அன்பர்களுக்கு வணக்கம், என்னோட முதல் புலம்பலை படிக்காதவங்க தயவு செஞ்சு படிச்சுருங்க. இல்லைனா ஒரு கன்டினுயுட்டி மிஸ் ஆகும். இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பண்ணிக்கலாம்- கடுப்பு பாகம் 1 படிச்சுட்டிங்கனா நான் எதை பத்தி பேசறேங்கறது உங்களுக்கு நல்லா புரியும். என்னோட புலம்பல் ஒட்டு மொத்த பெண்கள் சமுதாயத்தை குறிப்பிடறதா தப்பா நினைக்க வேண்டாம். என் வாழ்க்கைல தினசரி எதிர்படற, பார்க்கும் போதுலாம் ஒரு 2 செகன்ட் கண்ணை மூடி "முடியலைடா சாமி"னு சொல்ல வைக்கற சில அல்டாப் ஆண்ட்டி & ஃபிகர்களை மட்டும்தான் நான் திட்டி தீர்க்கனும்னு நினைக்கறேன். உங்ககிட்ட ஒரு விசயம் சொல்றங்க, நீங்களும் முயற்சி பண்ணி பாருங்க, எப்பவாவது ஏன்னே தெரியாமா ரொம்ப சலிப்பா, அலுப்பா எந்த வேலையும் செய்யறதுக்கு மனசே வராம இருக்கும் போது ரொம்ப நாளா உங்களை வெறுப்பேத்தறவங்களை, யார்கிட்டயாவது திட்டி புலம்பி பாருங்க அப்படி ஒரு எனர்ஜி வரும், உற்சாகம் பிறக்கும், நான் சொல்லும் போது பைத்தியகாரத்தனமா இருக்கும், ட்ரை பன்னிங்கனா கண்டிப்பா என்னை குருவா ஏத்துகிட்டு ஆசிரமம் ஆரம்பிக்கலாமானு கேட்பிங்க. சரி, நாம புலம்பல...
நல்ல வெயில். ஒவ்வொரு வருடமும் இதுவரை இப்படியான வெயிலைப் பார்த்ததில்லை என்ற வசனத்தை எதிர்கொள்வது வழக்கமாகி விட்டது. காரணம் இதோ கண்ணெதிரேயே தெரிகிறது. இந்தச் சாலையில் முன்பெல்லாம் இருபக்கமும் இருந்த அடர்த்தியான புளிய மரங்கள் நினைவில் கூட மங்கலாகத்தான் தெரிகின்றன. சாலை விரிவாக்கம் என்ற வசதிக்காக எவ்வளவு பெரிய விலையைக் கொடுத்திருக்கிறோம்? ஐம்பது கிலோமீட்டருக்கு மூன்று முறை ஜூஸ் குடிக்க வண்டியை நிறுத்துமளவு வெக்கை. காலை 10 மணிக்கெல்லாம் பயிற்சி நிலையத்திற்கு வரச் சொல்லித்தான் ஆர்டர். ஆனால் பூத் ஆர்டர் வருவதற்கு எப்படியும் 12 மணிக்கு மேலாகும் என்பதால் எல்லோரும் 1 மணிவாக்கில்தான் வருவார்கள். எங்கள் குழுவில் எல்லோரும் ஆண்கள். வழக்கமாகத் தேர்தல் பணிக்கெனக் குழுக்களைப் பிரிக்கும்பொழுது ஆண்களும் பெண்களும் இருப்பது போலத்தான் பிரிப்பார்கள். ஏனென்றால் பெண்களால் அனைத்து உடல் உழைப்பு வேலைகளையும் செய்ய முடியாது. மேலும் பூத் ஏஜெண்டுகளைச் சமாளிப்பது அத்தனை எளிதல்ல. முழுக்கப் பெண்களென்றால் எளிதாக மிரட்டி தேர்தலை அவர்கள் விருப்பத்திற்கேற்றவாறு நடத்தத் துவங்கி விடுவார்கள். என்னுடன் கடந்த உள்ளாட்சித் தேர்தலு...
தடித்த புத்தகங்களுக்கு எப்போதும் ஒருவித எதிர்பார்ப்பு இருக்கிறது. அவை நம்மை யதார்த்த வாழ்விலிருந்து கடந்து ஒரு வெவ்வேறு பரிணாமத்திற்குள் அழைத்துச் செல்கின்றன. அந்த அனுபவம் சும்மா ஒரு ஓய்வு அல்ல – முழுமையான விடுதலை. ஒரு எழுத்தாளன், "இனி சொல்ல ஒன்றுமில்லை" என்ற வரைக்கும் சொல்லத் துணியும் போது, அந்தச் சொற்களுக்குள் நாம் நம்மையே மறந்துவிடுகிறோம்.இனி சொல்ல ஒன்றுமில்லை எனும்வரையும் சொல்லித் தீர்ப்பதற்கான சுதந்திரம் பெற்ற ஜீவிகளவை என்பதும்தான். முன்மாதிரிகள் ஏதுமற்ற நாவலென்பதாலேயே சலத்தின் மீது எனக்கு ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு இருந்தது. பற்றாக்குறைக்கு பள்ளி மாணவன் போல குறிப்பெடுத்து படித்துக் கொண்டிருந்த பாராவைக் காண நேர்கையில் ஆர்வம் அதிகரித்து விட்டது. வால்கா முதல் கங்கை வரையில் மட்டுமே இக்காலகட்டத்தை போகிறபோக்கில் கண்ட நினைவு. மற்றபடி நவீன இலக்கியவெளியில் காணாத கதைக்களம். முதலில் வேதங்கள் நான்கில் மற்றவைக்கும் அதர்வணத்திற்குமான வேறுபாட்டை புரிந்துக் கொள்ள வேண்டும். இந்த உதாரணம் ஓரளவு பொருந்துமென்று நினைக்கிறேன். காலகாலமாக மன்னர்களுக்கும...
Comments
Post a Comment