்கும் Horror-Comedy படம், தமிழ் சினிமாவில் புதிய வகை படங்களை ரசிப்பவர்களுக்கு கண்டிப்பாக இப்படம் பிடிக்கும். படத்திற்குள் செல்வோம்.    கிருஷ்னா, ரூபா மஞ்சரி காதலர்கள் என்று சொல்லிக் கொண்டு திரிபவர்கள், ஊர் முழுக்க ஏமாற்றிவிட்டு தன் தந்தையிடம் இருந்து வந்திருக்கும் பாரம்பரிய சொத்தை பார்க்க கிளம்பி சென்றவர்களுக்கு பாழடைந்த பங்களா பலத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. ஆனால் ஊர் முழுக்க கடன்காரர்கள் தொல்லை, தப்பிக்க வேறு வழியில்லாமல் பெரிதாக ஏமாற்றி கிடைக்கும் பணத்தை வைத்து அந்த பங்களாவை சீராக்குகிறார்கள். இதற்கு உதவியாய் கருனாகரன் (அருமை நாயகம்-சூது கவ்வும்), அவனது தங்கை ஓவியா, எல்லாரும் சேர்ந்து குளுகுளு ரெஸ்டாரண்ட்டினை ஆரம்பிக்கிறார்கள், அதன்பின் தான் திகில் ஆரம்பிக்கிறது, அங்கே தங்க வருகின்ற ஒவ்வொருவராய் இறக்கிறார்கள். எதற்காக இறக்கிறார்கள் என்று எல்லோருக்கும் குழப்பம், எல்லோரும் சரத்(கருனாகரன்) தினை சந்தேகிக்கின்றனர், அதற்கேற்றார் போல் எல்லோரும் சரத்தை பார்த்தவுடன் சொல்வது "உன்னை எங்கேயோ பார்த்த மாதிரி இரு...