ஏண்டா டகால்டி-CTS SEN

அன்பர்களுக்கு வணக்கம், கல்லூரி நண்பர்கள் பற்றி எழுதி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது, இன்று நண்பனின் பிறந்தநாள், அவனை பற்றி பேச மனம் விழைகிறது, அவனுக்கு அருமையான தமிழ் பெயர் "செந்தமிழ்", பொதுவாக ஒவ்வொரு மனிதனையும் பிடித்தவர்கள் இருப்பது போல் பிடிக்காதவர்களும் இருப்பார்கள், எனக்கு தெரிந்து என்னுடன் கல்லூரியில் படித்த அனைவருக்கும் இவனை பிடிக்கும்.செந்தமிழை நினைத்தாலே மனம் குதுகலமடையும், ஒல்லியான உருவம், சிரித்த களையான முகம், அப்பப்போ தாடி வைப்பாறு, முக்கியமானது இவனுடைய உடல்மொழி, இரண்டு தோள்பட்டையையும் தூக்கி ஆட்டி "ஏண்டா டாய், டகால்டி" என்றால் அதை நினைத்து நான் இரண்டு நாள் சிரித்து கொண்டிருப்பேன். அவனது தந்தை மத்திய வங்கி வேலையில் இருந்ததால், அவனது குடும்பம் வட இந்தியாவில் இருக்க, இவன் கல்லூரி விடுதியில் தங்கி இருந்தான். இவன் பெயர் முதலாம் ஆண்டு எல்லாரிடமும் பிரபலமானதே சுவாரசியமான முறையில்தான், முதல் செமஸ்டர் தேர்வு எழுதி விட்டு மெஸ்ஸுக்கு சாப்பிட வந்த எல்லோரிடமும் "மச்சி, நீ பாஸ் ஆகிருவியா? எனக்கு போயிரும்னு பயமா இருக்குடா" என ரொம்ப அப்பாவாக முகத்த...