Posts

பெருந்திணை - படலம் - 4

Image
  சைந்தவி கண்ணாடி எதிரே நின்று கொண்டிருந்தாள். மேலிருந்து கீழே தன்னை முழுமையாகப் பார்த்தாள். சராசரியான பெண்களை விட கொஞ்சம் கூடுதல் உயரம். அதுவே இவளை மற்ற பெண்களிடமிருந்து பிரித்து காட்டி விடும். அவ்வுயரத்திற்கேற்ற விகிதத்தில் அவயங்கள். கூடவும் இல்லை. குறையவும் இல்லை. மடிப்பில்லாத இடுப்பு. இளமைக்கு இதுதான் முதல் சான்று.  கார்த்திக் வரவில்லை என்று சொன்ன பின் தனியாக தயாரானாள். சில விசயங்களுக்கு தனிமை போதை. அதில் குறிப்பிட்டது தன்னை தயார் செய்துக் கொள்வது. இன்னொருவர் முன்பு உடையணிந்து அலங்காரம் செய்வதெல்லாம் அத்தனை ஆசுவாசமானதாக இருக்காது. அதிலும் சைந்தவிக்கு தனிமை. இப்படி நிர்வாணமாக ஓரிரு கணங்கள் தன்னை வெளிச்சத்தில் கண்டுணர்வது எப்போதாவது வாய்ப்பதுதான். அனைவரும் வரவேற்பறையில். இவள் படுக்கையறையில் தயாரானாள். தயாராகும் போதே அசோக்கின் நினைவு வந்தது. அவன் வருவான் என்று அனிதா சொன்னாள். அன்றைய தினத்திற்கு பிறகு அவன் தன்னை பார்வையால் தீண்டவில்லை என்பது நல்லதாகப் பட்டாலும் அதற்குள்ளாக முடிந்து விடும் என்பதில் அவளுக்கே நம்பிக்கை வரவில்லை. இத்தனை அழகுடன் எத்தனை பேரை கடந்து வந்திருப்பாள்? அல...

பெருந்திணை - படலம் - 3

Image
  டைப் செய்த கமெண்டை போஸ்ட் செய்யாமலே டெலிட் செய்தான் அசோக். போனை லாக் செய்து பாக்கெட்டில் போட்டவன் மீண்டும் பத்து வினாடிகளுக்கு பிறகு எடுத்து சைந்தவி படத்தைப் பார்த்தான். முந்தைய படங்களை ஒவ்வொரு படமாக ஓட்டிப் பார்த்தான். சில படங்கள் எடுத்த தினத்தில் அவள் கூடவே இருந்திருக்கிறான். பெரும்பாலும் வெளியே சுற்றுகையில் அதை எங்கே என்று திட்டமிடுவது அனிதாவும் சைந்தவியுமாக சேர்ந்தே திட்டமிடுவார்கள். அத்தினங்களில் அவ்வபோது அசோக்கும் உடனிருப்பது உண்டு. அப்போதெல்லாம் அசோக்கிற்கு சைந்தவி மீது பெரிதாக எந்த ஈர்ப்புமில்லை. அப்போதும் அழகுதான். யார்தான் அழகில்லை? இப்படி சொல்வதை விட யாருக்குத்தான் தங்களை அழகாக காட்டிக் கொள்ள தெரியாமலிருக்கிறது என்று கேட்பது பொருத்தமாக இருக்கும். அது ஒரு கலை. உடலை வாகாக பராமரிக்க வேண்டும். அவ்வபோது அழகு நிலையங்களில் பொருத்தமாக பட்டைத் தீட்டிக் கொள்ள வேண்டும். முக்கியமாக அதை வீட்டிலும் வாழ்க்கை முறையாய் மாற்றியிருக்க வேண்டும். அடுத்து நேர்த்தியான உடைகள். அதில் தவறில்லை. எப்போதும் தங்களை அழகாக வைத்துக் கொள்பவர்கள் மற்றவர்களின் மகிழ்ச்சிக்கு காரணமாகிறார்கள்தானே?  அசோ...

