தனித்திரு - 5
முந்தைய பாகங்கள் #1 / #2 / #3 / #4 / #5 / #6 / #7 / #8 / #9 -------------------------------------------------------------------------------------------------------------- இன்று பேருந்தில் இருந்து இறங்கியதும் திருவை திரும்பி கூட பார்க்காமல் வேகமாக வீடு நோக்கி வந்தேன். அக்கா வந்ததும் நடந்தது அனைத்தும் கூறினேன். அவள் கூறியது “உன் கூட பழகற யாருக்கும் கொஞ்சம் கூட பக்குவம் இல்லை. ஒரு பையனும் பொண்ணும் பேசுனா கொஞ்ச நாள்-ல காதலிச்சுடுவாங்கனு சினிமாவ பார்த்து நம்பிகிட்டு இருக்காங்க. அவங்க தனியா ஒரு பையன் கூட பேச ஆரம்பிச்சா கொஞ்ச நாள்-ல காதலிச்சுடுவாங்க. ஆனா இனிமேல் அவங்ககிட்ட மத்த பசங்களை குறிப்பிட்டு பேசாத. இந்த வயசுல நாம எதை பத்தி பேசுனாலும் அது காதலுக்கு அறிகுறினு சொல்லி நம்மளை அதுக்குள்ள தள்ளிவிடத்தான் எல்லாரும் பார்ப்பாங்க. அதே மாதிரி அந்த திரு நல்லவனா, கெட்டவனானு தெரியாம பழகறது தப்பு, அதுலயும் அவனை பத்தி தெரிஞ்ச நண்பன்னு யாரும் இல்லாதப்ப அவனை தவிர்க்கறதுதான் நல்லதுன்னு எனக்கு படுது” அக்காவிடம் பேசியபின் யோசித்து பார்த்ததில் எனக்கும் அதுதான் சரியென பட்...