Posts

Showing posts from May, 2024

மைத்திருவிழா

நல்ல வெயில். ஒவ்வொரு வருடமும் இதுவரை இப்படியான வெயிலைப் பார்த்ததில்லை என்ற வசனத்தை எதிர்கொள்வது வழக்கமாகி விட்டது. காரணம் இதோ கண்ணெதிரேயே தெரிகிறது. இந்தச் சாலையில் முன்பெல்லாம் இருபக்கமும் இருந்த அடர்த்தியான புளிய மரங்கள் நினைவில் கூட மங்கலாகத்தான் தெரிகின்றன. சாலை விரிவாக்கம் என்ற வசதிக்காக எவ்வளவு பெரிய விலையைக் கொடுத்திருக்கிறோம்? ஐம்பது கிலோமீட்டருக்கு மூன்று முறை ஜூஸ் குடிக்க வண்டியை நிறுத்துமளவு வெக்கை. காலை 10 மணிக்கெல்லாம் பயிற்சி நிலையத்திற்கு வரச் சொல்லித்தான் ஆர்டர். ஆனால் பூத் ஆர்டர் வருவதற்கு எப்படியும் 12 மணிக்கு மேலாகும் என்பதால் எல்லோரும் 1 மணிவாக்கில்தான் வருவார்கள். எங்கள் குழுவில் எல்லோரும் ஆண்கள். வழக்கமாகத் தேர்தல் பணிக்கெனக் குழுக்களைப் பிரிக்கும்பொழுது ஆண்களும் பெண்களும் இருப்பது போலத்தான் பிரிப்பார்கள். ஏனென்றால் பெண்களால் அனைத்து உடல் உழைப்பு வேலைகளையும் செய்ய முடியாது. மேலும் பூத் ஏஜெண்டுகளைச் சமாளிப்பது அத்தனை எளிதல்ல. முழுக்கப் பெண்களென்றால் எளிதாக மிரட்டி தேர்தலை அவர்கள் விருப்பத்திற்கேற்றவாறு நடத்தத் துவங்கி விடுவார்கள். என்னுடன் கடந்த உள்ளாட்சித் தேர்தலு