பெருந்திணை - படலம் - 2

Image
  சைந்தவி வீட்டிற்குள் நுழைந்தாள். மகனை மாமியார் கிளப்பி அனுப்பியிருப்பார். காலை கிளம்பும் போது ஒருமுறை குளித்திருந்தாலும் மீண்டுமொரு முறை குளிக்க சென்றாள். மனம் தானாக அசோக்கை நினைத்தது. என்னவாயிற்று இவனுக்கு? ஏதோ புதிதாய் பார்க்கிறான், புதிய நபராய் தெரிகிறான், நடந்துக் கொள்கிறான். 5 வருடங்களுக்கு மேல் அவனுடன் பழக்கமுண்டு. நெருங்கி பழகவில்லை என்றாலும் நாகரீகமான நபர்தான். அனிதாவும் இதுவரை அதிகம் தவறாக ஏதும் சொன்னதில்லை. சொன்ன குறைகளும் பொதுவாக ஆண்களிடம் குறிப்பாக கணவர்களிடம் பெண்கள் காண்பவைதான். இல்லை, நானாக தவறாக நினைக்கிறேனா? ம்ஹூம், இல்லை, அவன் சரியில்லை. ஆனால் எதற்காக என்னை? நான் அவன் மனைவியின் தோழி அல்லவா? எப்படி பயமில்லாமல்? தயக்கமில்லாமல்? அனிதாவிற்கு தெரிந்தால் என்னவாகும்? என்னை தவறாக நினைப்பாளோ? நான்தான் இதை ஆரம்பித்தேன் என்றோ, என்னால்தான் இப்படி என்றோ நினைப்பாளோ? தான் ஏதாவது தவறு செய்தோமா? ஏதாவது உரிமையாக அத்து மீறி பேசினோமா? யோசிக்க யோசிக்க சைந்தவிக்கு அசோக் மேல ஆத்திரமாக வந்தது. “நாய்….” என்று மனதிற்குள் திட்டத் துவங்கியவள் அவன் தவறு செய்கிறான் என்று உறுதியாகத் தெரியாமல்...

பெருந்திணை - படலம் 1

Image
18+ வயதின் இளையோர், ஒழுக்கத்தை உயிரினும் ஓம்புவோர், இலக்கிய வரையரையாளர், முக்கியமாய் காமத்தை சபிப்போர் இத்தொடரினை படிப்பதை தவிர்க்கவும். #பெருந்திணை படலம் - 1 அனிதாவிற்கு தூக்கம் கலைந்து பொழுது பக்கத்தில் ஆளில்லை. மெலிதான பதற்றத்தோடு அரைக்கண்ணிலேயே தேடவும் அசோக் படுக்கையில்தான் அமர்ந்திருந்தான். கொஞ்சம் தள்ளி கைகளால் முகத்தைத் தாங்கியபடி கண்களை மூடியிருந்தான். “ஓய்” “ம்” “என்ன இப்படி உக்காந்துருக்க?” “தூக்கம் போச்சு, எழுந்து போகவும் மனசில்லை” என்றான் கொட்டாவி விட்டவாறே… அவன் வெற்று முதுகில் கன்னம் வைத்துக் கொண்டாள். பின் அப்படியே துழாவி சதையிருந்த இடமொன்றினை மென்மையாகக் கடித்தாள்.  “ம்ம்” என்றான். “வலிக்கலை?”  “வலிக்குது” “வெளிப்படையா கத்தக்கூட மாட்டியா?” என்றவாறு அழுத்தமாக கடித்தாள். இம்முறை நெளிந்தவன், அவளைப் பிடித்து தள்ளி, மேலே ஏறிப் படுத்து, கன்னங்களைக் கடித்தான். அவள் பலமாகக் கத்தினாள். “நீ கத்தறதை கேட்டா காலைக்காட்சின்னு நினைச்சுப்பாங்கடி” என்றான். சிரமப்பட்டு அவனை புரட்டித் தள்ளினாள். “அதெல்லாம் இன்னைக்கு கிடையாது, எனக்கு இன்னைக்கு நேரமா போகனும்” என்றவாறு ...

கிருமி – விமர்சனம்

தமிழ்நாட்டில் மின்வெட்டு புயலாய் வீசிக்கொண்டிருந்த காலகட்டம். இரவு நேர மின்வெட்டுகளில் பல வீடுகளில் திருடு போனது. ஊர்க்காவல்படை திரட்டப்பட்டது. அதாவது ஊரில் உள்ள இளைஞர்களை கொண்டு அமைக்கப்படும் குழு. இரவில் மின்வெட்டு நிகழும் சமயங்களில் இப்படை ரோந்தில் ஈடுபடும். அப்படையில் இறங்கி வேலைப் பார்த்தது முழுக்க முழுக்க  என் நண்பன் தான். கொஞ்சம் கொஞ்சமாய் ஊர் காவல் நிலையத்தில் அவனது போக்குவரத்து அதிகரிக்க துவங்கியது. பல வேலைகளை அவர்களுக்காக செய்து கொடுத்து கொண்டிருந்தான். சிறுவயதில் இருந்தே எல்லா மரங்களிலும் விரைவாய் ஏறி இறங்குவான். கட்டான உடலமைப்பும் கொண்டவன் . திடிரென ஒரு நாள் கான்ஸ்டபிள் ஆகிவிட்டான். அதற்கு காவல்நிலையம் பல வழிகளில் உதவியாய் இருந்ததாய் கெள்விப்பட்டேன். வேறு வேலை கிடைக்காததால் காவல்நிலையத்தில் உதவியாளாய் சேரும் நாயகனை சுற்றி வித்தியாசமான கதைக்களம் அமைத்து விறுவிறுப்பான திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். மேலும் படிக்க... http://www.thoovaanam.com/?p=987

கலாய்ச்சுட்டாராமாம்...

Image
ஒரு பெரிய மனிதர் அல்லது மற்றவர்கள் அனைவரும் பாராட்டுகிற ஒருவரை சடாரென கவிழ்த்து விடுவது பற்றி பேசி கொண்டிருக்கையில் எனக்கு 3 காட்சிகள் நினைவுக்கு வந்தது... முதல் காட்சி நம் கவுண்டர் நடித்த தங்கம் படத்தில் இருந்து, அந்த படத்தில் அவர் ஒரு வேட்டைக்காரனாக பேட்டி அளிக்கும் பொழுது சொல்லுவார்... தான் வேட்டைக்கு செல்லும் பொழுது திடிரென சிங்கம் தன்னை தாக்க வந்ததாகவும் அவர் உடனே இடைமறித்து "இவ்ளோ பெரிய காட்டுக்கு ராஜாவா இருக்கையே, ஒரு ஜட்டி கூட போடாம சுத்தறயே, உனக்கு வெட்கமா இல்லை?" என்றதும் சிங்கம் அவமானத்தில் திரும்பி சென்று ஒரு மரத்தில் ஒளிந்து கொண்டதாக சொல்வார். இந்த காட்சியை முதலில் பார்க்கையில் பெரிதாய் ஈர்க்கவில்லை, ஆனால் நண்பன் ஒருவன் அடிக்கடி யாரையாவது கிண்டலடிக்க இதை பயன்படுத்தும் தொனியை ரசிக்க துவங்கினேன்...   இரண்டாவது ராமாயணத்தில் வரும் காட்சி, சீதை மிக அழகி, உலக அழகி, அவளை போல் வேறொரு பெண் எங்கும் கிடைக்க மாட்டால் என்ற பின்னர்தான் மாற்றான் மனைவி என தெரிந்தும் ராவணன் அவளை சிறைப்பிடித்தான் என்ற பேச்சு உலமெல்லாம் பரவ, சீதையை சிறை மீட்டு கிஷ்கிந்தைக்கு அழைத்து வந்த ...

டிமாண்ட்டி காலணி விமர்சனம்

Image
http://www.thoovaanam.com/?p=922 தமிழ் சினிமாவை சந்திரமுகியில் பிடித்தது இந்த பேய்(சீசன்), கொஞ்சம் இடைவெளி விட்டு பீட்ஸா விலிருந்து வருடத்திக்கு 4 பேய் படமாவது வந்து கொண்டே இருக்கிறது, அதை வரிசை படுத்தி நான் போட்ட ட்விட்தான் என்னுடையதில் அதிகமாய் பகிரபட்டது. பேயை பார்த்து பயந்தா – பீட்ஸா, காஞ்சனா சிரிப்பு வந்தா – யாமிருக்க பயமே மூடு வந்தா – அரண்மனை அழுகை வந்தா – பிசாசு பயமுறுத்தற பேய் பட வரிசைல ‘டிமாண்ட்டி காலணி’ படத்தையும் சேர்த்துக்கலாம், நான்கு அறைத்தோழர்கள், ஒரு எலக்டரீசியன், ஒரு இயக்குனராக முயலும் இளைஞன், போட்டோஷாப் டிசைனர், நான்காவதாக நாயகன் அருள்நிதியின் தொழிலை படத்தில் நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். முதல் 25 நிமிடங்கள் வரை இது ஒரு பேய் படம் என்று சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள். சராசரியாக போகும் கதையில் ஒரு நாளிரவு விளையாட்டாக பேய் வீடான டிமாண்டி காலணிக்கு செல்கிறார்கள், நால்வரில் ஒருவரான எலக்ட்ரீசியன் மிகவும் பயந்த சுபாவம் உடையவர், அவரை மற்றவர்கள் மறைந்திருந்து பயமுறுத்துகிறார்கள், அப்போது அங்கங்கே சில அமானுஷ்யங்கள் தென்படுகின்றன. அங்கே ஆரம்பிக்கும் ...

மாதொருபாகன்,ஆலவாயன் & அர்த்தநாரி – பெருமாள் முருகன்

நடந்த கலவரங்களில் தமிழ்நாடு முழுக்க இவரை அறியும். கூகுளில் எழுத்தாளர் என அடித்தால் இவர் பெயர் உடன் வரும் அளவுக்கு கொஞ்ச நாள் தலைப்பு செய்தியாக இருந்தார். நடந்த பிரச்சனைகளை பற்றியோ, எது சரி, தவறு என்பது பற்றியோ பேச போவதில்லை. இப்பதிவின் நோக்கம் “மாதொருபாகன்- ஆலவாயன் – அர்த்தநாரி” புத்தகங்களை பற்றியது. பலர் இப்புத்தகத்தை அறிமுகப்படுத்தி இருந்த போதும் பெருமாள் முருகனை நோக்கி பல சங்கங்கள் கல்லெறிய துவங்கிய போதுதான் மாதொருபாகனை வாங்க நெர்ந்தது. வாங்கும் பொழுது அதன் தொடர்ச்சியாக இரண்டு புத்தகங்களின் வெளியீடும் நடந்தது, எனவே அந்த புத்தகங்களையும் வாங்கினேன். நீங்கள் வக்கிரம் என நினைத்தால் வக்கிரமாகவும் எதார்த்தமாக நினைத்தால் எதார்த்தமாகவும் தெரியும் பல விஷயங்களை எழுத்தாளர் தைரியமாய் எழுதி இருக்கிறார். எனக்கு மிகவும் பிடித்த பாத்திரம் என்றால் காளியின் சித்தப்பா நல்லுப்பிள்ளை தான். ஊரே குடுமி வைத்திருக்கும் பொழுது கிராப் வெட்டிக் கொள்வதில் துவங்கி, சொத்துக்களை பிடுங்கி கொள்ள பார்க்கும் தம்பிகளை பஞ்சாயத்தில் சமாளிப்பதிலும், அதே சொத்துக்காக கடைசி தம்பி தனது மனைவியை கூட்டிக் கொட...